பழிக்குப்பழி End 134

இனி எந்த காரணத்தை சொல்லியும் என் மனைவியை வெளியூர் அனுப்ப முடியாது, செரி ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அவளை மீண்டும் என் பழைய ரூமிர்க்கே கொண்டு வந்து விட்டேன், அதான் ராஜாவுக்கும் அவளை யாரென்று சொல்லிவிட்டேனே, அதனால் இனி எந்த பிரச்னையும் இருக்காது என்று அவளை அங்கேயே விட்டேன். இனி இந்த ராஜா, அவனை பயமுறுத்தியே வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு கிளம்பினேன், நான் வரும்பொழுது என் மனைவி மேலே இருந்த ரூமை mop போட்டு கொண்டிருந்தாள், ஏங்க நீங்க ஏற்கனவே கிளீன் பண்ணி வெச்சிருந்திங்களா, அதை சொல்ல வேண்டியது தானே என்றாள், நல்ல வேளை நான் தப்பித்தேன் என்று நினைத்தேன்,

கொஞ்சம் ரிலாக்சாக இருந்தேன், அதற்க்குள் இந்த ராஜா வேறு கால் செய்து கொண்டே இருந்தான், நானும் cut பண்ணி விட்டேன், ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் அவ்வளவு அழும்பு, நல்லா பயந்து போயிருக்கான் போல, இரவு ஒரு 9 மணி இருக்கும் மனைவியிடம் வெளியே போயிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு, பவித்ராவுக்கு இரவு உணவு எடுத்து கொண்டு போனேன், கதவை திறந்து உள்ளே போனேன், பெட்டில் படுக்காமல் கீழே படுத்திருந்தாள்,

கோபம் போல, நான் பேசினேன் என்னை கண்டுகொள்ளவே இல்லை, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, வேற ஐடியா யோசிக்கிறேன் என்று சொன்னேன், அவள் கோபமாக இருந்தாள் என் முகத்தை பார்க்கவே இல்லை, செரி சாப்பிடு time ஆச்சு என்று சொன்னேன், அதற்கும் பதில் சொல்லவே இல்லை, செரி என்று நான் உணவை வைத்து விட்டு நான் கிளம்பினேன், நிம்மதியாக பொழுது விடிந்தது, 9மணிக்கு சாப்பிட்டேன், ஒரு 20நிமிடத்தில் பவித்ராவுக்கும் சேர்த்து உணவு எடுத்துகொண்டு போனேன்,

கதவை திறந்தேன், அதே போல் கீழே படுத்து இருந்தாள், நான் இரவு கொடுத்த உணவயும் சாப்பிடவில்லை, எனக்கு ஏதோ தவறாக தெரிந்தது, அவளை பார்த்தால் கோபமாக இருப்பது போல தெரியவில்லை, ஆனால் என்மேல் கோபம் காட்டினாள், என்னாச்சு என்றேன் ஏதும் பேசவில்லை, அவள் பக்கம் அமர்ந்தேன், திடீரென்று என்னை கட்டிபிடித்து அழுக ஆரம்பித்துவிட்டாள், என்னாச்சு என்னாச்சு என்றேன், சொல்லாமல் கத்தி அழுதாள், வயிறை பிடுத்து கொண்டு அழுதாள், செரி தள்ளு நான் பார்க்கிறேன் என்றேன்,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.