ஸ்ருதி 479

நான் என்ன சொல்ல வரேன் என்று கேட்டு கொண்டு பின்பு பேசு

சீக்கிரம் சொல்லுங்க ,எங்க பெரியப்பா பார்த்த பெரிய பிரச்சினை ஆயிரும்.

என் பேர் தேவா ,நான் BE முடிச்சு இருக்கேன்.என் அப்பா மாதவரம் பால் பண்ணையில் MANAGER ஆக இருக்கார்,அம்மா காலேஜ் PROFESSOR,வீட்டுக்கு நான் ஒரே பிள்ளை .நான் உங்களை விரும்புகிறேன்.நான் என்ன கேட்டாலும் எனக்கு வாங்கி தந்து விடுவார்கள் .அதனால் என் முடிவை எங்கள் வீட்டில் ஏற்பது எளிது.
“இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவது என்றால்
இன்னும் மின்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்”
என்று
முன்னங்காலை மடக்கி ரோஜா மலரையும் , லெட்டரையும் நீட்ட,

ஸ்ருதி அதை வாங்கமாலே , சாரி எனக்கு விருப்பம் இல்லை .எனக்கு அப்பா அம்மா கிடையாது.எல்லாமே எங்கள் பெரியன்னை தான்.எனக்கு இந்த காதல் கண்றாவி எல்லாம் பிடிக்காது.என்னோட ஒரே இலக்கு IAS மட்டும் தான்.இதுக்கு நீங்க வேற ஆளை பாருங்க என்று ஸ்ருதி நடக்க

தேவா அவள் கையில் கடிதத்தை திணித்து இதில் என் phone no இருக்கு ஸ்ருதி ,உங்களுக்கு மனம் மாறினால் கால் பண்ணுங்க

ஸ்ருதி அதை கிழிக்க முயல,சாரு அதை வாங்கி கொண்டு “இரு அக்கா வீட்டில் போய் படிக்கலாம்,என்ன தான் ரோமியோ எழுதி இருக்கார் என்று

அவள் விலகி செல்ல ,தேவா அவள் சாப்பிட்டு விட்டு சென்ற ஸ்பூனை எடுத்து அவள் எச்சில் பட்ட இடத்தை ருசித்தான்.

ஆகா இதுவே இவ்வளவு ருசியாக இருக்கிறதே ,அதுவே அவள் இதழில் இருந்து நேரடியாக சுவைத்தால் எப்படி இருக்கும் என்று அவன் மனம் அலை பாய்ந்தது.

வீட்டுக்கு சென்ற ஸ்ருதிக்கு அந்த கடிதத்தை பிரித்து பார்க்கும் எண்ணம் கூட இல்லை.அதை சாருவிடமே விட்டுவிட்டு பெரியன்னையை நோக்கி விரைந்தாள்.

அம்மா இன்னிக்கு என்ன டின்னர்?

உருளைகிழங்கு வேக போட்டு இருக்கேன் ஸ்ருதி,நீ போய் குளித்து விட்டு வா ,சப்பாத்தி ரெண்டு பேரும் சேர்ந்து ரெடி பண்ணிடலாம்.

அம்மா ,இந்த COACHING CLASS போக கொஞ்சம் பணம் வேணும் ,கொஞ்சம் பெரியப்பா கேட்டு வாங்கி தாங்க.

சரி சரி அவர் வரட்டும் ,நான் கேட்டு வாங்கி தரேன்.

அப்புறம் அம்மா ,இந்தாங்க இந்த மாதம் பிரவுசிங் சென்டர் சம்பள பணம் எட்டாயிரம் இருக்கு .

சரி அந்த அலமாரியில் வை, நான் எடுதுக்கிறேன்.அதில் நீ நல்லதா ரெண்டு dress எடுத்துக்க வேண்டியது தானே

இல்லம்மா ,எப்பவும் போல நீங்களே எனக்கும் சாருவுக்கும் எடுத்துடுங்க

ஸ்ருதி சென்று குளித்து கொண்டு இருக்க ,வெளியில் அவள் பெரியப்பாவும் ,பெரியன்னையும் சண்டை இடும் சத்தம் கேட்டது.

இப்போ எதுக்கு அவள் IAS படிக்கணும் ஆசைப்படுகிறா?இங்கே என்ன அவ அப்பா அம்மா சேர்த்து வைத்த சொத்து ஏதாவது இருக்கா என்ன ? அதெல்லாம் முடியாது என்று அவள் பெரியப்பா கூற

அவ பெயரில் இருந்த 5 லட்சம் பணம் நீங்க தானே எடுத்துக்கிட்டீங்க,அவளாக கஷ்டப்பட்டு படித்து கவர்ன்மென்ட் கொடுத்த ஸ்காலர்ஷிப் பணத்தில் காலேஜ் வரை முடித்து விட்டாள்.இப்போ கூட அவ சம்பாதிக்கிற பணத்தில் தானே மேற்கொண்டு படிக்கணும் ஆசைப்படுகிறாள்.