வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 49

“இல்லை இல்லை… அவள் செய்த காரியத்துக்கு அவள் தன்னை வெறுக்கிறாள். நீங்கள் எந்த தவறும் செய்யாதபோது, அவர்களின் துரோக செயலால் நீங்க மட்டுமே கஷ்டப்படுகிறீர்கள் என்று அவள் உணருவதால், அவள் கடும் மனச்சோர்வடைகிறாள். நீங்க ஒரு பெரிய அநீதிக்கு ஆளானதாக அவள் உணர்கிறாள். அவள் தன்னை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறாள், ஆனால் அதே நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைக்கும் அவமானத்துக்கு முதன்மையான காரணம் இருந்த இன்னொரு நபர், பிரபு, எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்துவிட்டான் என்று அவளை துன்பத்தில் ஆதிகிறது. அவனும் அவதிப்பட வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அவளுடைய மனதில் உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆழ்ந்து பதிந்திருக்கு.”

“அதனால் என்ன பயன். அது எதையும் மாற்றப்போவதில்லை டாக்டர். ”

“இது தான் அவளுடைய மன அழுத்தத்திற்கு இன்னொரு காரணம். அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டுவார்கள் என்றாலும் நீங்கள் உங்கள் மனைவியோ,ப்ரபுவையோ தண்டிக்க நினைக்கவில்லை. நீங்கள் கொடுக்க கூடிய எந்த தண்டனையையும் விட உங்கள் இரக்கம் தன் அவளுக்கு ரொம்ப வலிக்கிறது. ”

“அதனால் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்?? அவளை அடிக்க ஆரம்பிக்கலாம்மா?”

மனச்சோர்வு தரும் நகைச்சுவையை டாக்டர் அருள் பார்த்து அவரது முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது.

“அது உங்கள் இயல்பு குணம் இல்லை” என்று டாக்டர் அருள் கனிவோடு கூறினார்.

“தண்டனைக்கு தகுதியான அனைவரும் உண்மையில் தண்டனை அடைவதில்லை, எந்த தவறும் செய்யாத சிலர் ஏன் வேதனை படுகிறார்கள் என்றும் புரியவில்லை. நம்முடைய நீதி உணர்வு எப்போதும் வாழ்க்கையில் நீதி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் உண்மையில் வாழ்கை ஒவ்வொரு முறையும் அப்படி இருந்ததில்லை. பிரபு துன்பப்படுகிறாரான இல்லையா என்பது உண்மையில் ஒரு பொருட்டல்ல என்பதை நான் அவளுக்கு உணர்த்த வேண்டும். இது உடனே நடக்காது.”

டாக்டர் அருள் திடீரென்று நிறுத்தி சரவணனிடம், “மீராவுக்கு கடவுள் பக்தி அதிகமா?” என்று கேட்டார்.

“ஆம், நான் அப்படி தான் நினைக்கிறேன். ஏன் டாக்டர்?

“நல்லது. நாம் தண்டனையில் இப்போது தப்பித்தாலும் கூட, ஒவ்வொருவரும் அவர்கள் செய்த பாவங்களின் விளைவுகளை சந்திக்க ஒரு உயர்ந்த சக்தி இருக்கிறது என்ற கருத்தை நான் வலுயுறுத்தி உங்கள் மனைவியை மனா நிறைவு அடைய முயற்சிக்கலாம். பிரபு தனது செயல்களுக்காக ஒரு நாள் தீர்ப்பை எதிர்கொள்வான் என்று உங்கள் மனைவிக்கு நம்பிக்கை வரணும். ”

டாக்டர் அருள் சரவணனைப் பார்த்து, “கவலைப்பட வேண்டாம் சரவணன், நாம குறைந்தபட்சம் இவ்வளவு முன்னேற்றம் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். போரில் வெற்றி பெற முயற்சிப்போம். ”

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.