குழந்தையை தொட்டு பார்க்க ,உடம்பு அனலாய் கொதித்தது.
என்ன தாயம்மா இது புது தலைவலி,சரி வாங்க முதலில் டாக்டரை சென்று பார்ப்போம்.
ஐயா முதலில் அனிதா அம்மாக்கு ஃபோன் போட்டு வரவைங்க.
ஷெட்டி அனிதாவுக்கு ஃபோன் போட,ஆனால் மறுமுனையில் ஃபோன் எடுக்கவே இல்லை.
அவ நாலு நாளா எனக்கு ஃபோன் பண்ணல ,இப்பவும் ஃபோன் எடுக்கல தாயம்மா.எனக்கு தெரிந்து அவ எதுனா முக்கிய வேலையா இருப்பா என்று நினைக்கிறேன்.இன்னும் ஆறே மாசம் தான் அவ கோர்ஸ் முடிவடைந்து விடும்.அதுவரை எப்படியாவது சமாளிக்க வேண்டும்.
சரியாக ஸ்ருதியும் முதல் நாள் கிளாஸ் முடிந்து உள்ளே வர,
என்ன ஆச்சு ஏன் வெளியே நிக்கறீங்க? தாயம்மா நீ எப்போ வந்தே? என்று ஸ்ருதி கேட்க
ஸ்ருதி நீ உள்ளே போ,அவங்க வேற ஒரு விஷயமா வந்து இருக்காங்க,ஷெட்டி எரிச்சலோடு கூறினான்.
ஆனால் தாயம்மா சும்மா இல்லாமல்,அது வந்தும்மா குழந்தை மதனுக்கு உடம்பு சரியில்ல.
ஐயோ மதனுக்கு என்ன ஆச்சு?மதன் எங்கே?ஸ்ருதி பதற
போச்சு எல்லாம் போச்சு ஷெட்டி தலையில் கை வைத்து கொண்டான்.
காரில் தான் இருக்கிறான் என்று தாயம்மா கூற,ஸ்ருதி ஓடி சென்று குழந்தையை தாவி எடுத்து கொண்டாள்.
குழந்தை மதன் ஒரு தாயின் ஸ்பரிஷத்தை,ஸ்ருதி தொட்டவுடன் உணர்ந்தது.மெதுவாக கண் விழித்து ஸ்ருதியை பார்த்தவுடன் அம்மா என்று அழைக்க ஸ்ருதி உடனே மார்போடு அணைத்து கொண்டாள்.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து,குழந்தைக்கு ரெண்டு நாளாக காய்ச்சலில் எதுவுமே சரியாக சாப்பிடவில்லை என்று கூற,ஸ்ருதி குழந்தையை தூக்கி கொண்டு கிட்சனுக்கு ஓடினாள்.
ஜுரத்திற்கு கொடுக்கப்படும் கசாயத்தை தன் கைகளால் உடனே தயார் செய்தாள்.
என்ன தாயம்மா இப்படி பண்ணிட்ட,அவ கண்ணிலேயே குழந்தையை காண்பிக்க கூடாது என்று இருந்தேன்.நீ வந்து காரியத்தையே கெடுத்து விட்டாயே?ஷெட்டி புலம்பினான்.
ஐயா அங்கே பாருங்க,என்கிட்ட பால் கூட குடிக்காத அந்த குழந்தை,கசப்பாக இருந்தாலும் அந்த கசாயத்தை எவ்வளவு அமைதியாக குடிக்குது பாருங்க.உங்க குழந்தைக்கு உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அந்த பெண் இப்போ தேவை.இப்போ எனக்கு எந்த பயமும் இல்ல,உங்க குழந்தை மிகவும் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது.நான் போய் குழந்தைக்கு கஞ்சி ரெடி பண்றேன்.
நான் ஒருபக்கம் வண்டியை திருப்பினா அது ஒருபக்கம் போதே என்று ஷெட்டி புலம்பினான்.
கசாயம் குடித்த பிறகு குழந்தை முகத்தில் மலர்ச்சி வர,உடனே சிறிது நேரத்தில் தாயம்மா கஞ்சி ஆற்றி கொண்டு வந்து கொடுத்தாள்.
இந்த கஞ்சியை நீயே கொஞ்சம் ஊட்டி விடும்மா என்று தாயம்மா கேட்க,
ஸ்ருதி அதை வாங்கி கொடுக்க,குழந்தை அதையும் அமைதியாக சாப்பிட்டது.
தாயம்மா ஸ்ருதியை பார்த்து “அப்பா ரெண்டு நாளாக என்னை படாதபாடு படுத்தி விட்டான்.இப்ப பாரு ஒன்னும் தெரியாத பூனை மாதிரி உங்க மடியில் தூங்குறத?.அவனுக்கு நீ அம்மா மாதிரி தெரியற,அதனால் தான் உன்கிட்ட அமைதியா இருக்கான் ஸ்ருதி.”தாயம்மா கூறினாள்.
“குழந்தைக்கு கூட புரியுது,ஆனா ஒரு சிலருக்கு தான் என்னை புரிஞ்சிக்க முடியல”,ஸ்ருதி ஷெட்டியை பார்த்து கொண்டே கூறினாள்.
ஷெட்டி எழுந்து சென்று சில நேரம் கழித்து திரும்பி வந்தான்.
ஸ்ருதி தனியே இருப்பதை பார்த்து,
“இந்தா ஸ்ருதி உன்னோட agreement and blank cheque”
“என்ன இது”
