கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 4

“பெருமாள் பேரை நீ எடுத்துட்டேல்ல.. நான் நம்பறேன்.. என் தலையெழுத்து நீ சொல்ற எல்லாத்தையும் நான் நம்பித்தான் ஆவணும்… உன்னை நம்பி உன் பின்னாடி நான் வந்தேன் பாரு.. என் புத்தியை நானே என் செருப்பாலத்தான் அடிச்சிக்கணும்..” மீனாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எந்த நேரத்திலும் கண்ணீர் அவள் கன்னத்தை நனைத்துவிடும் போல், கண்ணுக்குள் தளும்பின.

“மீனா.. ப்ளீஸ்.. எதுக்குடி கண்ணூ.. இப்ப அழுவறே.. எதுக்கு எடுத்தாலும் ஏன்டீ கண்ணைக் கசக்கறே? எல்லாப் பொம்பளையும் இதைத்தான்டீ பன்றீங்க.. சாரிடீ எம்மா.. சாரீ.. நான் பாக்கற மொதல் பொண்ணே நீதான்.. திரும்பியும் நீ ஆரம்பிச்சுடாதே…”

“ரொம்பத்தான் நடிக்கிறே நீ…”

“மீனா.. மெதுவா பேசுடீ கண்ணு.. மேல யாராவது வந்துட்டா தப்பா நெனைப்பாங்கடீ.. ப்ளீஸ்.. என் கன்னுக்குட்டீ இல்லே நீ… வாடீச் செல்லம்.. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் டு யூ”

தன்னருகில் கோபத்துடன் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த மீனாவின் இடுப்பில் தன் கையை தைரியமாகப் போட்டு கட்டிலில் உட்க்கார வைத்தான், சீனு. மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைத் துடைத்தான்.

“சீனு இப்ப நீ என்கிட்ட எதுவும் பேசாதே.. நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேணாம்.. கீழே போலாம் வா… என்னை என் வீட்டுல கொண்டு போய் விட்டுடு..” மீனா முரண்டினாள்.

“கண்ணு.. இந்த மூஞ்சோட நீ கீழே போனா நான் ஒழிஞ்சேன்டீ… இப்ப நீ அழுதிருக்கேன்னு தெரிஞ்சா… என் அத்தை என்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாங்கடீ … உன் கிட்ட நான் படற பாடு போதாதா..
“ சீனு கடைசியாகத் தன் துருப்பு சீட்டை எடுத்து வீசினான்.

“சீனு ப்ளீஸ்… நிறுத்துடா.. நான் உன்னை என்ன படுத்திட்டேன் இப்ப..?” மீனா
தன் கண்களை துடைத்துக்கொண்டாள். டேபிளின் மேலிருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள்.

“தங்கம்…எனக்கும் ஒரு முழுங்கு தண்ணி உன் கையால குடுடீ.. என் வாயெல்லாம் உலர்ந்து போயிருக்கு..” எந்தப் பிட்டை போட்டு இவளை இப்ப கூலாக்கறது… மனதுக்குள் யோசித்துக்கொண்டே மீனாவின் முதுகை மெல்ல வருடினான், சீனு.
“மீனா..”

“ம்ம்ம்..”

1 Comment

Add a Comment
  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *