ஸ்ருதி Part 14 31

ஸ்ருதி பதறி நகர்ந்து, ஐயா நான் உங்களை விட வயசில் சின்ன பொண்ணு என் காலில் போய் நீங்க விழலாமா?..

நீ வயசில் வேண்டுமானால் என்னை விட சின்ன பொண்ணா இருக்கலாம்மா? ஆனா என் உசிரையே காப்பாற்றி கொடுத்து இருக்கே! நீதாம்மா என் குலதெய்வம் .உன்னை போய் நான் எதிரியாக நினைத்து விட்டேனே! என்னை மன்னித்து விடும்மா என்று அழுதான்.

ஐயா அழாதீங்க!ஏதோ கடவுள் என் மூலமாக உங்க குழந்தையை காப்பாற்றும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கார்.அவ்வளவு தான்.நான் சாதாரண மனுஷி தான்,என்னை போய் தெய்வம் என்று சொல்லி பெரிசுப்படுத்தாதீங்க.

அதே நேரத்தில் விசயம் கேள்விப்பட்டு ஷெட்டியும் அங்கே வந்து சேர்ந்தான். ஸ்ருதி குழந்தைகளை காப்பாற்றியது அறிந்து சந்தோசப்பட்டாலும் ஆனால் ஏன் இவள் ரிஸ்க் எடுக்கிறாள் என்று வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள முடியாமல்”ஸ்ருதி வா வண்டியில் ஏறு” என்றான்.

“டேய் ஷெட்டி ஒரு நிமிஷம் நில்லு”நஞ்சுண்டா அழைக்க

என்னடா என்ன விசயம்?ஷெட்டி கேட்டான்.

இதுவரை உன்னால இந்த அரசியலில் நான் நிறைய இழந்து இருக்கேன்.உன்னை எப்போ எப்படி பழி வாங்கலாம் என்று ஒவ்வொரு நிமிஷமும் நான் யோசித்து கொண்டு இருந்தேன்.ஆனால் இந்த தேவதை வந்து என் காழ்ப்புணர்ச்சி எல்லாம் சுக்குநூறாக உடைத்து விட்டாள்.போடா போ இந்த தேவதையை வைத்து கொண்டு நல்லா வாழு.அவள் கண்களில் ஏதாவது நீர் வந்தால் அப்புறம் உன்னை நான் சும்மா கூட விட மாட்டேன்.

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இவர் ஏதாவது என்னை அடித்தால் உடனே உங்களிடம் கூறிவிடுகிறேன்” ஸ்ருதி ஷெட்டியை பார்த்து சிரித்துகொண்டே நஞ்சுண்டாவிடம் கூறினாள்.

இவன் ஏதாவது வால் ஆட்டினால் நீ ஒரு ஃபோன் மட்டும் போடு தங்கச்சி ,அப்புறம் பாரு இவன் கதியை.

என்னது தங்கச்சியா? ஷெட்டி கேட்க

ஆமாண்டா என் தங்கச்சிதான் ,என் தங்கையை வைத்து நல்லபடியாக வாழ பாரு,அப்புறம் தங்கச்சி ஒருநாள் நீ உன் புருஷனை கூட்டிட்டு இந்த அண்ணன் வீட்டுக்கு கண்டிப்பாக வரணும்.

கண்டிப்பாக அண்ணா ,என்று ஸ்ருதி கிளம்பினாள்.

என்ன இவளை சீக்கிரம் இங்கு இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைத்தால் ,இவள் என்னவோ இங்கு நங்கூரத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா போடுகிறாளே என்று மனதில் புலம்பினான்.

இவளிடம் ஏதோ வசியம் இருக்கிறது என்று என் உள்மனம் திரும்ப திரும்ப சொல்கிறது.என் நிரந்தர பகையாளி என்று நினைத்தவன் இப்போ நட்பு பாராட்டுகிறான்.மது ஒரே நாளில் இவள் பக்கம் சாய்ந்து விட்டாள்.இந்த ஊர்மக்களின் மனதை வென்று அனாசாயமாக இந்த தேர்தலில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டாள்.பிறந்ததில் இருந்து இவளுக்கு தொல்லையாக இருந்த இவள் பெரியப்பாவையும் திருத்தி விட்டாள்.ஜோடி பொருத்தம் நிகழ்ச்சியில் கூட இவளை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை செய்த அந்த நடுவர் மனதை கூட மாற்றி விட்டாள்.இவ்வளவு பேர் மனதை மாற்றிய இவளிடம் இருக்கும் ஏதோ ஒன்று அனிதாவின் மனதையும் மாற்றுமா?என்று ஷெட்டி மனம் சபலபட தொடங்கியது.

தசரதனுக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவன் ஆசை அதிகம் வைத்து இருந்தது மூன்று மனைவிகள் மேல் தான்.கோசலை,கைகேயி, சுமித்திரை மட்டுமே.அதுவும் புத்திர பாக்கியத்திற்காக பாயசம் கிடைத்த பொழுது அதை நான்கு பங்காக பிரித்தான்.அதில் முதல் இரு மனைவிகளுக்கு ஒரு பங்கும்,கடைசி செல்ல மனைவிக்கும் மட்டும் ரெண்டு பங்கு கொடுத்தான்.அதனால் சுமித்திரைக்கு மட்டும் லட்சுமணன், சத்ருக்கனன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.ஏறக்குறைய அதே போல தான் ஷெட்டி வாழ்க்கையும்,என்ன தான் அவன் வாழ்வில் அனிதா மற்றும் மது வந்து இருந்தாலும் கடைசியில் வந்த ஸ்ருதியின் மேல் மட்டும் ஏனோ அதிகம் ஈர்ப்பு உண்டானது.

அதேநேரம் அனுபமா ஸ்ருதியை கடத்த ஒரு அற்புதமான வழியை கண்டுபிடித்தாள்.டேய் ஷெட்டி உன்கிட்ட இருக்கும் பஞ்சவர்ணகிளியை இப்போ எப்படி பிரிக்க போகிறேன் பார்? அவ பிரிந்ததை எண்ணி நீ துடியாய் துடிக்கணும்.அதை பார்த்து நான் அணு அணுவாய் ரசிக்கணும் என்று வில்லத்தனமாய் அவள் சிரித்த சிரிப்பு சூனியக்காரி சிரிப்பது போல் இருந்தது.

வீட்டில் உள்ளே நுழைந்த முதல் வேலையாக ஸ்ருதி கன்னத்தில் முதல்முறை ஷெட்டி அறைந்தான்.

நீ உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்கே,அந்த ஏரி எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?உள்ளே முழுக்க அல்லி கொடியா பரவி கிடக்கு.கால் எதுனா அதில் சிக்கி உன் உசுருக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் பெரியம்மாவிற்கு நான் என்ன பதில் சொல்வது?

என் பெரியம்மாவை விட உங்களுக்கு தான் இப்போ என்மேல் உரிமை அதிகம் இருக்கு தெரியுமா?அதுவும் என் கண்முன் குழந்தைகள் துடிக்கும் போது என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.

இங்க பாரு ஸ்ருதி, நான் திரும்ப திரும்ப சொல்றேன்,நீ இங்கே நடிக்க வந்து இருக்கே,நீ வந்த வேலை முடிந்தவுடன் வேஷம் கலைத்து விட்டு போக வேண்டி இருக்கும்.அதை ஞாபகம் வச்சிக்க!

அப்ப நடிக்க வந்தவள் என்மேல கொஞ்சம் கூட உங்களுக்கு அன்பு கிடையாதா?