இது தப்பில்லைன்னு சொல்றீங்களா?
ஸாரி… நீ குழந்தை வேணும்ன்னு ரொம்ப ஆசைப்படறதாலே சொன்னேன்.
சரி அப்ப நானும் ஒரு யோசனை சொல்றேன். வருத்தப்பட மாட்டீங்களே…
நீ என்ன சொன்னாலும்….
ஓகே… ஓகே… நீங்க இதை தான் சொல்வீங்கன்னு தெரியும். நான் சொல்லட்டுமா?
ம்…
குப்தா நம்மளை மும்பை கூப்பிட்டிருக்கார்.
புரியலை…
அவர் கூப்பிட்டதுக்கு உண்மையான காரணம், நீங்க இப்படி குடிச்சிட்டு கூத்தடிச்சு ஆக்சிடெண்ட் ஆனதை சொன்னதும் இங்கே அழைச்சுட்டு வாங்க, ஒரு ஆசிரமம் மாதிரி ஒரு இடம் இருக்கு, அங்கே ஒரு 30 டேஸ் இருந்தா குடிக்கிற எண்ணமே திரும்பவும் வராது, டேமேஜ் ஆன உள்ளுறுப்புகள் கூட சீக்கிரம் ரெக்கவர் ஆகிடும்ன்னு சொன்னார்.
ஓ….
ம்…
சரி சொல்லு…
இப்ப நீங்க இந்த அளவுக்கு சொன்ன பிறகு…
ம்…
யாரோ பெயர் தெரியாத ஒருத்தருக்கு என் வயித்திலே குழந்தையை உருவாக்கி பெத்துக்கிறதுக்கு ஏன் குப்தாவோட ஆசையை நிறைவேத்த கூடாதுன்னு தோணுச்சு.
அம்மு…
ஏன்? அதிர்ச்சியா இருக்கா?
இல்லை. ஆச்சரியமா இருக்கு.
ம்…
எனக்கு ஆட்சேபணை இல்லை அம்மு.
எதிர்பார்த்த பதில் தான்.
ம்…
நான் குப்தா கிட்டே விசயத்தை சொல்லி ப்ளைட் டிக்கெட் போட சொல்லவா?
வித் ப்ளசர்….
இரவு குப்தாவுடன் பேசினேன். காலையில் கணவரிடம் நெக்ஸ்ட் வீக் டிக்கெட் போட்டிருக்கார் என்று விவரம் சொன்னேன்.
