இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 126

கிஷோர் தன் அம்மாவிடம் “ராகுல் இவ்ளோ நேரம் என்கூட தான் மா பீனிக்ஸ் சூப்பர் மால் ல இருந்தான் கிளம்பும் போது கூட வீட்டுக்கு தான் போறேன் ன்னு சொன்னான்.. தம்பி அங்க போய் டைம் தான் வேஸ்ட்.. எதுக்கு அவனுக்கு இந்த CID வேலை லாம்” என சொல்லிவிட்டு தன் தம்பி தனக்காக அக்கறையுடன் இருப்பதை பற்றி நினைத்து கொண்டிருக்க

அம்சவேணி: கொஞ்ச நேரத்துல அவன் வந்துருவான்.. வந்ததும் அண்ணனும் தம்பியும் பேசிக்கோங்க.. நான் இப்போ போய் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்..

இங்கே ராம் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளையும் வாங்காமல் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பின்னாலிருந்து ஒரு கை அவன் முதுகை இருமுறை தட்டி அழைத்தது..

இங்கே ராம் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளையும் வாங்காமல் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பின்னாலிருந்து ஒரு கை அவன் முதுகை இருமுறை தட்டி அழைத்தது..

மறுநாள் மதியம் 1 மணி
இடம்: பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

ப்ரீத்தி வாட்ச் ஸ்டோரிலிருந்து கலை வெளியே வந்து கொண்டிருந்தாள்.. வேகமாக நடை போட்டு கடை வாசலை கடந்து வந்து கொண்டிருந்தவள் கடைக்கு 5 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த கிஷோரை பார்த்து அப்டியே நின்றாள்..

“என்ன இவன் நேத்து வாட்ச் ரிப்பேர் பண்ண வந்தவன் ஆச்சே.. இப்போ எதுக்கு இங்க நின்னுட்டு இருக்குறான்.. ஒரு வேல என்னை பாக்க தான் வந்துருக்கானோ.. நேத்தே அப்படி சைட் அடிச்சான்.. இப்போ அடுத்த லெவலுக்கு மூவ் பண்ணாலும் ன்னு ட்ரை பன்றானோ? இல்ல எதார்த்தமா இங்க நிக்கிறவனை நான் தான் ஓவரா இமாஜின் பண்ணிக்கிறேனா? எதுக்கு இதெல்லாம் கண்டுக்காம போறது பெட்டர்” என நினைத்து கொண்டு அவனை கடந்து சென்றாள்..

கிஷோர்: ஹே கலை..

அங்கேயே நின்று அவனை பார்த்து திரும்பியவள் தன் தலையை 25 டிகிரி வலது பக்கமாக சாய்த்து இரண்டு புருவங்களையும் ஒரு சேர சுருக்கி அவனை ஆச்சரியமாக பார்த்து “நீங்க??” என்று இழுத்தாள்..