என்ன ஆச்சு எனக்கு ? கனவில் வந்தது யார் அவன் ?இதுவரை அவன் முகத்தை நேரில் பார்த்ததே இல்லையே.எப்பொழுதுமே நல்ல விதமாக தானே கனவு வரும் .இன்று என்ன கெட்ட கனவு வருகிறது என்று குழப்பத்துடனே தூங்கி போனாள்.
வா ஸ்ருதி ,நீ மட்டும் சரியான நேரத்தில் வர,உன் கூட வேலை பார்க்கிற கீதா மட்டும் தினமும் late ஆக வருது என்று சம்பத் கேட்க ,
வந்து விடுவாள் சார்,
சரி சரி இந்தா சாவி, நீ போய் சீக்கிரம் கடை ஓபன் பண்ணு என்று சாவியை கொடுத்தான்.
சம்பத் ,SBI BANK இல் வேலை பார்க்கிறவன்.மேலே வீடு,கீழே ஒரு COMPUTER CENTRE வைத்து கொண்டு
ஆதார் கார்டு NAME CHANGE ,மொபைல் no இணைத்தல்,EB CARD BILL கட்டுதல் ,என்று பல வகை COMPUTER தொடர்பான கட்டண சேவைகள் வழங்கி கொண்டு இருக்கிறான்.இவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டு சைக்கோ மாதிரி மனைவியை அடித்து உதைத்ததால் இவன் மனைவி குழந்தையோடு அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள்.
இப்பொழுது இவன் பார்வை ஸ்ருதி பக்கம் திரும்பி உள்ளது.இவள் நமக்கு கிடைத்தால் என்ன தான் அடித்து உதைத்தாலும் இவள் நம்மை விட்டு செல்ல போக்கிடம் கிடையாது. பார்க்க வேறு செம அழகாக இருக்கிறாள் . ஸ்ருதியை அடைய சமயம் பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்.
சிறிது நேரத்தில் கீதா வந்து சேர ,
ஸ்ருதி ,சைக்கோ ஏதாவது சொல்லுச்சா?
உங்களை ஏன் லேட் என்று மட்டும் கேட்டங்கா அக்கா
ஆமா கொள்ளி கண்ணு வாயன், கொஞ்சம் லேட்டா வந்தா மட்டும் குலைக்குது. நேற்று ரெண்டு மணி நேரம் EXTRA உக்கார வெச்சு எவ்வளவு வேலை வாங்கிச்சு.வேலை வாங்கினாலும் பரவாயில்ல அவன் கண் எங்கே எல்லாம் மேயுது தெரியுமா ?என் புருசனக்கு வேலை இல்ல ,அவர் வேலைக்கு போய் விட்டால்,இவன் கிட்ட எல்லாம் யார் வேலை பார்ப்பா.
நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் அக்கா ,நானும் என் job க்கு apply பண்ணி இருக்கேன்.ரிசல்ட்க்காக காத்துட்டு இருக்கேன்.வந்த உடன் இந்த வேலையை விட்டு விட வேண்டும்.காலையில் கூட சாவி குடுக்கும் போது வேண்டும் என்றே கையை தடவி கொடுக்கிறான்.
ரெண்டு குழந்தைக்கு அம்மாவான என்னையே அந்த பார்வை பார்க்கிறான்.நீயோ பார்க்க ரதி மாதிரி இருக்க உன்னை போய் விடுவானா அவன்? எதுக்கும் அவன்கிட்ட கொஞ்சம் உஷாரா தள்ளியே இரு
