உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எணணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கி விட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் என் ஆசையினை நீ அணிந்தாய் ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும் கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே…
குப்தா இந்த வரிகளை தன் கரகரத்த குரலில் சொல்ல சொல்ல என்னை அறியாமல் என் விழிகள் கசிய துவங்கின. கட்டிலில் அமர்ந்து தலையணையின் மீது முதுகை சாய்த்துக் கொண்டு, விழிகளில் நீர் மெல்ல கசிந்து திரண்டு முத்து போல கன்னங்களில் உருண்டோட, எதுவும் பேசாமல் அமைதியாக அவர் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன்.
சொல்லி முடித்து விட்டு குப்தா சில நொடிகள் நான் எதாவது சொல்வேனா என்று காத்திருக்க, பேச முடியாமல் என் நாக்கு அசைய மறுத்து அடம் பிடிக்க, குப்தா அதே குரலில் பேச விருப்பமில்லையா அம்மு என்ற போது நான் உடைந்து போனவளாக விசும்பலோடு இப்படி எல்லாம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீங்க என்றேன்.
குப்தா சில நொடிகள் அமைதிக்குப் பின் கார் பிடிச்சிருந்ததா? என்றார்.
ம்… என்று ஒற்றை சொல்லில் பதில் சொன்னேன்.
முழு தொகையும் நானே பே பண்ணிருப்பேன். உங்க பணமும் அதிலே சேர்ந்திருந்தா தான் உங்களுக்கும் ஒரு மனதிருப்தி இருக்கும்ன்னு தான் முழு தொகையும் கட்டலை.
ம்…
உங்களுக்கு எந்த ஹெல்ப்ன்னாலும் என்னை எப்ப வேணா கூப்பிடலாம் அம்மு…
ம்…
பதிலுக்கு நீங்க எனக்கு எதுவும் தரனும்ன்னு அவசியமில்லை.
சரி…
இது நீங்க என் மனசிலே வருடக் கணக்கா இருந்த பாரத்தை இறக்கி வைச்சதுக்காக நான் செய்ற நன்றி கடன்.
ம்…
வாய் திறந்து எதுவும் சொல்ல மாட்டீங்களா அம்மு…
குப்தாவுக்கு என் நிலைமையை புரிய வைக்க நினைத்தேன். அதே சமயம் அவர் மனதை புண்படுத்தவும் விரும்பவில்லை. வார்த்தைகளை யோசித்து தேர்ந்தெடுத்தேன்.
உங்க பரிசு எனக்கு பிடிச்சி இருந்தது. என் கணவருக்கு தான் கொஞ்சம் பிடிக்கலைன்னு நினைக்கிறேன் என்றேன்.
மறுமுனையில் நீண்ட மெளனம். குப்தா போனை வைத்து விட்டாரோ என்று சந்தேகமாகவும் வருத்தமாகவும் இருந்தது. டிஸ்ப்ளேவை பார்த்த பொழுது குப்தா இன்னும் லைனில் தான் இருப்பது தெரிந்தது. போனை மீண்டும் காதுக்கு கொடுத்து மிகவும் மெல்லிய குரலில்…
ஹலோ… சார்… ஸாரி… எதாவது தப்பா சொல்லிட்டனா என்ற வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் கண்களில் நீர் கசிய துவங்கி நான் விசும்பினேன்.
குப்தா பதற்றத்தோடு, அம்மு… ப்ளீஸ்… அழாதீங்க. எனக்கு எந்த கோபமும் இல்லை. உங்க மேலே எனக்கு கோபமே வராது. என் தேவதை நீங்க. ப்ளீஸ்… மனசை குழப்பிக்காதீங்க. ஒரு அஞ்சு நிமிசம் நான் சொல்றதை கேளுங்க என்றார்.
நான் விசும்பலை கட்டுப்படுத்திக் கொண்டு ம்… சொல்லுங்க என்றேன்.
உங்க நிலைமை எனக்கு புரியுது. நீங்க உங்க கணவரை நேசிக்கிற விதமும், அவர் உங்களை நேசிக்கிற விதமும் எனக்கு கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. அதே சமயம் என் வாழ்க்கைலேயும் எனக்கு இதே மாதிரி ஒரு மனைவி இருக்கா. அவளும் என்னை இதே அளவு நேசிக்கிறா. நான் அவ கிட்டே குறையா நினைச்சது செக்ஸ் விசயத்திலே அவ ஈடுபாடு காட்டாததை மட்டும் தான். இப்ப எத்தனையோ அனுபவிச்சாச்சு. யோசிச்சுப் பார்த்தா அது எல்லாமே என் மனைவியோட அன்புக்கு முன்னாடி ஒண்ணும் இல்லைன்னு தோணுது. வெறும் உடம்பு உணர்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்து உண்மையான அன்பை புரிஞ்சுக்காம இருந்துட்டேன். என் வாழ்க்கைலே இருந்த ஒரே ஏக்கமான உண்மையான அன்பும், காதலும் கலந்த ஒரு அழகான பெண் துணை எனக்கு சலிக்க சலிக்க செக்ஸ் சுகம் தராதா அப்படிங்கற ஏக்கமும் உங்களாலே ஒரு முடிவுக்கு வந்தது. என் மனசிலே இருந்து ஒரு கொடூர மிருகம் என்னை விட்டு ஓடிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க். உங்க கூட இருந்த தருணங்களை என் மனைவி கூட பகிர்ந்துக்கிட்டேன். அவ சொன்ன பதில் தான் என்னை இந்த அளவுக்கு மாத்திடுச்சு. யாருக்கும் ப்ரசனை இல்லைன்னா நீங்க அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரதில்லை எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை, நான் அவளை என் தங்கச்சி மாதிரி பார்த்துக்குவேன். உங்க இரண்டு பேர் அந்தரங்கத்திலே தலையிடாம வீட்டுலே இருந்துக்குவேன்னு சொன்னப்ப நான் நிலை குலைஞ்சு போயிட்டேன். அவ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்டேன். பதறி போயிட்டா. நிறைய பேசினோம். நான் இனி பெண்களை தேடி போவேனான்னு தெரியலை. முடிவா உறுதியா எதையும் சொல்ல முடியலை. ஆனா இப்போதைக்கு எனக்கு எல்லாம் கிடைச்சிட்ட மாதிரி ஒரு திருப்தி வந்திருச்சு. இனி எதுவும் தேவையில்லைன்னு தோணுது. உங்க வாழ்க்கைலே கண்டிப்பா குறுக்கிட மாட்டேன். என்னாலே எந்த தொல்லையும் இருக்காது. நீங்களா எனக்கு போன் பண்ற வரைக்கும் நான் உங்களுக்கு இனி போன் பண்ண மாட்டேன். எந்த உதவின்னாலும் தயங்காம என்னை கேட்கலாம் நீங்க.
