இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 114

“அச்சோ சாரி ங்க. இந்தாங்க.. இந்த வாட்ச் ஓட மாட்டிங்குது, என்னன்னு தெரியல.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க”

“என்ன இவன்! ஊரே பாக்குற மாதிரி இப்டி சைட் அடிக்கிறான்! யாரும் என்னை இந்த அளவு சைட் அடிச்சது இல்ல” ன்னு அந்த பொண்ணு மனசுக்குள்ள நினைச்சிட்டு அவனை சின்னதா முரைச்சிகிட்டே கிஷோரிட்ட இருந்து வாட்ச் வாங்கி அதை திறந்து பார்த்துட்டு இருந்தால் அந்த பெண்.

கிஷோர் ஆரம்பித்தான் “தப்பா நினைக்காதீங்க! எத்தன தடவ நீங்க கூப்ட்டு நான் கேக்காம நின்னுட்டு இருந்தேன்”

சின்ன கோவத்துல இருந்த அந்த பெண் நிமிர்ந்து அவன் மூஞ்சியை பார்த்ததும் அவளை அறியாமல் உதட்டின் இரண்டு ஓரமும் சிரிப்பு எட்டி பார்த்தது.

“மூணு தடவை” அதே சின்ன சிரிப்புடன் அவனை பார்த்து சொன்னால்.. மேலும் தொடர்ந்தால் அவள் “இதுக்கு முன்னாடி “பொண்ணுங்கள பாத்தது இல்லையா?”

அவ சிரிச்சதை பார்த்து உற்சாகம் ஆன கிஷோர், “சரி கொஞ்சம் தூண்டில் போட்டு பாக்கலாம்” ன்னு நினைச்சுட்டு “பாத்திருக்கேன்.. ஆனா உங்களை இப்போ தான பாக்குறேன்”

“ஹையோ!! இதெல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்கோங்க.. என்கிட்ட வேண்டாம்” என கொஞ்சம் கிண்டலுடன் சொல்லி விட்டு “வாட்ச் ல செல் தான் போயிருக்கு, வேற போடணும், 150 ஆகும் ஓகே யா?”

“என்னங்க இது! செல் போட 150 ஆ.. எங்க வீட்டுல பக்கத்துல 50 தான்”

“ரொம்ப நல்லது.. நீங்க அங்கேயே போட்டுக்கோங்க.. இந்தாங்க உங்க வாட்ச்” என்று அவனிடம் தள்ளினாள்.