வழிமறியவள் – Part 50 34

அவனுக்கு பிடிக்காது.

பவி, பின்ன அவங்கள எப்படி நான் கூப்பிடறது.

அவங்களை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு.

ஹசன்,ஏண்டி.

பவி, நான் இந்த வீட்டுக்கு முறையா வந்தவ கிடையாது.

சொத்துக்காக உங்களை வளைச்சி போட்டுட்டேன்னு

அவங்க சொல்லீருவங்களோனு பயமா இருக்கு

பவித்ரா கண் கலங்க

ஹசன், நீ அவனை பத்தி தெரியாம இப்படி பேசுறடி

அவன் ரொம்ப நல்லவன்.

நான் ஏற்கனவே அவன்கிட்ட இது பத்தி பேசிட்டேண்டி

பவி, ஆர்வத்துடன், என்ன சொன்னாங்க

ஹசன், ஏண்டி மண்டு, நீ இந்த வீட்டுக்கு வாழ வந்தவ.

வந்து ஒரு குழந்தையும் பெத்து கொடுத்திருக்க.

உனக்கு உள்ள உரிமையை நீ விட்டு கொடுக்காத.

அவன் உன்னை சித்தியாக ஏத்துக்கிட்டான்.

பவி, ஐயோ சித்தியா…………….சிரிக்க

ஹசன், உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்.

அதனால் தான் உன்னை பேர் சொல்லியே பேச சொல்லிருக்கேன்.

நான் அப்படி சொன்னதுலே உனக்கு கோபம் இல்லையே

பவி, என்னை புரிஞ்சிகிட்ட நீங்களே இப்படி கேட்கறீங்களே,

ஹசன்,அதுக்கு இல்லை டா,

எந்த காரணத்தை கொண்டும் மனஸ்தாபம் வர கூடாது.

அதுக்கு தான்.

பவி, எனக்கு எந்த கோபமும் இல்ல பா, போதுமா,