“இது நீ என் மனைவியாக நடிக்க போடப்பட்ட ஒப்பந்தம் ,அதை இப்போ change பண்ணி இருக்கேன்.”
என்ன changes
இந்த ஒப்பந்தத்தில் நீ ஒரு வருடம் கட்டாயம் நடிக்க வேண்டி இருந்தது.இப்போ நீ விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.நீ விரும்பும் தொகையை இந்த cheque இல் fill பண்ணிக்கலாம்.நீ இப்பவே இங்கு இருந்து கிளம்பினால் எனக்கும் உனக்கும் நல்லது.
அப்படி என்ன அவசியம் வந்தது நான் உடனே கிளம்ப?
குழந்தை மதனிடம் நீ காட்டும் அன்பு உன்னை இங்கேயே தங்க வைத்து விடுமோ என்ற பயம் எனக்கு,மேலும்
ம்ம் சொல்லுங்க மேலும்..
இல்லை நான் இப்போ அந்த விசயத்தை சொல்ல முடியாது.ஆனால் அதில் உன் நன்மை இருக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும்.
நான் சொல்லட்டா ,என்னை பார்த்தால் உங்களால் என்னை தொடமால் இருக்க முடியவில்லை.இப்போ நானாக என்னை கொடுக்க வந்த பிறகும் ஏதோ ஒன்று உங்களை தடுக்கிறது.முன்பு நீங்கள் நெருங்கும் பொழுது நான் விலகினேன், இப்போ நான் நெருங்கும் பொழுது நீங்கள் விலகுறீங்க.நேற்று நீங்க சென்னையில் இருந்து கிளம்பும் போது இருந்தே என்னிடம் ஒரு மாதிரி தான் நடந்து கொள்கிறீர்கள் என்று தெரியும்.ஏதோ ஒரு விசயம் என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க என்று எனக்கு புரியுது. என்று சொல்லி கொண்டே ஸ்ருதி ஒப்பந்தம் மற்றும் cheque கிழித்து போட்டாள்.
ஏய் லூசு நீ என்ன பண்ற?
எனக்கு இந்த ஒப்பந்தமோ இல்லை காசோ முக்கியம் கிடையாது.என்னை படிக்க வைங்க அது மட்டும் எனக்கு போதும்.
நீ சென்னை உடனே கிளம்பு ஸ்ருதி,மது அங்கே உன்னை படிக்க வைப்பாள்.
சரி நான் சென்னை கிளம்பறேன்.ஆனா ஒரு கண்டிஷன் ,என் கண்ணை பார்த்து பேசுங்க ,நான் இப்பவே கிளம்பறேன்.
ஆனால் ஷெட்டி அவள் கண்ணை பார்த்து பேச முடியாமல் தவிக்க,
சரிங்க ஒரு விசயம் நான் புரிந்து கொண்டேன். எங்கே என் கூட இருந்தால் உடலுறவு நடந்து விடுமோ என்று நீங்க பயப்படுறீங்க.நீங்க என்னை தொட்டு தொட்டு உணர்ச்சியை தூண்டி விட்டு விட்டீர்கள்.ஆணின் தவிப்பு தூண்டி விட்டு அடங்கி விடும், ஆனால் பெண்ணின் தவிப்பு அதை அணைக்க முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இருந்தாலும் நான் என்னோட தவிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்.நானா உங்களை தேடி வரமாட்டேன்.ஆனால் நீங்களாக என்னை தேடி வந்தால் நான் தடுக்க மாட்டேன்.so நமக்குள் உடலுறவு நிகழ்வதும்,நிகழாமல் போவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.இது போதுமா?
ஷெட்டி சற்று நிம்மதி அடைந்தவனாய்,”அப்ப சரி”
அன்று இரவு இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் தனித்தனியே உறங்க ஆரம்பித்தனர்.
ஸ்ருதி மறுநாள் வழக்கம் போல் கிளாஸ் செல்ல,அவளை ஒருவன் பின் தொடர்வதை அவள் அறியவில்லை.அவள் கிளாஸ் அறைக்குள் சென்றவுடன் அந்த இரு கண்கள் மதிலுக்கு வெளியே அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கியது.
அவனை பின்தொடர்ந்து வந்த ஒரு மங்கை ,அவனை பார்த்து யாரடா நீ ,எதுக்கு அந்த பெண்ணை நீ கண்காணிக்கிற என்று கேட்டது ?
அவளின் அளவுக்கு மீறிய ஒப்பனையும்,அணிந்து ஆடையையும்,உதட்டில் தீட்டப்பட்ட அடர்த்தியான லிப்ஸ்டிக்கும் அவள் என்ன தொழில் செய்கிறாள் என்று கட்டியம் கூறியது.
யார் இந்த இருவர்? கதையை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.ஏன் இவர்கள் ஸ்ருதியை ஃபாலோ செய்கிறார்கள்? இவர்களால் ஸ்ருதிக்கு வரப்போகும் பாதிப்பு என்ன?
டேய் யாருடா நீ ? ஏன் அந்த பொண்ணை ஃபாலோ பண்ற,அனுபமா கேட்டாள்.
எந்த பொண்ணையும் நான் ஃபாலோ பண்ணல,சும்மா தான் நான் இங்கே நின்னுட்டு இருந்தேன்.அவ்வளவு தான் சம்பத் பதற்றத்துடன் சொல்ல
டேய் உன்னை காலையில் இருந்தே நான் ஃபாலோ பண்றேன்.நீ அந்த பொண்ணு வீட்டில் கிளம்பியதில் இருந்து அவளை பின்தொடர்ந்து கொண்டே வருகிறாய்.ஒழுங்கா உண்மையை சொல்லுகிறாயா? இல்லை நான் போலீஸை கூப்பிடவா?
“அது வந்து நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல,ஆமா உன் பேரு என்ன? நீ எதுக்கு இதை கேட்கிற? உன்னை பார்த்தால் ஏதோ விவகாரமான தொழில் செய்யற மாதிரி இருக்குது” சம்பத் கேட்டான்
என் பேரு அனுபமா,நான் விவகாரமான விபசார தொழில் தான் செய்கிறேன். அதுக்கென்ன இப்போ?ஆனா உன்னை பார்த்தா என்னை விட படுகேவலமான ஆள் போல தெரிகிறது?
அது வந்து,சம்பத் திணற
