குமாரின் மகிழ்ச்சியை அதிகமாக்குவது போல அமுதா அந்த கேள்வியைக் கேட்டாள்.
ட்ரஸ் எப்படி இருக்குன்னு நீங்க எதுவுமே சொல்லலையே?
குமார் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு தேவதை மாதிரி இருக்கீங்க என்றான்.
அவன் மனதில் அப்படியே அள்ளிட்டு போய் அனுபவிக்கனும் போல இருக்கு என்று தான் சொல்ல தோன்றியது. நல்லவேளை அவன் அப்படி எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அமுதா அவனை வெறுத்திருப்பாள். இப்போதோ அவள் அழகை பாராட்ட, ஜொள் விட வாய்ப்பு கிடைத்தும் குமார் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் நாகரீகமாக கமெண்ட் செய்ததால் அவன் மீதான அமுதாவின் மதிப்பு அதிகமானது. ஈர்ப்பும் அதிகமானது.
சரி உன் ஆளு எங்கேடி? அவரையும் போன் பண்ணி வர சொல்லு. கொஞ்ச நேரம் சுத்தி பார்த்துட்டு டின்னரை முடிச்சிட்டு தூங்க போகலாம். நாளைக்கு இங்கேயே பக்கத்திலே வாட்டர் ஃபால்ஸ், போட்டிங் எல்லாம் இருக்காம். ஒவ்வொண்ணா எஞ்சாய் பண்ணலாம் என்றாள் லாவண்யா.
அமுதாவுக்கு ஏனோ இப்போது கணவன் மீது ரொம்பவே வெறுப்பாக இருந்தது. அதை காட்டிக் கொள்ளாமல் அவர் டயர்டா இருக்குன்னு படுத்து தூங்கிட்டாருடி. எழுப்ப வேண்டாம். நீ வேணா அவங்க கூட போய் சுத்திட்டு வான்னு சொல்லிட்டாரு என்று பொய் சொன்னாள்.
அதை கேட்ட லாவண்யா, அமுதா கவனிக்காதவாறு தன் கணவனை பார்த்து உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்ட, குமாரும் ஒரு லாவண்யாவை பார்த்து கொஞ்சம் வெட்கப்பட்டு விட்டு, அமுதாவிடம் சரி வாங்க, எல்லோருக்குமே கொஞ்சம் டயர்டா தான் இருக்கும். நாம கொஞ்ச நேரம் பார்க்லே டைம் பாஸ் பண்ணிட்டு அப்புறம் டின்னர் முடிச்சுட்டு உங்க கணவருக்கு எதாவது வானிட்டு ரூம் போகலாம் என்றான். மூவரும் பார்க்கினுள் நடக்க துவங்கினார்கள்.
லாவண்யாவும் அமுதாவும் ஒன்றாக நடந்து வர குமார் கொஞ்சம் முன்னால் நடந்து சென்றான். அமுதா அவனை பெயர் சொல்லி அழைத்து தங்களுடன் இணைத்துக் கொண்டாள். அது லாவண்யாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், லாவண்யாவின் மனதில் இவர்களை தனிமையில் விட்டு விட்டு எப்படியாவது தான் மட்டும் தனியே கழட்டிக் கொண்டு போய் விட்டால் அமுதாவும் குமாரும் தனிமையில் பேசி பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே கொஞ்சம் கனிந்து வருவது போல இருந்த அமுதாவை குமார் தன் சாமர்த்தியமான பேச்சால் மெல்ல மெல்ல கரைத்து, நெருங்கி விடுவான். அப்புறம் சான்ஸ் கிடைத்தால் இருவரும் கூடுவது கூட சீக்கிரமே நடக்கலாம். அப்புறம் எல்லாம் இன்ப மயம் தானே என்று சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன.
சுமார் மூன்று பேரும் அரை மணி நேரம் அந்த பார்க் போன்ற பகுதிக்குள் சுற்றியும் லாவண்யாவும் குமாரும் எதிர்பார்த்த படி எந்த சந்தர்ப்பமும் அமையாததால், லாவண்யா, குமார், இருவரும் கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்து விட்ட போது அது நடந்தது. பார்க்கில் அந்த இரவு வேளையிலும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் கையில் எதோ தின்பண்டத்துடன் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி வந்தவர்கள், சரியாக லாவண்யாவின் மீது மோத, அந்த குழந்தைகளின் கையில் இருந்த சாண்ட்விச் போன்ற தின்பண்டத்திலிருந்து ஜாம் போன்ற பிசுபிசுப்பான ஸ்டஃப், லாவண்யாவின் உடைகளில் அப்படியே அப்பிக் கொள்ள, சதிகாரியான லாவண்யாவின் மனம் உடனே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள கணக்கு போட்டது.
