சாரு ,தேவாவின் போன் நம்பரை எடுத்து கொடுத்து
அம்மா ,இந்த UNCLE அக்காவை லவ் பண்றாங்க ,ஆனால் அக்கா love பண்ணலை.பேசாம அக்காவை இந்த அங்கிளோட சேர்த்து வைத்து விடலாம்.
கொடு அந்த போன் நம்பரை என்று கற்பகம் வாங்கி டயல் செய்ய மறுமுனையில் சிறிது நேரம் கழித்து எடுக்கப்பட்டது.
ஹலோ நான் ஸ்ருதி அம்மா பேசறேன்
சற்று திகைப்புடன் தேவா,”சொல்லுங்க AUNTY”
என் பொண்ணு ஸ்ருதியை நீங்க விரும்பறீங்க என்று கேள்விப்பட்டேன்.
ஆமாம் AUNTY
அவளை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்து கொள்வீர்களா?
கண்டிப்பாக AUNTY
அப்போ உடனே வந்து என் பொண்ணை வந்து கூட்டி கொண்டு போங்க
என்ன AUNTY ஏதும் பிரச்சினையா?
ஆமாப்பா,என்று நடந்ததை கற்பகம் சுருக்கமாக விவரிக்க..
சரி AUNTY இன்னும் அரை மணி நேரத்தில் நான் வந்து கூட்டி போகிறேன்.
சொன்ன மாதிரி தேவா அரை மணி நேரத்தில் ஆட்டோவை கூட்டி கொண்டு வர ,அவனுடன் ஸ்ருதியை அவள் சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க
ஸ்ருதி “அம்மா உங்களை விட்டு போக எனக்கு மனசு இல்ல”
எல்லாம் கொஞ்சம் காலம் தான் ஸ்ருதி ,உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் அது போதும் எனக்கு .நீ சீக்கிரம் கிளம்பு அந்த ஆள் வந்து கிந்து தொலைக்க போகிறான்.
ஆட்டோ அவளை ஏற்றி கொண்டு விரைந்தது.
ஒநாயிடம் இருந்து தப்பி ஓநாய்களின் குகையில் மாட்டி கொண்ட ஸ்ருதி எப்படி தப்பிக்க போகிறாள்.
ஆட்டோ ஒரு லாட்ஜ் வாசலில் சென்று நிற்க , ஸ்ருதியும் தேவாவும் இறங்கினார்கள்.
தேவா ,ஏன் வீட்டுக்கு போகவில்லையா என்று ஸ்ருதி கேட்டாள்
இல்ல ஸ்ருதி ,இப்போ அப்பா அம்மா முன்னாடி போய் நின்றால் அவர்கள் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்கள்.எதையாவது சொல்லி நம்மை பிரித்து விடுவார்கள்.அதனால் நாளை முதலில் திருநீர் மலை சென்று கல்யாணம் செய்து கொள்வோம்.பின்பு வீட்டுக்கு சென்றால் வேறு வழி இன்றி நம்மை ஏற்று கொள்வார்கள். இன்று ஒருநாள் மட்டும் நாம் இந்த லாட்ஜில் இங்கே தங்கி கொள்ளலாம்.
ஆனால் இந்த லாட்ஜ்யை பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு ,வேற ஒரு லாட்ஜ் பார்க்கலாம்.
வேற லாட்ஜ் எல்லாம் கணவன் மனைவி என்பதற்கு proof கேட்பார்கள்.ஆனால் இங்கே அந்த மாதிரி எந்த proof கேட்க மாட்டார்கள்.இன்று ஒரு இரவு மட்டும் தானே
இல்ல என்று சொல்ல வந்தவளை இடை நிறுத்தி
