இடை அழகி மேடம் சங்கீதா 9 96

நான் வெறும் ஒரு 4 நிமிஷம் ஒரு சின்ன stage dance ஆடினேன்.. அது தப்பா?” “ஆங்… பேசுடி, பேசு, இன்னும் நல்லா பேசு, கூட கூட பேசு, பொத்திக்குட்டு கேட்ப்போம் னு தோணல இல்ல?” “எதுக்கு நான் ஒண்ணுமே சொல்லாம வாய் மூடிக்குட்டு இருக்கணும் னு எதிர்பார்க்குறீங்க? என் பக்கம் இருக்குற நியாயத்தை எடுத்து சொல்லுறேன்..” “ஒஹ்ஹ்….. நியாயம் பேசுறியா என் கிட்ட?…. நான் ஒன்னு சொன்னா அதை நீ சும்மா கேட்டுக்குட்டு அப்படியே நிக்குரதுல என்னடி தப்பு? பொண்டாட்டிதானே நீ.” “நானும் அதையேதான் உங்களுக்கு நியாபகப் படுத்துறேன், நான் பொண்டாட்டிதான், ஆனா அடிமை கிடையாது.” “இருக்கனும்டி, எனக்கு அப்படிதான் நீ இருக்கணும், எனக்கு உன்னால கெளரவம் குறையுதுடி…. ஆமாம்…. இந்த நாலு சுவருக்குள்ள உன் கிட்ட இதை சொல்லுரதுல எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லைடி” – குமாரின் குரல் அதிகரித்தது. அந்த சத்தத்தில் ஸ்நேஹா படுக்கை அறையில் இருந்து என்னமோ ஏதோ என்று பயந்து எழுந்தாள்.. “நா….” – பேச ஆரம்பித்தவளை பேச விடாமல் தடுத்து மீண்டும் தொடர்ந்தான் குமார். பேசக் கூடாதுடி, என்னடி கூட கூட பேசுற…., நீ பேசுவ…. காரணம் எனக்கு நீதான் இந்த வேலைய வாங்கிக் குடுத்த, எப்படி வாங்கிக் குடுத்த? அந்த ராகவ் கிட்ட ஈசி ஈசி வாங்கிக் குடுத்த அப்படிதானேடி?” – இதைச் சொல்லும்போது குமாரின் முறைக்கும் பார்வை சங்கீதாவை அதிகம் எரிச்சலடயசெய்தது

உண்மையில் குமாருக்கு IOFI ல் application எழுதி போட்டதைத் தவிர சங்கீதா செய்தது ஒன்றும் இல்லை, அப்போது ராகவ் என்பவன் யாரென்ரு கூட அவளுக்கு தெரியாது. குமாரின் இந்த அருவருப்பான கேள்விக்கு “நீங்க நினைக்கிறது தப்புங்க” என்று அடி பணிந்து பதில் சொல்ல சங்கீதாவின் மணம் ஒத்து போகவில்லை. தாலி கட்டினவன் என்கிற அந்த ஒரு காரணத்துக்காக எவ்வளவோ வார்த்தைகளையும் சகிக்க முடியாத குணங்களையும், புருஷ லட்சணமே இல்லாத குணாதிசயங்களையும் கடந்த ஏழு ஆண்டுகளாக கடந்து வந்த பிறகு இன்றைக்கு தன் மணசு விருப்பபட்டு செய்த சில காரியங்களையும் அவனது மனக் கண்களால் அசிங்கமான பார்வையில் பார்த்து பேசியதைக் கண்டு அவனுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை என்று அவளது ஆழ் மணம் கூறியது. பேச வேண்டிய வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் பேசட்டும் என்று எண்ணி அப்படியே மெளனமாக நின்றாள். இப்போ பேசுடி, ஏன் பேச மாட்டியா? பேசு பேசு…- கிட்டே நெருங்கினான். கைகளை உயர்த்தி கண்களை மூடி “போதும்” என்பது போல காமித்து “எல்லாமே உங்க கண் பார்வைல இருக்கு, நான் எதுவும் விளக்கி சொல்லணும் னு தோணல”

ஒஹ் நான் சொல்லுறது எதையும் செய்ய கூடாது இல்ல அப்படிதானே? “எது நீங்க சொல்லுறத நான் செய்யல? என்னத்துக்கு இப்போ போலம்புறீங்க?” – சத்தம் இல்லாமல் அமைதியாகவே கூறினாள் “இதைக் கேட்டு ஒரு நிமிடம் பயித்தியம் பிடித்தவனைப் போல ஹாலில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தவன் சட்டென ஒரு நிமிடம் திரும்பி சங்கீதாவை தலை முதல் கால் வரைப் பார்த்தான். அவள் அருகில் வந்து அவளின் தோளில் கை வைத்து முந்தானையை தரையில் இழுத்து விட்டு உச்ச குரலில் “உம்ம்…. come on ஆடு…. ஆடுடி… நான் பாடுறேன்.. எனக்கு இப்போ special அ ஆடி காமி எனக்கு “ஷீலா ஷீலா கிய ஜானி” (உலரும்போது குமாருக்கு பாட்டு வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை) ஆஆஆடுடி ஆடு ஆடு.. ஊருக்கு ஆடுனியே எனக்கு ஆட மாட்டியா?” – குமாரின் குரல் கூரையை கிழித்தது. பெட்ரூம் கதவருகே ஒழிந்து கொண்டு மெதுவாக தலை மட்டும் தெரியும் வண்ணம் ஸ்நேஹா பயந்து எட்டிப் பார்த்தாள்.

வாழ்கையில் குழந்தையாய் பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி, நண்பர்கள், தோழிகள், மெத்த படித்தவர்களுடன் மேற்படிப்பு படித்த நாட்கள், வேலை செய்யும் அலுவலகத்தில் அவளது சக ஊழியர்கள், மற்றும் மேலதிகாரிகள் முதற்கொண்டு “சங்கீதா” என்றாலே தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் மரியாதை உள்ளவள். அவளது கல்யாண வாழ்க்கையில் கடந்த ஏழு வருடம் என்னதான் பல மனக் குத்தல்களுக்கு ஆளானாலும், இந்த நாள் இந்த ஒரு கனம் அவள் குமாரின் எதிரில் வாங்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அளவுக்கு அதிகமாகவே அவளது சுய கௌரவத்தை நசுக்கியது, அவனுடைய வார்த்தைகள் இவளுடைய மென்மையான குணாதிசயங்களை கூச வைத்தது.

புருஷனாகவே இருந்தாலும் பேசக் கூடாத வார்த்தைகள் பேசினாள் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அழுத்தமாக அவள் மனது சொன்னது. இருப்பினும் அவனது வார்த்தைகளால் வந்த வலிகளை தாங்க இயலவில்லை அவளாள். அதற்கு ஆதாரமாக அவளது விழியன் ஓரம் தேங்கி நின்ற கண்ணீர் தான் சாட்சி. “ஆடுடி, எவ்வளோ நேரம் சொல்லுறேன் ஆடு,” என்று குமார் கூறிய வார்த்தைகளை கேட்க்கும்போது மெதுவாக திரும்பி ஈர விழிகளுடன் ஸ்நேஹாவை மென்மையாக சிரித்து ப் பார்த்தாள் சங்கீதா.. சற்றும் குமாரின் கோவத்துக்கு அசராமல் சரிந்த முந்தானையை எடுத்து மீண்டும் மேலே போட்டாள். “ஒன்னும் இல்லைடா” என்பது போல் தன் பயந்த குழந்தையை நோக்கி தலை அசைத்தாள்.

10 Comments

  1. Bro next part podunga story interesing a irukku pls

  2. Sunday na 2 paret podunga

  3. Next post please

  4. Next post please, we are waiting eagerly

  5. Why delayed. Please update

Comments are closed.