வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 49

“நான் அவங்களுக்கு முதலில் அல்பிரஸோலம் (Alprazolam) மற்றும் ஆண்டிடிரஸண்ட்ஸ் (Antidrepessants soretonin) செரோடோனின் ஆகியவற்றை தொடங்குரென். மருந்துகளின் டோஸேஜ் அளவு மற்றும் எதனை முறை எடுக்கணும் என்று குறித்து நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். ”

டாக்டர் அருள் சரவணனிடம் சொல்லாதது என்னவென்றால் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க சதவீத நோயாளிகளில் இது தற்கொலைக்கு வழிவகுக்கும். அது 10% க்கும் குறைவாக இருந்தது, இந்த நேரத்தில் சரவணனை எச்சரித்து அச்சப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கருதினர்.

“வாரத்திற்கு ஒரு முறை கவுன்சிலிங்கிற்காக அவளைப் பார்ப்பது மிகவும் நல்லது என்று கருதுகிறேன். ஒன்று உங்கள் நேரம் அதிகம் எடுக்கும் மேலும் அதிக செலவு ஏற்படும் என்று நான் உங்களுக்காக அஞ்சிக்கறேன். பணம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்தால், அதை ஒரு மாதத்திற்கு 2 அமர்வுகளாக வைத்துக் கொள்ளலாம். ”

“இல்லை டாக்டர், பணம் எனக்கு முக்கியமல்ல. என்னால் செலவு செய்ய முடியும். எனது மனைவியின் உடல்நிலை தான் மிக முக்கியமானது. தயவுசெய்து வாரத்துக்கு ஒரு முறையாக மாற்றவும். ”

அடுத்த வாரம் முதல் கவுன்சலிங் தொடங்கியது. முன்னேற்றம் மெதுவாகவும், கஷ்டமாகவும் இருந்தது. மீரா மெதுவாக பேசவும், அவளது உள் எண்ணங்களையும் போராட்டங்களையும் வெளிப்படுத்தவும் சில மாதங்கள் ஆனது. உண்மையான முன்னேற்றம் காணப்பட்டபோது, மீரா மனச்சோர்வுக்குள் தாக்கி மறுபடியும் மறுபடியும் மனம் இறுகிவிடுவாள். அவள் மீண்டும் சரியாக பேசத் தொடங்குவதற்கு மீண்டும் சில அமர்வுகள் எடுக்கும். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு டாக்டர் அருள் சரவணனை அழைத்து அவரை தனிப்பட்ட முறையில் பார்க்க விரும்பினார். மீராவின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வது மற்றும் மேலதிக சிகிச்சையைப் பற்றி விவாதிப்பத்துக்காக.

“வாங்க சரவணனை, உட்காருங்க,” டாக்டர் அருள் அவரது அறைக்குள் நுழையும் சரவணனை பார்த்து கூறினார்.

“மாலை வணக்கம் டாக்டர். மீரா நிலையில் என்ன முன்னேற்றம் இருக்கு என்று சொல்லுங்கள் டாக்டர்? ”

“ஓரளவு முன்னேற்றம் இருக்கு. அவளுடைய மனச்சோர்வு மற்றும் அவளுடைய இப்போது இருக்கும் மனநிலைக்கான முதன்மைக் காரணங்களை நான் புரிந்து கொண்டேன். ”

சரவணன் டாக்டர் அருலைப் பார்த்தான், அவன் மனைவி நலனடையும் பாதையில் இருக்கிறாராளா என்று அறிய ஆவலுடன்.

“உங்கள் மனைவி உங்களை மிகவும் நேசிக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது நீங்கள் அவளுக்காக என்னவெல்லாம் சகித்துக்கொண்டீர்கள் என்பது தெறித்து. ”

“ஆனால் அவள் இன்னும் என்னிடம் விலகி இருக்காள், நான் ஏதாவது கேட்டால் பதிலளிப்பாள் தவிர உண்மையில் என்னுடன எதுவும் தானாக வந்து பேச மாட்டாள்.”

“சரவணன், உங்கள் மனைவி உங்கள் அன்புக்கு தகுதியற்றவள் என்று நினைக்கிறாள். அவள் செய்த துரோகத்தால் அதனால் அவள் மேல் அவளுக்கு இருக்கும் வெறுப்புணர்வு நிரம்பியிருப்பதால், உங்களை நேசிக்க அவளுக்கு உரிமை இல்லை என்று மனம் நொறுங்கி இருக்காள். ”

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.