பொழுது புலர,ஷெட்டி ஒரு வழியாக பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்.ஆனால் அதற்குள் ஸ்ருதி ரெடி ஆகி தயாராக இருந்தாள்.
“உன்னோட டவல்,ட்ரெஸ் எல்லாம் மேலே எடுத்து வைத்து இருக்கேன்.சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க”ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கூறினாள்.
டவல் எடுத்து கொண்டு ஷெட்டி உள்ளே கிளம்ப,
“இருங்க உன் தலை மட்டும் தேய்க்க நானும் உள்ளே வரேன்” ஸ்ருதி கூற
“ஐயோ வேறு வினையே வேண்டாம்.நானே குளித்து கொள்கிறேன் ” என்று ஒரே ஓட்டமாக ஓடி மீண்டும் பாத்ரூமில் புகுந்து கொண்டான்.
“டேய் நீ எங்கே ஓடினாலும்,இன்னிக்கு நைட்டு இங்கே தான்டா வரணும்.” ஸ்ருதி சொல்லி சிரித்து கொண்டாள்.
கோச்சிங் கிளாஸ் செல்ல,ஸ்ருதி வர
ஷெட்டி ஸ்ருதியை பார்த்து,”ஸ்ருதி இவர் பேரு கோவிந்த்,இவர் என்னோட டிரைவர்.இவர் உன்னை கோச்சிங் கிளாஸ் தினமும் கூட்டி போய்,கூட்டி வருவார்.
அப்போ நீங்க வரமட்டீங்களா ? ஸ்ருதி கேட்க,
எப்பவுமே உன் கூடவே சுற்றி கொண்டு இருந்தால்,என் வேலையை யார் பார்க்கிறது? ஷெட்டி எரிந்து விழுந்தான்.
ஸ்ருதி முகம் இதை கேட்டு வாடியது.
ஷெட்டி கோவிந்தை பார்த்து,”கோவிந்த் சொன்னது புரிஞ்சுதா?நீ தான் கூட்டி போய் கூட்டி வர”
ஓகே சார். கோவிந்த் கூற
உனக்கு கோச்சிங் கிளாஸ் நேரமாச்சு பார், கிளம்பு கிளம்பு என்று விரட்டினான்.
எப்படியும் ஸ்ருதி கிளாஸ் முடிந்து வருவதற்குள் இங்கு இருந்து கிளம்பி விட வேண்டும்.கொஞ்சம் இங்கே வேலை பாக்கி இருக்கிறது.அதை இவள் வருவதற்குள் முடித்து விட வேண்டும் என்று ஷெட்டி வேகமாக செயலாற்ற தொடங்கினான்.நினைத்தபடி எல்லாம் நடக்க,நினைக்காத ஒன்று நடந்தது.
ஒருவேளையாக எல்லா வேலையும் முடித்துவிட்டு காரை கிளப்பி கொண்டு போக எத்தனிக்க இன்னொரு கார் உள்ளே வரும் ஹாரன் ஒலி கேட்டது.
ஐயோ அதற்குள் ஸ்ருதி வந்து விட்டாளா? என்று ஒரு நிமிஷம் ஷெட்டி பதற,காரை பார்த்தவுடன் ஒரு நிமிஷம் நிம்மதி ஆனான்.
என்ன இது,காரில் தாயம்மா வருகிறாள்?
ஷெட்டி காரை விட்டு கீழே இறங்க,என்ன தாயம்மா என்ன விசயம்?
ஐயா,காரில் குழந்தை மதன் இருக்கிறான்.அவன் அம்மா ,அம்மா என்று அழுது புலம்பியே அவனுக்கு ஜுரம் வந்து விட்டது.டாக்டரிடம் கூட்டி போய் காண்பித்தும் ஏதும் குணமாகவில்லை.குழந்தை எதுவும் சாப்பிட மாட்டேங்குது.நீங்க தான் உடனே அனிதா அம்மாக்கு ஃபோன் செய்து உடனே வர வைக்க வேண்டும்.இல்லையென்றால் குழந்தை உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
