நீளமாக குப்தா பேசிக் கொண்டே செல்ல செல்ல அவர் வார்த்தைகளில் இருந்த அன்பிலும் ஏக்கத்திலும் மனம் கசிந்து உருகினாலும், இனி அவருடைய வாழ்வும் இனிமையானதாக மாறப் போகிறது, எனக்கும் அவரால் எந்த சிக்கலும் வராது என்ற எண்ணமும் மனதின் ஒரு ஓரத்தில் ஓட, நிம்மதியும், ஏக்கமும் கலந்த வினோத உணர்வில் நான் விழி மூடி குப்தாவின் குரலை கேட்டுக் கொண்டிருந்தேன்.
கடைசியாக என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல், எல்லாத்துக்கும் தேங்க்ஸ். நீங்க சொல்ற மாதிரி ஒரேயடியா என்னாலே கத்திரிச்சிட்டு போக முடியாது. ஒரு நல்ல நண்பரா உங்களை எப்பவும் என் மனசிலே வைச்சிருப்பேன். உங்களுக்கு பேசனும்ன்னு தோணிச்சுன்னா எப்ப வேணா எனக்கு போன் போடலாம் என்று சொல்லி விட்டு சில வார்த்தைகள் பேசி விட்டு காலை கட் செய்தோம்.
மனதில் அப்பாடா ப்ரசனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டன என்ற நிம்மதியோடு பார்வையை உயர்த்திய போது என் நினைப்பு தவறு என்று சொல்வது போல அங்கே ஒரு புது ப்ரசனை நின்றுக் கொண்டிருந்தது.
படுக்கையறை வாசலில் என் கணவர் நின்றுக் கொண்டிருந்தார். அவரை பார்த்த உடனே, இவர் எப்போது வந்தார்? நானும் குப்தாவும் பேசியது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாரா? குப்தா பேசியது இவருக்கு கேட்டிருக்காதே. நான் பேசியதை மட்டும் கேட்டு விட்டு இவர் என்ன நினைத்திருப்பார் என்று பலவிதமான குழப்பங்கள் ஓட, என் கணவர் ஒன்றும் சொல்லாமல் நடந்து வந்து என்னருகில் படுக்கையில் அமர்ந்து சாய்ந்து படுக்க…
நான் இனி அமைதியாக இருப்பது எந்த விதத்திலும் உதவாது என்று முடிவு செய்து இப்படி எதுவுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம் என்று கொஞ்சம் குரலை உயர்த்தியே கேட்டு விட்டேன். என் கேள்வியால் என்னை திரும்பி பார்த்த என் கணவர் ஒன்றும் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்து விட்டு, மீண்டும் திரும்பிக் கொள்ள முயல…
இப்ப நான் என்ன பண்ணனும்?
ஒண்ணும் பண்ண வேண்டாம்.
ஏன் என் கூட பேச மாட்டேங்குறீங்க?
என்ன பேசனும்?
பேச ஒண்ணுமில்லையா?
உனக்கு தான் பேச ஆள் இருக்கே.
ம்… இதானே உங்க ப்ரசனை. அதையாவது ஓபனா சொல்லித் தொலையலாமில்லே…
அதான் சொல்லிட்டேனே… இனி தொலைய வேண்டியது தான் பாக்கி.
நீங்க ஏன் தொலையறீங்க. நானே தொலைஞ்சுட்டு போறேன்.
அதான் ஏற்கெனவே தொலைஞ்சுட்டியேடி…
அறைஞ்சுடுவேன். என்னடா உன் ப்ரசனை… எப்பவும் சந்தேக புத்தி…
என்னடி எப்பவும் சந்தேக புத்தி… சும்மா ஒரு பேண்டஸிக்குன்னு ஆரம்பிச்சோம். நான் தான் ஆரம்பிச்சு வைச்சேன். என் சம்மதத்தோட தான் எல்லாம் நடந்துச்சு. ஓகே… இப்ப என்னடான்னா… ஒருத்தன் என் பொண்டாட்டிக்கு கழுத்திலே செயின் போட்டு விடுறான், அதை தாலியா நினைச்சுக்கோன்னு சொல்றான், இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிறியா, என் கருவை வாங்கிக்கிறியான்னு சாதாரணமா கேட்கிறான், லட்சக் கணக்கிலே பணம் குடுக்கிறான், கார் வாங்கி தரான், போன்லே மணிக் கணக்கா பேசுறான். நான் யாருடி இந்த வீட்டிலே….
என் கணவர் சொன்ன விசயங்களில் சிலதை அவர் மனம் கஷ்டப்படும் என்று நான் அவரிடம் சொல்லவே இல்லை. ஆனால் லாவண்யாவிடம் சொல்லி இருந்தேன்.
நான் சிரித்தேன். என் கணவர் கோபமாக என்னடி சிரிக்கிறே என்றார். இதையெல்லாம் நான் உங்க கிட்டே சொல்லவே இல்லையே. லாவண்யா கூட பேசினீங்களா? என்று என் கணவரை நேராக ஊடுருவது போல பார்த்து கேட்டேன். ஆனால் அவர் கண்கள் என் கண்களை துணிச்சலோடு சந்தித்தன.
நீ ஏன் இதையெல்லாம் என் கிட்டே மறைச்சே? என்று என்னை பதிலுக்கு கேட்டு விட்டு உற்று என் கண்களை பார்த்தார்.
நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க, லாவண்யா கூட போன்லே பேசினீங்களா? அந்த திருட்டு சிறுக்கி நான் போன் பண்ணினா எடுக்க மாட்டேங்குறா. எவன் கூட ஆட்டம் போடுறாளோ? ஆனா உங்க கூட பேச மட்டும் நேரமிருக்கும் தேவுடியாளுக்கு. இல்லை ரெண்டு பேரும் நேர்லேயே மீட் பண்ணி பேசிட்டீங்களா? பேச்சு மட்டும் தானா?
நான் கடைசியில் பொறிந்து தள்ள, என் கணவர் என் கேள்விகளுக்கெல்லாம் அசராதவராக, நீ லாவண்யாவை பத்தி என்ன வேணா சொல்லிட்டு போ. இப்படி எல்லாம் பேசினா எனக்கு கோபம் வரும்ன்னு நினைச்சா நீ ஏமாந்து போவே. அவ ஒண்ணும் என் பொண்டாட்டியும் இல்லை, வைப்பாட்டியும் இல்லை, அவ கிட்டே நான் மயங்கியும் கிடக்கலை.
மயங்கி கிடக்காம தான் நான் அந்த பக்கம் போன நிமிசமே அவளுக்கு போன் போட்டு வரியான்னு கூப்பிட்டீங்களா? அதோட முடிச்சீங்களா, என்னெல்லாம் ஆட்டம் போட்டீங்கன்னு லாவண்யா என் கிட்டே முழுசா சொல்லிட்டா என்று ஒரு பொய்யை சொன்னதும் என் கணவர் திகைத்து விட்டார்.
