இடை அழகி மேடம் சங்கீதா 9 96

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்தவாறு யோசித்தாள். என்னதான் யோசித்தாலும், முயற்சி செய்தாலும் அவள் மனதில் இருந்தும் கண்களில் இருந்தும் ராகவை நீக்குவதேன்பது அவளாள் சத்தியமாக முடியாத காரியம் என்று அவள் மனது தெளிவாக கூறியது. “என்னாச்சு சங்கீதா…” – என்று ராகவ் கேட்க, தனது டைரியில் பேனாவால் எழுத தொடங்கினாள். ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்து ஏதோ ஒன்றை எழுதினாள் ராகவ் அவள் எழுதும் வரைக் காத்திருந்தான். சங்கீதா எழுதி முடித்த கடிதத்தை டைரியில் இருந்து கிழித்து மடித்து ராகவின் சட்டை பாக்கெட் உள்ளே வைத்தாள் – அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மௌனமான சிரிப்பில் கண்களால் ஆயிரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கடிதத்துக்கு பதில் வாயில இருந்து வரும்னு பார்த்தேன், கடிதத்துலையே வருதே? – என்று சொல்லி சிரித்தான் ராகவ். சரி, நான் எழுதின கடிதத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே? – என்று ராகவ் கேட்க சங்கீதா அந்த கடிதத்தை அருகில் உள்ள தனது handbag ல் இருந்து எடுத்து பிரித்து அவன் எதிரில் அவன் எழுதிய வார்த்தைகள் மீது ஒரு முத்தம் குடுத்து அவனை ஒரு நொடி மட்டுமே நேரில் பார்த்து மேற்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் கீழே பார்த்து சிரித்தாள்.

ராகவால் இதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றான் இப்போது TV யில் ஒரு (Click)காட்சி ஓடிக்கொண்டிருந்தது, அந்த காட்சியில் வரும் அழகான முதிர்ச்சியான மங்கை ஒரு வாலிபனின் திறமையைக் கண்டு வியந்து பாரட்டுகிறாள் -அமைதியாய் இருந்த இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து மென்மையாக சத்தம் இன்றி சிரித்தார்கள். “பாராட்டு வெறும் கடிதத்துக்கு தானா? அதை எழுதினவனுக்கு இல்லையா? – என்று ராகவ் அந்த காட்சியில் வரும் வாலிபனைப் போல கேட்க, சங்கீதா மெல்ல அருகே வந்து அவனின் தலையில் மென்மையாக ஒரு முத்தம் குடுத்தாள். அப்போது ராகவ்க்கு ஒரு நொடி உடல் முழுதும் புல்லரித்தது.நான் சொல்ல நினைச்சதெல்லாம் உன் பாக்கெட் ல இருக்குற கடிதத்துல எழுதி இருக்கேன் டா.. நான் இங்கே இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் படி ப்ளீஸ். என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது கதவின் அருகே சென்றவள் ஒரு நிமிடம் நின்று ராகவின் முகத்தைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள். ராகவும் அவனுடைய தேவதையின் சிரிப்பை தரிசித்தான். அவள் குடுத்த கடிதத்தை தனிமையில் பிரித்து உற்சாகமாய் படிக்க தொடங்கினான்..

அதில்….. என்னை முழுதாய் திருடியவனே…. உன்னைப் போல எனக்கு வர்னிச்சி எழுத வராது டா.. ஆனா மனசுல உள்ள உண்மைய சொல்லுறேன்…. வாழ்க்கையில் நான் தொலைத்த இன்பங்கள், தேடும் சந்தோஷங்கள், வேண்டிய நிம்மதி, விரும்பும் அமைதி… இவை அனைத்தும் எனக்கு உன்னிடம் இருந்துதான் கிடைக்குது. எவ்வளவோ முயற்சி பண்ணாலும் என்னதான் எனக்கு நானே விளக்கங்கள் குடுத்தாலும் என்னால் உன்னை மறக்க முடியாது. நீ சொன்ன மாதிரி உன் உணர்வுகளும் அன்பும் என் மனசை உரசுறதை நானும் நிறைய நேரங்களில் மௌனமாய் அனுபவித்திருக்கிறேன். அந்த ரகசிய சந்தோஷத்தை இன்று தான் முதலில் உனக்கு தெரியப் படுத்துகிறேன். மனசார சொல்லுறேண்டா….. உன் காதல ஏத்துக்க பெருமை படுகிறேன். Yes….. I am in Love with you with immense proud. (தமிழில்: ஆம், நானும் உன்னை காதலிக்கிறேன்… உன் காதலை ஏற்றுக் கொள்ள நான் அளவிலா பெருமை படுகிறேன்.) -இப்படிக்கு உன் சரா.. இந்த கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து hooohooo bingo yes yes yes…. ummmmaaahhhhh ummmaaahhhhh ummmaahhhhhh என்று அவளின் கடிதத்துக்கு முத்தங்கள் குடுத்து துள்ளி குதித்தான் ராகவ். இப்போது அவளிடம் இருந்து ராகவ்க்கு sms வந்தது. பார்த்தான்..
[Image: download+(1).jpg]
(beep beep) message from sangee: “படிச்சிட்டியா டா? …..” (beep beep) message from raghav: “hmm…. படிச்சேன் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல”.. (beep beep) message from sangee: “டேய் மண்டு, அதுல என்னடா உனக்கு புரியல” (beep beep) message from raghav: “அதென்னது சரா?” (beep beep) message from sangee: “சொல்ல மாட்டேன்” (beep beep) message from raghav: “தயவுசெய்து சொல்லு சங்கீ ப்ளீளீளீளீளீளீளீளீளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….” (beep beep) message from sangee: “நீயெல்லாம் எப்படிடா CEO ஆன மக்கு மக்கு….” (beep beep) message from raghav: “ஆமாம் நான் ஒரு மக்குதான் என் தேவதை தான் எனக்கு எல்லாம் சொல்லித் தரனும்…. சொல்லு….” (beep beep) message from sangee: “ச்சே என் வாயாலேயே சொல்ல வைக்கிறானே….., சங்கீதா + ராகவ் = சரா…. போதுமா…. ச்சீ.. வெட்கமா இருக்குடா, இதுக்கு மேல எதுவும் புரியலைன்னு கேட்காத என் கிட்ட….” அடுத்த மெசேஜ் எதிர் நோக்கி phoneஐ மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் sms எதுவும் வராமல் இருந்தது ராகவிடம் இருந்து.. அமைதியாய் உள்ளுக்குள் தவித்தாள் சங்கீதா (beep beep) என்று சத்தம் கேட்டவுடன் ஒரு நிமிடம் கார் சீட்டின் நுனிக்கு வந்து உடனே மெசேஜ் பார்த்தாள்.. message from raaghav: “என் தேவதை சராவுக்கு இந்த மக்கு ராகவ் குடுக்கும் இதழோடு இதழ் பதித்த ஆயிரம் முத்தங்கள்….” படித்து முடித்த பிறகு, அப்படியே கத்தி சிரிக்க வேண்டுமென்று இருந்தது சங்கீதாவுக்கு, ஆனால் காரில் செய்ய முடியாததால் அப்படியே கண்களை இறுக்கி மூடி பின்னாடி சாய்ந்து அவளது நினைவில் ராகவை கட்டி அனைத்து அவன் குடுத்த இதழ் முத்தங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. வயிற்றினில் உண்மையாகவே யாருடைய விரலும் இல்லாமல் அப்படி ஒரு கிச்சி கிச்சி உணர்வு வந்தது சங்கீதாவுக்கு. “என்னம்மா ஆச்சு ஏதாவது வயிறு பிரச்னையா soda வாங்கட்டுமா? சீட்டுல முன்னுக்கும் பின்னுக்கும் வந்து போறீங்க?” – என்று டிரைவர் தாத்தா அக்கறையாக கேட்க…. ஒரு நொடி சத்தமாகவே “ஹா ஹா ஹா” என்று சிரித்தாள். “தாத்தா….” “சொல்லுமா….” நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… கொஞ்சம் ரேடியோ போடுங்க ப்ளீஸ்… – என்று இந்த தேவதை கட்டளை இட்டதும் தாத்தா அடித்து புடித்து ரேடியோவை on செய்தார். அப்போது அதில் வந்த (Click)பாடலைக் கேட்ட போது உண்மையாகவே மனதில் ரொம்பி வழியும் சந்தோஷத்தோடு தனது பருவ உணர்வுகளை தாங்கிய வயதை பின் நோக்கி பயணித்தாள் இந்த தேவதை…. மேடம் bank போகனுமா? இல்லை வீட்டுக்கு போகனுமா? bank க்கு போங்க தாத்தா. தாத்தா ஓட்டும் மிதமான வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தாலும், ஏதோ பத்து நொடிகளில் bank வந்தது போல் இருந்தது சங்கீதாவுக்கு.

10 Comments

  1. Bro next part podunga story interesing a irukku pls

  2. Sunday na 2 paret podunga

  3. Next post please

  4. Next post please, we are waiting eagerly

  5. Why delayed. Please update

Comments are closed.