கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 8

“இல்லேடியம்மா… அவாளை எங்காத்துக்காரர்தான் பாத்ததா சொன்னார்.”

“மாமா ஏன் அவங்களைப் பத்தி தப்பா சொல்லப் போறார்..?”

“உனக்குத்தான் மாமாவைப்பத்தி நன்னாத் தெரியுமே… அந்த காலத்து மனுஷன்… இன்னைய உலகத்தை புரிஞ்சுக்கற பக்குவமில்லாதவர்… தன் பிள்ளைகள் வீட்டை விட்டுட்டு போய், தாங்களா தங்க கல்யாணத்தை முடிச்சிக்கிட்டதிலேருந்து, இந்த காலத்து சின்னஞ்சிறுசுகள் யாரையாவது நெருக்கமாப் பாத்தா வெல வெலத்து போயிடறார்…:”

“வாஸ்தவம்தானே மாமீ…” மரியாதைக்கு நிதானமாக பேசிக்கொண்டிருந்தாளே தவிர, மல்லிகாவும் வெலவெலத்துத்தான் போயிருந்தாள்.

“அவா ரெண்டு பேரையும் நெருக்கமாப் பாத்ததும், அரக்கப் பரக்க போட்டது போட்டபடி, உங்காத்துக்கு ஓட்டமா ஓடி வந்திருக்கார்… உங்காத்து வாசல்லே எப்பவும் தூங்கிண்டிருக்கற நொண்டிக் கருப்பன், அன்னைக்குன்னு சனியன் முழிச்சிண்டு இருந்ததாம், அது இவரைப் பாத்து கொலைச்சதாம்.. அப்படியே யூ டர்ன் அடிச்சி எங்காத்துக்கே ஓரே ஓட்டமா ஓடிவந்திட்டார்…”

“அவாத்துல, செல்வா கல்யாண விஷயத்துல, அவாளே டென்ஷனா இருக்கா..! செல்வா விஷயம் நல்லபடியா நடந்து முடியட்டும்..!! அதுக்கப்புறம் இந்த விஷயத்தைப் உன் காதுல பக்குவமா போடறேன்னு… நான்தான் எங்களவரை அன்னைக்கு இழுத்துப் பிடிச்சி நிறுத்தினேன்..”

இது என்ன வம்பா போச்சே? இது வம்பு பேச்சாயிருந்தால் கூட பரவாயில்லையே? மல்லிகாவுக்கு தன் தலை சுற்றுவது போலிருந்தது.

“மாமீ.. என் மனசு பதைச்சு போவுது… அவங்களுக்குள்ள தப்பா எதுவும் நடந்துடலையே?” குரலை தழைத்து கொண்டு கேட்டாள், மல்லிகா.

“என்னடீ… பைத்தியமாட்டம் உளர்றே நீ… சீனுவாசன் நம்ம ராகவனோட பிள்ளை… எப்பவும் தப்பு தண்டாவுக்கு போகாத குடும்பம்.. அந்த குடும்பத்துல பொறந்த சீனு மட்டும் தப்பு தண்டாவா எதுவும் பண்ணிடுவானோ? இல்லே… நம்ம கொழந்தை மீனாதான் தப்பு பண்ணிடுவாளோ? நம்ம கொழந்தைகளை நாம நம்பலன்னா வேற யார்டீ நம்புவா?”

“அவா ரெண்டு பேரும், மாடி கைப்பிடி பக்கத்துல ஒருத்தர் தோள்ல ஒருத்தர் கையை போட்டபடி நின்னுன்டு இருந்தாளாம்.. அங்க அவா அதுக்கு மேல என்ன தப்பு பண்ண முடியும்…? நாளைக்கு வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம், நிதானமா மீனாவோட மனசுல என்ன இருக்குன்னு கேளுடீ…”

“ம்ம்ம்..” சுரத்தில்லாமல் முனகினாள், மல்லிகா.

“நன்னாப் படிக்கற கொழந்தைடீ அது… முதல்ல அவ காலேஜ் பரீட்சை முடியட்டும்.. கன்னா பின்னான்னு நீ பாட்டுக்கு எதையாவது பேசி, அவ மனசை கொழப்பி விட்டுடாதே, இப்பத்திலுருந்தே நீயும் உன்னைப் போட்டு குழப்பிக்காதே.. உன் ஆம்படையானையும் கொழப்பிடாதே!”

“மாமீ… அவரோட தங்கை நளினி அமெரிக்காவுலேருந்து அடுத்த மாசம் வர்றா… அவ புள்ளை இந்தியாவுலதான் செட்டில் ஆவேன்னு தலை கீழா நிக்கறானாம்.. இங்கே ஒரு வீடு வாங்கணுங்கற ப்ளான்ல இருக்கா.. மீனாவை அவ தன் புள்ளைக்கு பண்ணிக்கணும்ன்னு ஒரு நெனைப்பு இருக்குமோன்னு இவர் சொல்லிக்கிட்டு இருக்கார்…”

“இந்த சமயத்துல நீங்க இப்படி ஒரு கல்லைத் தூக்கி என் தலையில போடறீங்க.. செல்வாதான் அவனுக்கு புடிச்சவளை இவளைத்தான் கட்டிப்பேன்னு, இழுத்துக்கிட்டு வந்துட்டான்.. மீனாவுக்காவது எங்க ஆசைப்படி கல்யாணம் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தோம்…” மல்லிகாவின் குரல் பிசிறடித்தது.

“மல்லிகா… எங்காத்துல நடந்த கூத்தையெல்லாம் நீ பாத்தேயில்லையா… ரெண்டைப் பெத்தோம்.. ஆசையா வளத்தோம்… அதுகளுக்கு என்னக் குறை வெச்சோம்.. கல்யாணம்ன்னு வந்தப்ப, ரெண்டும் அதது வழியை அதுகளா பாத்துக்கிட்டு போயிட்டதுகள்… எவ்வளவு நாளைக்கு அதையே நெனைச்சு பொலம்பறது..? பொலம்பறதால ஏதாவது பலன் உண்டோ? கெழங்கள் நாங்க எங்க மனசை திடப்படுத்திக்கலையா…”

“நீ திருத்தணி முருகனை கும்பிடறே.. அவா காஞ்சி வரதனை சேவிச்சிக்கிறா.. எல்லா சாமியும், எல்லா பூதமும் ஒண்ணுதான்டீ… குழந்தைகளோட ஆசைக்கு குறுக்கே நிக்காதீங்கோ.. ரெண்டுமே நல்ல குழந்தைகள்… அவா ஜோடிப்பொருத்தமும் நன்னாத்தானிருக்கு.. யாருக்கு எங்கேன்னு முடிச்சு போட்டு இருக்கோ அதை நாம வெட்ட முடியாதுடீ… இதை நீ நன்னாப் புரிஞ்சுக்கோ… வீணா மனசை கெட்டுப் போக்கிக்காதே..”

“சரி மாமீ.. உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி…”

“மல்லிகா… நான் அட்வைஸ் பண்ணலேடீ… யதார்த்தத்தைச் சொல்லறேன்.. நீ சொன்ன மாதிரி மீனா ஒரு தங்கமான குழந்தைதான்.. கறிவேப்பிலை கொத்து மாதிரி இருக்கா… ரொம்ப மிரட்டிடாதே… மின்னாடி செல்வாவோட கூச்சல் போட்ட மாதிரி இவகிட்டவும் கூவாதே…”

“சரி மாமீ…”

1 Comment

  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Comments are closed.