இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 126

கிஷோர்: ஓ!! அப்படியா என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை உருட்டி சுத்தி முத்தி பார்த்து கொண்டிருந்தான்..

மிகவும் கடுப்பான கலை “என்ன நொப்படியா!! பேசணும் ன்னு பேசாம அங்கேயும் இங்கேயும் பாத்துட்டே இருக்கீங்க.. இன்னைக்குள்ள என்னன்னு சொல்லுவிங்களா?”

கிஷோர்: எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ரொம்ப (சட்டென போட்டு உடைத்தான்)

இதை இவனிடம் எதிர் பார்த்து தான் கலை இருந்தாள்.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் சொல்லுவான் என அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.. அதனாலேயே என்ன சொல்வதென்ன தெரியாமல் அமைதியாக இருந்தாள்..

கிஷோர்: கலை ஏன் அமைதியா இருக்கீங்க எதுனாலும் கோவ படாம பொறுமையா சொல்லுங்க..

கலை: இல்ல உங்களுக்கு இந்த சைட் அடிக்குறது, பின்னாடி பாலோவ் பண்றது, பேஷ்புக் ல பிரண்ட் ரெக்கோயிஸ்ட் கொடுக்குறது, அப்புறம் மாசக்கணக்கா சேட் பண்ணி நம்பர் வாங்கி, மணிக்கணக்கா போன் பேசி, கிப்ட் வாங்கி கொடுத்து அதுக்கு அப்புறம் தான் பிடிச்சுருக்கு சொல்றது லாம் தெரியாதோ.

கிஷோர்: அதெல்லாம் எதுக்குங்க.. எனக்கு அதுலாம் தெரியாதுங்க

கிஷோரின் அப்பாவித்தனமான பேச்சு ஏதோ ஒரு வகையில் அவளை அவனிடம் ஈர்த்தது..

கலை: என்னமோ உங்க அம்மா சொன்னிங்க.. என்னது

கிஷோர்: இல்ல நீங்க ஏற்கனவே ஏதோ ஒரு பையனை லவ் பண்றீங்க ன்னு எங்கம்மா ட்ட சொன்னேன்.. அது தான் அது உண்மையா இல்லையா ன்னு எங்கம்மா உங்க கிட்டயே கேக்க சொன்னாங்க..

கோபம் ஆச்சரியம் என இரண்டு உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் அவளை தாக்க அவளது இரண்டு கண் உருண்டைகளும் தானாக பெரியதாக “நான் லவ் பண்ணது எப்படி இவனுக்கு தெரியும்” என நினைத்தவள் “நான் லவ் பன்றேன்னு உனக்கு யாரு சொன்னது?” என அவனிடம் கேட்டாள் .

கிஷோர்: ராகுல் சொன்னான்.. நீங்க நிஜமாவே லவ் பண்றிங்களா (எச்சியை முழுங்கி கொண்டே கேட்டான்)

கலை: (அவன் ராகுல் என்று சொன்னதும் நமது கதையின் வில்லன் ராகுல் தான் மனதில் தோன்ற இருந்தாலும் கிஷோரிடம் உறுதி செய்ய விரும்பி) ராகுல் ஆ!! எந்த ராகுல்

கிஷோர்: இல்ல அவங்க அம்மாவும் உங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. அவனும் நானும் ஒண்ணா ஒர்க் பண்றோம் அவன் தான் சொன்னான், நீங்க ஒரு வருசமா ஒரு பையனை லவ் பண்றீங்க ன்னு.. நேத்து கூட அவன் இங்க வந்து இருந்தான் அப்போ தான் சொன்னான்.. நான் ரிப்பேர் பண்ண வாட்ச் கூட அவனோடது தான்..