கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 43 8

மாமீ என்ன சொல்றா… வெளங்கற மாதிரியும் பேசமாட்டேங்கறா… சுத்தி வளைச்சுப் பேசறாளே? மீனாட்சி கல்யாணமே இவ கையில இருக்கற மாதிரியில்லா பேசறா? மீனாவோட படிப்பு முடியட்டும்ங்கறா… சியாமளாவின் நீளமான பீடிகையை கண்ட மல்லிகாவின் மனதுக்குள் ஒரு சிறிய கலவரம் எழுந்தது.

மல்லிகாவின் முகத்தில் இலேசாக மிரட்சியின் இழையொன்று ஓட ஆரம்பித்தது. மல்லிகா தன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். அறைக்கு வெளியிலிருந்த காலி இடத்தில், ஒரு பாயை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ராமசுவாமி, வந்த இடத்திலும் தன் வழக்கமான பாணியில், நடராஜனிடம் எதைப்பற்றியோ தீவிரமாக விவாதம் பண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது. நடராஜன் அவர் பேசுவதை, மவுனமாக முகத்தில் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

“என்ன சொல்றீங்க மாமீ.. சொல்றதை சட்டுன்னு நேராச் சொல்லுங்களேன்..?” மல்லிகா அவசரப்பட்டாள்.

“செல்வாவோட ஃப்ரெண்ட் சீனு இருக்கானோல்லியோ… அவன் மேல நம்ம மீனாட்ச்சிக்கு ஒரு லயிப்பு இருக்கும்ன்னு நேக்கு தோணறதுடீ…” சியாமளா பட்டும் படாமல் பேசினாள்.

“மாமீ.. மீனா இன்னும் ஒரு சின்னக்குழந்தை… உங்களுக்கு தெரியாததா? சீனு இன்னைக்கு நேத்தா எங்க வீட்டுக்கு வர்றான்… போறான்.. மீனாவும் அவனும் அப்பப்ப அவங்களுக்குள்ள சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை புடிச்சுக்குவாங்க.. ஒருத்தரை ஒருத்தர் கை நீட்டி அடிச்சிப்பாங்க.. கொஞ்ச நேரம் மூஞ்சை தூக்கி வெச்சுக்குவாங்க.. அப்புறம் அஞ்சே நிமிஷத்துல ஒண்ணா உக்காந்து சிரிச்சுக்கிட்டு இழைஞ்சுக்குவாங்க.. இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லே மாமி…”

“மல்லிகா நீ ஒரு அசடுடீ… மீனா நீ பெத்த பொண்ணு… நீ அவளை ஒரு தாயா பாக்கறே… வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கே… என்ன இருந்தாலும் நான் வேத்து மனுஷி இல்லயா? நீ பாக்கற அதே விஷயங்களை என் கண்ணும், மனசும் வேற விதமா பாக்கலாமில்லியா?”

“மாமீ… நீங்க சொல்றதும் சரிதான்.. அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா பழகறது தப்புன்னு சொல்றீங்களா? இல்லே அவங்க பண்ணது எதுவும் உங்க கண்ணுல தப்பா பட்டிருக்கா?”

“மல்லிகா… மீனா கெவுன் போட்டுண்டு இருந்த காலத்துலேருந்து அவளை நான் பாத்துண்டு இருக்கேன்… நேக்கு அவாளைப் பத்தி நன்னாத் தெரியும்… அந்த ரெண்டு குழந்தைகளையும் உண்மையை இல்லாத எதையும் சொல்லி, எக்குத் தப்பா பேசினா என் நாக்கு அழுகிப் போயிடும்..” சியாமளா தன் கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

“நீங்க என்னதான் சொல்றீங்க…?”

“மல்லிகா, இன்னும் அவா ரெண்டு பேரும் நீ நெனைச்சுண்டு இருக்கற மாதிரி, சொப்பு வெச்சுண்டு, மணல் வீடு கட்டி விளையாடற கொழந்தைகளும் இல்லேங்கறதை நன்னாப் புரிஞ்சுக்கோ.. நல்லாப் படிச்சு, வயசும் மனசும் முதிர்ந்த வாலிபக் குழந்தைகள்… குழந்தைகள் ரெண்டும் பாக்கறதுக்கு கண்ணுக்கு நெறைஞ்சு இருக்காங்க… இந்த வயசோட, அவாளாடோ இளமையின் விளையாட்டு இருக்கே அதை சாதாரணமா நீ எடுத்துக்காதேடீ… அவா மனசையும், ஒரு தாயோட ஸ்தானத்துலேருந்து வெளியில நின்னு நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணுடீ…”
“நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க…” மல்லிகா, சியாமளாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்.

“பத்து பதினைஞ்சு நாள் மின்னாடீ, உங்காத்துல, அவா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா நிண்ணுண்டு, தங்களையே மறந்து, இந்த உலகத்தையே மறந்து, பேசிண்டு இருந்தாளாம்… அவங்க இருந்த நிலைமை பாக்கறவங்களுக்கு சாதாரண நட்பா, தோழமையா தெரியாதாம்…”

“நீங்க பாத்தீங்களா மாமி…”

1 Comment

  1. Swathi raam raviraj story I continu pannuga admin super story

Comments are closed.