வாசமான ஜாதிமல்லி 5 26

கடைசியாக அவர்கள் சந்தித்தபோது, அவன் மன்னிப்பு கேட்கவும், அவர்களின் வாழ்க்கையில் இனி எப்போதும் குறுக்கிட மாட்டேன் என்று சத்தியம் செய்ய வந்த போது அவன் பேசிய வார்த்தைகளை பிரபு மீண்டும் எதிரொலித்தான். சரவணன் அவன் முகத்தை எதோ யோசித்துக்கொண்டு பார்த்தான்.

“சரி, நான் உன்னிடம் ஒன்னு கேட்கிறேன், எனக்கு ஒரு நேர்மையான பதில் வேண்டும். முன்பு போல இல்லை இப்போ நான் உன்னை நன்றாக படிக்க முடியும். நீ பொய் சொன்ன எனக்கு தெரிந்திடும். நீங இன்னும் மீராவைப் பற்றி நினைக்கிறீயா? உனக்கு இன்னும் அவள் மேல் ஆசை இருக்கா?”

இந்த கேள்வியை பிரபு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த கேள்விக்கு அவன் தயாராக இல்லை. அவனின் அதிர்ச்சியும் முகத்தில் உணர்ச்சியின் வெளிப்பாடும் அவனை காட்டிக்கொடுத்தது. அவன் பொய் சொல்ல முயன்றால், சரவணனுக்கு உடனே தெரியும் என்று அவருக்குத் புரிந்தது.

சரவணன் நான்….,” அவனுக்கு எப்படி மேலும் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

“பரவாயில்லை என்னிடம் உண்மையைச் சொல்லு. இதற்கு முன்பு நீ என் வீட்டிற்கு அடிக்கடி வந்த உன் உண்மையான நோக்கத்தை மறைத்தது போல வேண்டாம். ”

“நான் உன்னிடம் பொய் சொல்லமாட்டேன் சரவணா, ஆமாம், மீராவை என்னால் மறக்க முடியவில்லை, மற்றும் உண்மை தான் அவளிடம் எனக்கு இன்னும் ஆசை இருக்கு, ஆனால் நான் உறுதியளித்தபடி என் மோசமான உணர்ச்சிகள் என் செய்யலை ஆள அனுமதிக்க மாட்டேன். உன் மனைவியுடன் மீண்டும் ஒரு முறை பாலியல் உறவை ஏற்படுத்த நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன்.”

“நீ என் கேள்விக்கு முழுமையாக பதிலளிக்கவில்லை. நீ விரும்பவில்லை சரி, ஆனால் மீரா உன்னை அழைத்து, உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னால். அதன் காரணமாக நீங்கள் சந்திக்க நேர்த்திட்டால். அப்போது, அவள் இன்னும் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னால், அந்த சமயத்தில் உன் வாக்குறுதியை நீ இன்னும் கடைப்பிடிக்க முடியுமா?”

“இல்லை, சரவணா இல்லை, நீ எப்போதும் அப்படி நினைக்க கூடாது. அவள் அதை ஒருபோதும் செய்ய மாட்டாள். நான் சத்தியம் செய்யுறன், அவள் மீண்டும் உனக்கு துரோகம் செய்ய மாட்டாள். ”

“நான் உனக்கு ஒன்னு சொல்லடும்மா, இப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகும், உன்னை மறக்க முடியாமல் அவள் கஷ்டப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.”

பிரபு அவன் இதயத்தில் இதை ஏற்கனவே அறிந்திருந்தான். அவன் தந்தையின் இறுதிச் சடங்கில் அவர்களின் கண்கள் அந்த கொஞ்ச நேரத்துக்கு சந்தித்தபோது, இருவருக்கும் ஒருவருக்கு மேல் ஒருவர் ஆசை இருப்பது பரஸ்பரமானது என்பதை அவனால் காண முடிந்தது.

“என்னை மன்னிச்சிரு சரவணா, இது எல்லாமே என் தவறு. எங்கள் கள்ள உறவு தொடங்கவில்லை என்றால் இந்த சிக்கல்கள் ஒருபோதும் எழுந்திருக்காது. இன்னும் காலப்போக்கில் அவள் என்னை மறந்துவிடுவாள் என்று நம்புகிறேன். நான் செய்ய கூடிய நல்ல காரியும் என்னவென்றால் இங்கே உள்ள காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னே நான் இனிமேல் இங்கே வாராமல் இருப்பது.”

“நீ சொன்னது போல, இது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, மேலும் இன்னும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று நீ நினைக்கிற. நீ இங்கு வருவதைத் தவிர்த்தால், மீரா உன்னை மறந்துவிடுவாள் என்று நினைக்கிறீயா? எனது பழைய மீராவை மீண்டும் பெறுவேன் என்று நீ உண்மையிலேயே நம்புறீயா?”

பிரபுவுக்கு வார்த்தைகள் தொலைந்து போனது, என்ன சொல்வது என்று தெரியவில்லை.

என்ன சொல்வது என்று தெரியாமல் மெளனமாக இருந்த பிரபுவை பார்த்து சரவணன் கேட்டான்,” சரி முதலில் இதற்க்கு பதில் சொல்லு. நீயும் என்னை பார்க்க பேசவேண்டும் என்று சொன்னியே, எதற்கு? என்ன நோக்கத்துக்கு?”

பிரபு இப்போது சரவணனின் முகத்தைப் பார்த்து, ”என் சத்தியத்தை மீறி இங்கு திரும்பி வந்ததற்கு மன்னிப்பு கேட்க விரும்பினேன். என் அம்மாவின் வற்புறுத்தலின்னால் தான் வந்தேன். அப்போ கூட வர தயங்கி இருப்பேன் அனால் நான் வருவத்துக்கு நீ ஆட்சேபிக்கவில்லை என்றும் என் அம்மா சொன்ன பிறகு தான் நான் வர சம்மதித்தேன். ”

“அவ்வளவு தானா?”

“இல்லை, உன் பெரும்தன்மையால் என் தந்தையை கடைசி நேரத்தில் பார்க்க அனுமதித்ததற்கு நன்றி சொல்ல விரும்பினேன்.”

பிரபு சில வினாடிகள் பேசுவதை நிறுத்திவிட்டு பின் தொடர்ந்து கூறினான், ”எல்லாத்துக்கும் மேல நான் உனக்கு அளித்த வாக்குறுதியை மீற மாட்டேன் என்று உன்னிடம் உறுதியளிக்க விரும்பினேன்.”

வேறு ஏதாவது இருக்கிறதா என்று சரவணன் சிறிது நேரம் காத்திருந்தான். அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் அவன் பேச ஆரம்பித்தான்.

“என் மனைவியுடனான உன் கள்ள உறவை பற்றி எனக்கு எப்போது தெரியும் என்று நீ நினைச்சே?”

பிரபுவுக்கும் அதில் சில சந்தேகங்கள் இருந்தன, ஆனால் முதலில் தானாக எதுவும் சொல்ல வேண்டாம் என்று, “இந்த இடத்தில் நீ எங்களை பார்த்த போது.”

“இல்லை, எனக்கு அதற்க்கு முன்பே சில சந்தேகங்கள் இருந்தன. உங்கள் இருவருக்கும் இடையே ஒருவித நெருக்கும் இருப்பதை உணர்ந்தேன், ஆனால் எந்த அளவிற்கு நீங்க போய்விட்டீங்க என்று முதலில் தெரியவில்லை.”