வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 50

அடுப்பில் ஒரு கேட்டல் தண்ணீர் வைத்தபோது, சமையலறைக்குள் யாரோ நுழைவது போல அவள் உணர்ந்தாள். அவள் திரும்பி பார்த்தால், சரவணன் வந்துகொண்டு இருந்தான். பிரபு அங்கு வரத் துணிய மாட்டான் என்று அவளுக்குத் தெரியும், ஆனால்கோமதியாக இருந்தால் ஆவலுடன் உரையாடலை மேற்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. சரவணன் முகத்தில் அக்கறை கலந்த கவலை தெரிந்தது.

“மீரா உனக்கு ஒன்னும் இல்லையே? உன்னால் சமாளிக்க முடியும் தானே? காபி போடா நான் உனக்கு உதவவா? ”

அவள் கண்கள் அவள் கணவனின் அக்கறையை கண்டு மென்மையானது. அவள் கணவனை அப்படியே அனைத்துக் கொள்ளனும் என்று துடித்தாள். அவள் தலையை அவர் மார்பில் புதைத்து அழு வேண்டும் போல இருந்தது. ஆனாலும் இப்போதும், ச்ச, நான் அதற்க்கு தகுதியானவள்ளா என்றே எண்ணம் குறுக்கிட்டு அவளை தடுத்தது.

“பரவாயில்லை, அவர்களுடன் பேசிக்கொண்டு இருங்க. நான் காபி செய்து சீக்கிரம் வறேன். ”

“நிச்சயமாகவே சொல்லுற மீரா. நான் எதுவும் செய்யணும் என்றால் தயங்காம சொல்லு, ” சரவணன் முகத்தில் இன்னும் அந்த அக்கறை மாறாமல் இருந்தது.

மீரா முகத்தில் ஒரு சிறிய நடுங்கும் புன்னகை தோன்றியது. அவள் முகத்தில் அவன் மிக நீண்ட காலத்துக்கு பிறகு பார்த்த அவனுக்கான முதல் புன்னகை. இது சரவணனை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.

“இல்ல, நான் சமாளிச்சிக்கிறேன், நீங்க போங்க. நீங்களும் இங்கே வந்திட்டிங்க, அவுங்க அங்கே தனியாக இருக்காங்கங்க .. ஆனால் அவர்கள் ஏன் திடீரென்று வந்தாங்க என்று எனக்கு புரியல, ”மீரா அவர்கள் இருவரின் மனதிலும் ஏற்பட்ட கேள்விக்கு குரல் கொடுத்தாள்.

“எனக்கும் அதே கேள்வி தான், ஒன்னும் புரியில.”

இந்த வருகை ஒரு சாதாரண நட்ப்புக்கான வருகை இல்லாமல் வேறு உள்நோக்கம் இருக்க வேண்டும் என்று சரவணனுக்கு ஒரு சிறிய உணர்வு இருந்தது. இது அவனது வாழ்க்கையில் இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்துமா .. அவன் மனதில் ஆச்சரியப்பட்டான். அவன் மீண்டும் ஹாலுக்கு நடந்து சென்றான். கோமதியும் பிரபுவும் ஒரு தீவிரமான கிசுகிசு உரையாடலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. அவன் உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் அதை நிறுத்தினார்கள். இதை பார்த்த போது, இந்த வருகை கண்ணுக்கு வெளிப்படையாக தெரிந்ததை விட வேறு ஏதேனும் ஒன்று இருப்பதை சரவணனுக்கு மேலும் உறுதிப்படுத்தியது.

சரவணன் உட்கார்ந்தவுடன், அவர்கள் மீண்டும் பொதுவாக பேச ஆரம்பித்தார்கள். சரவணன் பிரபுவின் பிசினெஸ் குறித்து விசாரித்தான். சரவணனின் பிசினெஸ் போல இது இன்னும் பெரிய அளவில் இல்லை என்றாலும் அது நல்லாக தான் போய்க்கொண்டு இருக்கு என்று பிரபு கூறினான். பிசினெஸ் வெற்றிபெற வேண்டும் என்றால் எப்போதும் நேரமும் கடின உழைப்பும் தேவை என்று சரவணன் பிரபுவுக்கு அறிவுறுத்தினான். தேவையற்ற விஷயங்களில் கவனம் போனால் எளிதில் பிசினெஸ் தோல்வியடையச் செய்யலாம் என்றான். அவன் எதோ பிரபுவிடம் சுற்றிக்காட்ட விரும்புவது போல் இருந்தது.

மீரா அனைவருக்கும் காபியுடன் வந்தாள். அவள் சோபா முன்னால் இருந்த மேஜையில் காபி டம்ளர் கொண்டுவந்த தட்டை வைத்தாள், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டனர். பிரபுவின் மகள் அவன் மடியில் தூங்கிக்கொண்டு இருந்தாள்.

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.