இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 114

ஒரே இடத்துல நின்னுட்டு அவங்களையே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்த கிஷோர் மெல்ல அவங்க பக்கம் போனான். அவன் வந்ததை பாத்துட்டு ராகுல் அவன்ட்ட சின்னதா சிரிச்சுட்டு கொஞ்சம் கூட மதிக்காம அந்த பொண்ணு பக்கம் திரும்பி பேசிட்டு இருந்தான். கிஷோருக்கு அவங்க ரெண்டு பேர் உரையாடல் ல தானும் கலந்துக்கணும் ன்னு நினைச்சாலும் எதுவும் பேசாம அவங்க ரெண்டு பேரு பக்கத்துல நின்னு அவங்க வாயையே பாத்துகிட்டு இருந்தான்.

இப்டியே ஐந்து நிமிஷம் போக ராகுல் க்கு பாடிகாடு போல கிஷோர் நிப்பதை உணர்ந்தான்..பொறுமை இழந்த கிஷோர் “மச்சி உன் வாட்ச் ல செல் தான் ப்ரோப்லேம், சோ செல் மாத்திட்டேன்.. இந்தா நான் கிளம்புறேன் நாளைக்கு ஆபீஸ் ல மீட் பண்ணலாம், பை டா” என சொல்லிவிட்டு அவன் பக்கத்துல நின்னுட்டு இருந்த அந்த பொண்ணை பாத்து மரியாதைக்காக சின்ன புன்னகை காட்டி விட்டு நகர்ந்தான்.

ஏதோ இப்பொழுது தான் அவனை கவனித்தது போல “ஹே கிஷோர், டியூட் கொஞ்சம் இரு அதுக்குள்ள எங்க போற.. இது என் பிரண்ட் சுபர்ணா, பிஸினெஸ் ரிலேட்டடா பேசிட்டு இருந்தேன் அதான் உன்னை சரியா கவனிக்கல.. கோவிச்சுக்காத. ஹே சுபு, இது என் colleague கிஷோர், 2 years ஆ ஒண்ணா ஒர்க் பண்றோம்” என்றான் ராகுல்.

“ஓ!!! இவர் பேரு கிஷோர் ஆ!!! தெரியும் ராகுல் இப்போ தான் கடைல பேசுனோம்..”

ராகுல்: ஓ!! ஆல்ரெடி பேசிட்டிங்களா சூப்பர்.. அப்போ பெருசா இன்ட்ரோ லாம் தேவை இல்ல ன்னு நினைக்குறேன்.

சுபர்ணா: ஹே இல்லப்பா!! அந்த கலை பொண்ணு இவரை வா போ ன்னு பேசிட்டு இருந்துச்சு.. கலையும் இவரும் ஆல்ரெடி பிரண்ட்ஸ் ன்னு தெரியாம அந்த கலையை திட்டிட்டேன்.. அப்போ தான் பேசுனோம்.. மத்த படி இன்ட்ரோ லாம் எதுவும் பண்ணிக்கல.. அதனால நீ தான் இப்போ இன்ட்ரோ பண்ணனும்..

என சொல்லிவிட்டு கிஷோரை பார்த்து இரண்டு கண்களையும் ஒரு சேர சிமிட்டி சிரித்தாள். கிஷோர் மனமோ “ச்சா இவ்ளோ ஜாலியா பேசுறா.. இவளை போய் திமிறு பிடிச்ச பொண்ணு ன்னு நினச்சுட்டோமே” என உச்சு கொட்டினான்.

ராகுல்: ஹே!! இப்போ தான இவனை பத்தி சொன்னேன்..