பழிக்குப்பழி End 95

அவன் தான் கொஞ்சம் பலசாலி அவனை உட்காரவைத்து விட்டால் இவனை சுலபமாக சமாளித்து விடலாம் என்று முடிவு செய்தேன், ராஜா ஆர்வமாக டாக்டர் ரிசல்ட் என்றான், வாங்க ராஜா இங்கே உட்காருங்க அப்போ எடுத்ததுல அவளோ துல்லியமாக இல்லை, என்ன டாக்டர் இப்டி சொல்றிங்க என்றான், இப்போ இங்கேயே நான் machine எடுத்துட்டு வண்ட்டேன், வாங்க இப்போவே செக் பண்ணி சொல்லிடறேன் என்றேன்,

நான் சொன்ன பொய்யை யோசிக்காமல் நம்பி உட்கார்ந்தான், நல்லவேளை நான் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தேன், அவனை உட்கார வைக்கும் நேரத்தில் அவன் டிரைவர் கீழே மயக்கம் போட்டு பொத்தென்று விழுந்தான், அவன் அதிர்ச்சியில் எழுந்து கீழே பார்ப்பதற்கும் அவன் கழுத்தில் ஊசியை குத்தி 20mg மருந்து விட்டேன், என்னை பார்த்த படியே மயங்கி விழுந்தான்,

பவித்ரா நான் என்ன செய்கிறேன் என்பதை தெரியாமல் உறைஞ்சு போய் வாயில் கைவைத்தபடி இருந்தாள், இருவரையும் சங்கிலியால் கட்டிவிட்டேன், மயக்கம் தெளிய காத்திருந்தேன், கொஞ்ச நேரத்தில் ராஜ் கண்முழித்தான், அவன் டிரைவருக்கு heavy sedative ஆதலால் எந்திரிக்கவில்லை, பதறினான் என்ன ஆச்சு டாக்டர் , ஏன் என்னை இப்டி கட்டிப்போட்டு இருக்கீங்க என்றான், கவலை படாதீங்க ராஜா, அவிழ்த்து விட்டடுறேன் என்றேன்,

என் tableஐ பார்த்தான், செயின் சா, சுத்தியல், screw டிரைவர், surgical கத்திகள் எல்லாம் இருந்தது, கொஞ்சம் பயம் வந்தது அவனுக்கு, என்ன செய்ய போறீங்க டாக்டர் என்றான், நீங்க என்ன செஞ்சீங்க என்றேன், டாக்டர் மனுச்சிருங்க அந்த பொண்ணை தொட்டது தப்புதான் என்றான், கேட்டு சொல்லுங்க எவ்ளோ பணம் வேணாலும் குடுத்தர்றேன், இப்போ என்ன அப்படி நடந்து போச்சு என்றான், அப்போ உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமாவே தெரில இல்ல என்றேன்,
செரி எவ்ளோ குடுப்ப என்றேன், 1 கோடி என்றான், நான் சிரித்தேன், ஒரு பார்ட்டிக்கு கொடுக்க 50 லட்சம் எடுத்து வெச்சருக்கேன், அதை அப்படியே தந்தர்றேன், மீதி அப்புறம் தர்றேன் என்றான்,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.