இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 126

“ஓ தொடப்ப கட்டையா இரு உனக்கு ஏதாச்சும் வேட்டு வைக்கிறேன்” என மனதில் நினைத்த கிஷோர் சிறிது நேரத்திற்கு முன் தன் தேவதையை வசை பாடிய அந்த பெண்ணை அழைத்து “excuse me ma’am, just now I realized I forgot to take my wallet. So I don’t have any money. But fortunately my friend is here, she will pay for me. Is that okay for you?” என தன் தேவதையை கையை காட்டி அப்பொழுதும் திட்டியவளிடம் கூறினான் கிஷோர்..

“ஐயோ இவன் என்ன இப்டி குண்டு தூக்கி போட்றான்.. இப்போ என்ன பண்றது” என குழம்பி கொண்டிருந்தாள் அந்த தேவதை.

“Oh that’s totally fine sir. I will get it from her or we will deduct it in her salary. You carry on and Please come again sir” என வாயெல்லாம் பல்லாக அவனை வழி அனுப்பி விட்டு ஒதுங்கி கொண்டால் அந்த மேலதிகாரி பெண்.

தன் தேவதை க்கு டாட்டா காட்டி கிஷோர் அங்கிருந்து கிளம்பினான்.. அவன் செல்வதை பல்லை கடித்து கொண்டு “நல்லவன் ன்னு நினைச்சா இப்டி பண்ணிட்டு போறான் பாரு” என முணுமுணுத்தாள். இருந்தாலும் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை, “ஐயோ இந்த இங்கிலீஷ் பிசாசு வெளிய போச்சுன்னா அவனை தொறத்தி போய் காசு புடுங்கிடலாம்” என தக்க சமயத்தை நோக்கி எதிர் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் கழித்து இங்கிலீஷ் பிசாசு வெளியே செல்ல.. அந்த தேவதை கிஷோரை தேடி வெளியே வர எண்ணி ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் வாசலை தாண்டியதும் அவள் வாய் தானாக மலர்ந்தது..

வெளியே கிஷோர் அவள் வருகையை எதிர் பார்த்து ஒரு தூணின் ஓரம் நின்று கொண்டிருந்தான்.. அவளை பார்த்து சிரித்தான்..

அவனிடம் வந்த அவள் “250 ரூபா சீக்கிரம் கொடுங்க.. அந்த பிசாசு வர்றதுக்குள்ள கொடுங்க.. இல்லனா நான் மறுபடியும் திட்டு வாங்கணும்”

கிஷோர்: அட நான் உள்ள சொன்னது நீங்க சரியா கேக்கலையா.. நான் purse எடுத்துட்டு வரலங்க.

அவள்: ப்ளீஸ் விளையாடாம குடுங்க.. என புருவத்தை சுருக்கி கொண்டே கெஞ்சினாள் அவனிடம்