ஸ்ருதி Part 14 31

என்னடா,மீண்டும் மீண்டும் இழுக்கிற?ஒரு பொம்பளை நானே என்னை பற்றி கேட்டதுக்கு உடனே தைரியமா பதில் சொல்றேன்.நீ இப்படி தயங்கிற?சீக்கிரம் ஒழுங்கா என்கிட்ட உண்மையை சொல்றியா,இல்லை போலீஸ்கிட்ட சொல்றியா?

இல்லை வேண்டாம் அனுபமா,நான் உன்கிட்டயே என்னோட விவரங்களை தரேன்.என் பேரு சம்பத்,என்கிட்ட வேலை பார்த்தவள் தான் அந்த ஸ்ருதி.நான் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று முயற்சி பண்ணேன்.ஆனால் பட்சி அவ என்கிட்ட இருந்து சிக்காமல் இங்கே பறந்து வந்துடுச்சு.இப்போதான் அவ இருக்குமிடத்தை தேடி கண்டுபிடிச்சேன்.இவளை மீண்டும் தூக்க சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருக்கிறேன்.

ஹாஹாஹா ….அனுபமா சிரிக்க

என்ன அனுபமா சிரிக்கிற,

நீ அவளை தூக்குவது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.அவளுக்கு பின்னாடி யார் இருக்கிறா தெரியுமா?

தெரியும் அந்த மினிஸ்டர் தானே ?

அவன் வெறும் மினிஸ்டர் மட்டும் கிடையாது.பக்கா கிரிமினல்.இது அவன் ஏரியா.அவனுக்கு நாலாபக்கமும் ஆள் இருக்காங்க.அவ மேல கை வைச்ச அடுத்த ஒருமணி நேரத்தில் உன்னை எப்படியும் கண்டுபிடித்து கண்டதுண்டமாக வெட்டி விடுவான்.அவளை தூக்கிட்டு அவ்வளவு சீக்கிரம் இந்த ஏரியாவை ஒரு அங்குலம் கூட நீ தாண்ட முடியாது.

ஐயோ நான் அப்ப என்ன பண்ணுவேன்? எனக்கு எப்படியாவது அவ வேணுமே!

சரி நான் உனக்கு உதவி செய்யறேன்? அனுபமா சொல்ல ,சம்பத் அவளை கேள்வி குறியோடு பார்த்தான்.

எனக்கு ஒரு சந்தேகம் அனுபமா,இந்த காலத்தில் கூட பிறந்த அண்ணன் தம்பி கூட ஏதேனும் லாபம் இல்லாவிட்டால் உதவி செய்ய முன்வரமாட்டார்கள்.ஆனால் நீ முன்னே பின்னே தெரியாத எனக்கு உதவ காரணம்?

காரணம் இருக்கு,உனக்கு அவ கூட படுக்கணும்,எனக்கு அந்த மந்திரியை பழி வாங்கணும்.

என்ன காரணம்?

பின்ன இவ வருவதற்கு முன்னாடி ,அவன் எங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து கொண்டு இருந்தான்.இப்போ தீடீரென்று உத்தமன் ஆகி விட்டான்.அதுவும் அவ முன்னாடி என்னை உதாசீனப்படுத்தி விட்டான். அதனால் அவனை இவளை கொண்டு தான் பழிவாங்க வேண்டும்.

ஓஹோ அப்படியா,அப்போ இவளை எப்படி தூக்கிறது?

இரு அவசரப்படாதே,கொஞ்சம் பொறுமையாக திட்டம் போடணும்.நீ எங்கே தங்கி இருக்கே,உன் மொபைல் நம்பர் எல்லா details கொடு.அவனோட பலம் என்ன ? பலவீனம் என்ன ? என்று எனக்கு நல்லா தெரியும்?நானே திட்டம் ரெடி பண்ணி விட்டு உன்னை கூப்பிடறேன்.அவளை தூக்குவது இம்மியளவும் தவறு இல்லாமல் செய்ய வேண்டும்.ஏதாவது தவறு செய்தோம், அவ்வளவு தான் நம்ம ரெண்டு பேரை தோலை உரிச்சு தொங்கவிட்டுவிடுவான் அந்த பக்கா கேடி.சந்தர்ப்பம் பார்த்து நானா உன்னை கூப்பிடும் வரை அமைதியாக இரு என்று அனுபமா கூறி விட்டு சென்றாள்.

வழக்கம் போல் கிளாஸ் முடிந்து ஸ்ருதி வீட்டுக்கு செல்ல அப்பொழுது சாலையே பரபரத்து கொண்டு இருந்தது.ஒரு ஸ்கூல் பஸ் ப்ரேக் பிடிக்காமல் பக்கத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விட்டு இருந்தது.இதில் பல குழந்தைகள் ஏரியில் விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது. ஏற்கனவே அங்கு இருந்த இரண்டு பேர் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் இருந்தனர்.ஸ்ருதிக்கு NCC பயின்ற போது ஏற்கனவே நீச்சல் தெரியும் என்பதால் சட்டென்று காரில் இருந்து இறங்கி ஏரியில் குதித்து விட்டாள்.அவளது மின்னல் வேக நீச்சலை கண்டு அங்கு இருந்தவர் அதிசயிக்க ,மட மடவென்று தன்னால் முடிந்த வரை எட்டு குழந்தைகளை மிகவும் குறைந்த நேரத்தில் காப்பாற்றி விட்டாள். மற்ற குழந்தைகளையும் மீதம் உள்ள இருவர் காப்பாற்றி விட்டனர்.அவளின் வீரதீர சாகசத்தை பார்த்து அதற்குள் அங்கு கூடிவிட்ட ஊர் மக்கள் கை தட்டி வரவேற்றனர்.

கவுன்சிலர் அம்மா சூப்பர் ,நீங்கள் எங்களுக்கு கவுன்சிலராக வந்ததுக்கு நாங்க ரொம்ப பெருமைபடுகிறோம் என்று அவளை பாராட்டினர்.

அப்பொழுது ஸ்ருதியை தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு கேவலமாக தோற்ற நஞ்சுண்டாவும் அங்கே வந்தான்.அப்பொழுது அங்கே இருந்த பசவராஜை பார்த்து “என்னடா ஆச்சு “என்று கேட்க

ஐயா உங்க குழந்தை வந்த பஸ் ஏரியில் விழுந்து விட்டது.நல்லவேளை அந்த அம்மாவும் இன்னும் ரெண்டு பேரும் தான் எல்லா குழந்தையையும் காப்பாற்றி கொடுத்தார்கள்.

கேட்ட ஒரு நொடி நஞ்சுண்டாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இவளையா நாம் எதிரி என்று நினைத்து இருந்தோம்?ச்சே

அவன் குழந்தை அவனை நோக்கி ஓடி வர,அதை அள்ளி எடுத்து தூக்கி கொண்டான்.

அப்பா அப்பா நான் ஏரியில் விழுந்து மூச்சு கூட முடியாமல் தண்ணி எல்லாம் என் மூக்கு வாய் எல்லாம் போய் கொண்டு இருந்தது.அப்போ அந்த அக்கா தான் வந்து என்னை காப்பாற்றினார்கள் என்று கூறியது.

இதை கேட்ட நஞ்சுண்டா ஓடி சென்று ஸ்ருதி கால்களில் விழுந்து அழுதான்.