வழிமறியவள் – Part 50 34

என்னால எப்படி தாங்க முடியும்.

ஹசன், எனக்கு ஒன்னும் இல்லைப்பா,

நான் நல்லாத்தான் இருக்கேன்.

சலீம், …………………..

ஹசன்….

அந்த சமயத்துல தான் எனக்கு உடம்பு சரி இல்லைனு

படுத்த சமயத்துல

இந்த பவித்ராதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி

என் பக்கத்துலயே இருந்து என்னை பிழைக்க வச்சவ.

அந்த சமயத்துலதான் நாங்க ஒன்னு சேர்ந்தோம்.

அவளுடைய அளவில்லாத அன்பு என்னை இவ்வளவு

பெரிய பாவம் செய்ய தூண்டியது.

அவ வாழ்க்கையை நாசம் ஆகிடுமே என்கிற கவலையை விட

அவ பாசத்தை விட்டு விட கூடாதே என்கிற கவலை தான்

பெரிசா இருந்தது.

துணிஞ்சி இந்த பாவத்தை செஞ்சேன்.

இதற்காக கடவுள் என்னை மன்னிப்பாராக.

நீயும் என்னை மன்னிச்சிரு சலீம்.

சலீம், அப்பா, என்ன பெரிய வார்த்தை சொறீங்க.

ஒரு சாதாரண மனுசனா இருந்த நீங்க

உங்க கடின உழைப்பாலே இவ்வளவு பெரிய

சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை பண்ணி இருக்கீங்க.

உங்களுக்கு இது கூட உரிமை இல்லையா என்ன.

உங்களை என்னால் புரிஞ்சிக்க முடியுது டாடி.

ஹசன், பவித்ரா விஷயம் மட்டும் இல்லைடா

நம்ம கம்பனியை உன்னை கேட்காம பவித்ரா

கணவனுக்கு கொடுத்தது………….

சலீம், உங்க உரிமை டாடி.

அதுல நான் தலையிடல.

அதுவும் இல்லாம, சதீஷிடம் இருந்து நாம பிடுங்கினதை

விட கொஞ்சமாத்தான் கொடுத்துருக்கோம்.

தன்னுடைய மகனின் பரந்த மனதை

கண்டு வியந்த ஹசன் தன் மகனை ஆர தழுவி முத்தம் கொடுத்தார்.

அப்பாவை போல பிள்ளை.