இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 186

ஆனால் பதிலோ “இருந்துட்டு போங்க.. எனக்கென்ன!” என சொல்லிவிட்டு அவன் ஏமாந்த முகம் பார்த்து அடக்க முடியாமல் அவள் வாய் சிரித்து விட்டது..

சிரித்த முகத்தோட ஆவலா காத்துட்டு இருந்த கிஷோர் முகம் சப்புன்னு சாணி அறைஞ்ச மாதிரி ஆகி போச்சு.. அவளுக்கு இவன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்கவும் முடியவில்லை..

அவளின் இடைவிடாத சிரிப்பு சுத்தி இருப்பவர்களின் கவனத்தை இவர்களின் மேல் திசை திருப்ப.. அவள் சிரிப்பை கட்டுப்படுத்தி அமைதியாக அவன் முகத்தை பார்த்து “சாரி” என ஒரு கொஞ்சும் ராகத்தோடு சொன்னாள்..

என்னதான் தன்னை பார்த்து நக்கலாக சிரித்தாலும் அவளுடைய கொஞ்சும் குரல் அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.. விடாப்பிடியாக அவன் “சாரி லாம் எதுக்குங்க.. உங்க பேரு என்னன்னு மட்டும் சொல்லுங்க ஜெனரல் நாலேட்ஜ் காக”

“கொஞ்சம் சிரிச்சா போதுமே!! அப்டியே வந்துருவீங்களே!! கொஞ்சம் உஷாரா இல்லைனா அவளோ தான்..” என கூறியவள் “சரி வாட்ச் தான் சரி பண்ணியாச்சுல!! இன்னும் ஏன் நிக்குறீங்க.. முன்னாடி போய் பணம் கட்டுங்க. போங்க” என்றாள்.

“ஐயோ உடனே எப்படி போறது? போனா அடுத்து இவள எப்போ பாக்குறது? அட்லீஸ்ட் ஒரு போன் நம்பர் ஆச்சும் அவள் கிட்ட இருந்து வாங்குனா நல்லா இருக்கும்” என யோசித்த கிஷோர் “அட என்னங்க தொறத்திட்டே இருக்குறீங்க! இதே வாட்ச் க்கு ஸ்ட்ராப் மாத்தி குடுங்க. இந்தாங்க” என அது தன்னோட நண்பன் ராகுல் வாட்ச் என்பதையும் அவனுடன் விளையாடினால் வரும் பின் விளைவுகளையும் மறந்து கூறினான்.

வாட்சையும் அவன் முகத்தையும் திரும்ப திரும்ப பார்த்தவள் “என்ன விலையாடறீங்களா!!! 150 ரூபா செல்லுக்கே அவ்ளோ பேசுனீங்க.. இது 1500 ரூபா ஸ்ட்ராப் இப்போ மாத்த சொல்றீங்க? அதுவும் இந்த ஸ்ட்ராப் நல்லா தானே இருக்கு..”

“என்னங்க பேய் கதை சொல்றீங்க.. ஸ்ட்ராப் 1500 ரூபாயா.. விட்டா இந்த கடை டிரம்ப் ஓட மச்சான் கடைன்னு சொல்வீங்க போல” என நக்கலாக சிரித்து கொண்டே சொன்னான் கிஷோர்.

“ஹலோ இது Casio G Shock இந்த வாட்ச் எப்டியும் பத்தாயிரம் ரூபா க்கு மேல.. அதனால இதோட ஸ்ட்ராப் யும் காஸ்ட்லி தான்..” என கூறியவள் முகத்தில் ஒரு சின்ன ஆச்சரியத்துடன் “ஆமா இது நிஜமாவே உங்க வாட்ச் தானா?” என இடுப்பில் கை வைத்து வாட்சை ஆட்டி கொண்டே சொன்ன கொள்ளை கொள்ளும் அழகை ஆயிரம் கண்கள் கொண்டு ரசிக்கலாம்.