வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 49

சரவணன் தூங்கும் குழந்தையைப் பார்த்து, ”உன் மகள் உன்னை போல இருக்காள்,” என்று பிரபுவிடம் சொன்னான்.

இதைக் கேட்டு கோமதி சிரித்தாள், ”உண்மையில் நீங்க அப்படி நினைக்கிறீங்கள?”

அவள் மீராவின் பக்கம் திரும்பி, ”அக்கா நீங்க என்ன நினைக்கிறிங்க , அவள் அவரை போலவோ அல்லது என்னைப் போலவோ இருக்க?” என்றாள்.

மீரா உரையாடலுக்குள் இழுக்கப்படுவதை விரும்பவில்லை, ஆனால் இப்போது குழந்தையைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“எனக்குத் தெரியல .. இப்போதைக்கு தெரியல, சரியாய் சொல்லுவதும் இன்னும் காலம் ஆகணும் என்று நினைக்கிறேன், ”என்று மீரா பதிலளித்தாள்.

இதைச் சொன்னதே அவசியத்தை விட அதிகமாக இருந்தது என்று அவள் உணர்ந்தாள். அவள் வெறும் தலையை மட்டும் ஆட்டியிருக்க வேண்டும்.

“அக்கா சரியாக சொன்னாங்க, நீங்க என் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை,” கோமதி சரவணனைப் பார்த்து கூறினாள்.

அடுத்து என்ன வரப்போகிறது என்று அவனுக்குத் தெரிவது போல, பிரபுவின் தலை திடீரென கீழே தொங்கியது.

“அவள், அவர் குழந்தை இல்லாதபோது அவள் எப்படி அவரைப் போல் இருக்க முடியும்,” கோமதி மீராவின் மற்றும் சரவணனின் எதிர்வினைகளைக் காண காத்திருந்தது போல அவர்கள் முகத்தை பார்த்தபடியே அவ்வாறு கூறினாள்.

இருவரும் அவளை திகைத்துப் பார்த்தார்கள்.

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.