டீச்சரின் அந்தரங்கம் Part 28 3

என்ன செய்வது என்ற சிந்தனையில் குழம்பியபடி படுக்கையில் சாயலாம் என்று நினைத்த போது தான் கையிலிருந்த செல்போன் சிணுங்க துவங்கியது. டிஸ்ப்ளே குப்தா என்று காட்ட நான் கொஞ்சம் திகைத்து தான் போனேன்.

குப்தாவுடன் இருந்த அந்த இரண்டு நாட்களை பொருத்த அளவில் நான் அவருடைய வித்தியாசமான, அதே சமயம் என்னை மதிப்பாகவும் அன்பாகவும் நடத்திய வித்த்தினால் மயங்கி தான் கிடந்தேன். அதற்கும் மேலே அவரை போன்ற சமூகத்தில் பெரிய அந்தஸ்திலும், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இடத்திலும் இருக்கும் ஒரு பெரிய மனிதர் என் காலடியில் மயங்கி கிடப்பது எனக்குள் ஒரு கர்வத்தை உருவாக்கியதால், அந்த கர்வம் இன்பமாக இருந்த காரணத்தாலும் நான் அவரிடம் கொஞ்சம் அன்னியோன்னியமாக தான் பழகினேன். மனதார என் உடலை அவருக்கு விருந்தாக்கினேன். இருந்தாலும், மனதில் ஒரு ஓரத்தில், எனக்கு, இந்த உறவின் மூலம் என் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளும் திட்டமும் இருந்தது என்பதை மறுக்கவே முடியாது.

அங்கிருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கைக்குள் சென்ற பின் குப்தாவிடம் இருந்த மயக்கம் மெல்ல மெல்ல விலக, என் மனம் இந்த உறவை மேலும் நீடித்துக் கொண்டு செல்ல விரும்பவில்லை. இதனால் உண்டாகக் கூடிய சிக்கல்களை நினைத்து, போதும், இனி பட்டும் படாமல் இருந்துக் கொண்டு, இது வரை கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டு, கணவருடன் இன்பமாக வாழவும், இருவரின் உழைப்பில் கிடைக்கும் வருமானத்தை வைத்து மெல்ல மெல்ல மற்ற தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளலாம் என்றும் தான் என் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

என் மாணவர்களை பொருத்த அளவில், அவர்களுடைய நடவடிக்கைகள் இனி அவர்களால் தொல்லை இருக்காது என்று நினைக்க வைத்தது. உடல் சார்ந்த தேவைகளை பொருத்த அளவில், ஆசை தீர விதவிதமாக அனுபவித்தாகி விட்டது. இனியாவது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ முயற்சிக்கலாம், முடியவில்லை என்றால், கணவரும் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால், நம்பிக்கையான ஆண் அமைந்தால், உடல் பசிக்கு தீனி போடலாம் என்றெல்லாம் தோன்றினாலும், எந்த நிரந்தர உறவையும் உண்டாக்கி வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள மட்டும் என் மனம் விரும்பவே இல்லை. குப்தாவும் பத்தோடு பதினொன்றாக தான் இப்போது எனக்கு தோன்றினார்.

எல்லாம் அந்த கார் எங்கள் வீட்டு போர்டிகோவில் வந்து நிற்கும் வரைதான். குப்தாவின் பரிசு உண்மையில் இன்னொரு லாபம் என்ற விதத்தில் சந்தோஷத்தை கொடுத்தது என்றாலும், குப்தாவை அவ்வளவு எளிதாக கழட்டி விட்டு விட முடியாது என்ற அச்சத்தையும், அவருடைய அன்பை கண்டு நெகிழ்ச்சியும் உண்டானது நிஜம். மீண்டும் என் மனம் குழப்பத்தில் விழுந்திருந்தது.

இப்போது போன்…

என்ன பேச போகிறார்?

நான் என்ன பேசுவது? எப்படி ரியாக்ட் செய்வது? ஒன்றுமே புரியாமல் போன் டிஸ்ப்ளேவை நீண்ட நேரம் பார்த்தபடி குழப்பமாக நின்றிருந்தேன். போன் கட்டாவதாக தெரியவில்லை. வேறு வழியில்லாமல் காலை அட்டெண்ட் செய்தேன்.

போனை காதில் வைத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நான் அமைதியாகவே இருக்க, மறுமுனையில் சில நொடிகள் மெளனத்திற்குப் பின்…

மெல்லிய கரகரத்த குரல் அம்மு… என்று மெலிதான ஏக்கத்தோடு ஒலிக்க…

நான் எனக்குள் உடைந்தேன்.

மீண்டும் சில நொடிகள் மெளனத்திற்குப் பின் குப்தா தொண்டையை செரும, என்னை பதில் சொல்ல சொல்கிறாரோ, அதற்கு சமிஞ்சையாக தான் தொண்டையை செருமிக் காட்டுகிறாரோ என்று தோன்றினாலும், குப்தா தன் குரலை சரி செய்துக் கொள்கிறார் என்பதை அவர் இரண்டாவது முறை தொண்டையை செருமிய ஒலியில் புரிய…

என்ன சொல்லப் போகிறார் என்று நான் அமைதியாக காத்திருக்க…

மனதில்…

ஐயோ… இவர் பாடப் போகிறார் போல தெரிகிறதே. இந்த ஆர்வ கோளாறு இவரை விட்டு விலகவே விலகாதோ என்று நினைத்தவள், அவருடைய தமிழ் அறிவை ஏற்கெனவே நன்றாக அறிந்தவள் என்பதால், கண்டிப்பாக இவர் எப்படி பாடினாலும், பாடலின் வரிகளால் என்னை நிச்சயமாக உருக வைத்து விடுவார். பாடலுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத கட்டை குரல் என்றாலும் அதில் காதலையும் கனிவையும் கலந்து என்னை மயக்க முயற்சிப்பார், நானும் மயங்கி விடுவேன் என்று பயமாக இருக்க, எதையாவது பேச துவங்கி, அவர் பாடுவதை தடுக்க நினைத்த கணத்தில், குப்தாவின் குரல் கரகரவென ஒலிக்கத் துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *