இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 114

கிஷோர்: எப்படி லவ் பத்தி இவ்ளோ பேசுற.. கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஏதாச்சும் (அம்மாவை பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டான்)

அம்சவேணி: அடி பிச்சு போடுவேன்.. உன் தம்பிக்கு அம்மா தான் டா ஒரு வருசமா லவ் கவுன்சிலர்..

கிஷோர்: தம்பி லவ் பண்ணுறானா?? இது எப்போ இருந்தும்மா??

அம்சவேணி: என்ன நொப்ப இருந்தும்மா.. அதான் சொல்றேன்லடா ஒரு வருஷம் ன்னு.. உன்னை விட 4 வயசு சின்ன பையன் அவன்.. நீயும் இருக்கியே..

கிஷோர்: சரி விடு.. எங்க அவன்?? நான் வெளிய போகும் போது இருந்தான்.. இப்போ காணோம்??

அம்சவேணி: உன் பிரண்ட் ராகுல் ஓட சூப்பர் மார்க்கெட் க்கு போயிருக்கான் டா.. அது என்ன மரகதம் சூப்பர் மார்க்கெட் தான??

கிஷோர்: பக்கத்துல இருக்குற கடைக்கு போக வேண்டி தானே.. ஏன் அவ்ளோ தூரம் இருக்குற கடைக்கு போறான்.. என் பேரை ஏதாச்சும் டிஸ்கவுண்ட் கேட்டு அசிங்க படுத்திடாம..

அம்சவேணி: ச்சேய்!!! உன் புத்திய பாரு.. ராம் உனக்கு தம்பியா இருந்தாலும் அவன் எப்போவும் உனக்கு அண்ணன் மாதிரி நடந்துப்பான் டா.. அதான் இன்னைக்கு நீ உன் பிரண்ட் ராகுல் வாட்ச் ரிப்பேர் பண்றதுக்கு நீ எடுபிடி மாதிரி போனில்ல.. (கிஷோரின் முகம் மாற) அச்சோ மன்னிச்சுரு ப்பா, உதவி பண்ண போனில்ல.. அத பாத்துட்டு என்கிட்டே கேட்டான் அவன் வாட்ச் அவன் ரிப்பேர் பண்ணாம எதுக்கு அண்ணன் கிட்ட கொடுத்து ஏவி விட்றான்.. பணக்கார திமிரு காட்டுறான் போல அண்ணன் கிட்ட.. இவனை மாதிரி ஆளுங்க கிட்ட லாம் ஜாக்கிரதை யா இருக்கணும் இல்லனா ஏறி மேஞ்சுடுவாங்க ன்னு சொன்னான்..

கிஷோர்: ம்மா அவன் ஏவி விடல.. அவன் பிஸி ன்னு சொன்னான் அதான் நானே கேட்டேன் கொடுடா வாங்கினேன்..

மக்களே எல்லாம் பொய்.. ராகுல் பிஸி யும் இல்ல.. கிஷோர் கேட்டு வாங்கவும் இல்ல.. ராகுல் தான் ஏவி விட்டான்.. இப்போ அம்மா விடம் சமாளிக்குறான்..

அம்சவேணி: ஏதோ பிஸி டா.. அவனவன் வேலையை அவனவன் தான் பாக்கணும்.. அதுதான் முறை.. அப்புறம் அந்த பையன் ராகுல் பத்தி ராம் கேட்டான்.. நீ தான் ராகுல் பத்தி என்கிட்டே சொல்லிருக்கில்ல அது சொன்னேன்.. அப்புறம் அந்த பையன் லீவு நாள்ல சூப்பர் மார்க்கெட் ல தான் இருப்பான் ன்னு சொன்னில்ல அதுவும் சொன்னேன்.. அதான் நான் போயி அவன் எப்படி ன்னு பாத்துட்டு வர்றேன் ன்னு சொல்லிட்டு போனான்..