இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 114

ஆனால் கிஷோர் மனமோ அதை ரசிக்க முடியாமல் பத்தாயிரம் ரூபாய் வாட்சில் விளையாடியதை எண்ணி அவன் மனம் பயத்தால் இருளடித்தது.. உடனே “முதல்ல அந்த வாட்ச் ஐ கொடுங்க” என அவள் கையிலிருந்து பிடுங்கி கொண்டு பாண்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்து கொண்டு “நல்ல வேளை சொன்னிங்க.. இது என் பிரண்ட் வாட்ச் ங்க..” என்றான்.

“ஓ பிரண்ட் வாட்ச் ஆ.. அதான் சார் துள்ளினீங்களா? ஹ்ம்ம் உங்க பிரண்ட் நல்ல வசதி தான் போல” என கேட்டுக்கொண்டே “சரி அதான் சொல்லியாச்சுல.. இடத்தை காலி பண்ணுங்க..” என்றாள். அவளுக்கு இவனுடைய வெகுளி செய்கைகளும் நக்கல் நையாண்டி கலந்த பேச்சுகளும் அவளை கவரவே செய்தது.. இருந்தாலும் அவளுக்குள் பயம், புதிதாக பழகும் ஆளுடன் நிறைய வைத்து கொள்ள வேண்டாம் என்று..

கிஷோரின் மனது குழம்பியது.. “என்ன இந்த பொண்ணு புரியாத புதிர் மாதிரி இருக்குது.. ஒரு பக்கம் நான் திங்குற மாதிரி பாத்தாலும் ஒன்னும் சொல்லாம சிரிக்குது.. இன்னொரு பக்கம் மொறச்சுட்டே விரட்டுது” என யோசித்து விட்டு இருந்தாலும் இந்த வாய்ப்பை தவற விடாமல் அவளிடம் நம்பரை வாங்கியே ஆக வேண்டும் என்ற குறியுடன் தன் கையில் அணிந்து இருந்த வாட்சை கழட்டி அவளிடம் கொடுத்து “இதுக்கு செல் போட்டு கொடுங்க.. இந்தாங்க” என்று கடுப்பு ஏத்தும் வகையில் பல்லை இளித்து கொண்டு நின்றான்..

அவனுடைய செயல் அவளுக்கு எரிச்சலூட்டினாலும் அவன் செய்யும் எல்லா செயலும் அவளை கவருவதற்கே என எண்ணும் போது வந்த கர்வத்தால் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளும் சென்று கொண்டிருந்தாள்..

அவனிடம் இருந்து வாட்சை வாங்கி முன்பு போல் இல்லாமல் சட்டென ஒரு நிமிடத்தில் போட்டு அவன் கையில் கொடுத்து “ஹேய் இந்தா கொண்டு போ.. முன்னாடி போய் 250 கொடுத்துரு..” என ஒருமையில் அவள் பேசிய விதம் ஒரு உரிமையுடன் பேசியது போலவே இருந்தது..

அதை உணர்ந்த அவனும் சிரித்துக்கொண்டே நகரும் போது அவன் பின்னே இருந்து ஒரு பெண் குரல் அந்த அழகான சூழ்நிலையே தலைகீழாக மாற்றி குழைக்கும் விதமாக மிகவும் அதிகாரமாக காட்டமாக “கலை!!! what the hell is happening here.. கஸ்டமர் கிட்ட இப்டி தான் வா போ ன்னு பேசுவியா” என அவள் மீது வீசியது. அதே பெண் கிஷோரிடம் திரும்பி மிகவும் சாந்தமாக பணிவாக “Sir I’m really for her behavior and please apologize her” என கூறியது..