அப்படி பார்த்தால் உங்கள் இருவருக்கு முன்னால் அவன் வாழ்வில் வந்தது நான் தானே ,எனக்கு தானே முதல் உரிமை இருக்கு.இருந்தும் அனிதாவுக்கு முதலில் தாலி கட்டிய ஒரே காரணத்தால்,அவள் அனுமதிக்காக காத்து இருக்கிறேன்.
ஒருவேளை அவள் அனுமதி கொடுக்காவிட்டால் ?
கண்டிப்பாக கிடைக்கும் வரை முயற்சி செய்வேன் மது
அப்படியும் கிடைக்காவிட்டால் ?.அது அழுத்தமாக கேட்டாள்.
ஸ்ருதி விரக்தியான புன்னகையுடன்,”உனக்கு ஒன்று தெரியுமா மது,நான் இப்போ என் வாழ்க்கைக்கான தேர்வை எழுதி கொண்டு இருக்கிறேன்.ஆனால் என் பேரில் அல்ல,தெரிந்தே தான் அனிதாவின் பேரில் எழுதி கொண்டு இருக்கிறேன்”என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.”
எனக்கு புரியலடி ஸ்ருதி,கொஞ்சம் புரியும்படியா சொல்லுடி பிளீஸ்.மது கெஞ்சினாள்.
நான் இப்போ அங்கு வாழ்ந்து கொண்டு இருப்பது என்னோட வாழ்க்கையே அல்ல மது,அனிதாவாக தான் நான் நடித்து கொண்டு இருக்கிறேன்.என்னோட வாழ்க்கையை இன்னொருவர் பேரில் வாழ்வது எவ்வளவு கொடுமையான விசயம் தெரியுமா?
என்ன ஸ்ருதி சொல்ற ,அப்படி நடிக்கும்படி உனக்கு என்ன அவசியம் வந்தது?
என்ன பண்ணுவது மது,சிறு வயதிலேயே என் அப்பா,அம்மாவை இழந்து என் பெரியம்மா ஆதரவில் வளர்ந்தேன்.ஆனால் என் பெரியப்பாவே மகள் என்றும் பாராமல் என்னை அடைய முயற்சி செய்தார்.அது முடியாமல் போகவே என்னை காசுக்காக ஒரு கிழவனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினார்.அதில் இருந்து என்னை காப்பாற்ற என் பெரியம்மா என்னை காதலித்தவனுடன் அனுப்ப ,அவன் என்னை விபச்சாரத்தில் தள்ள பார்த்தான்.அப்ப தான் இவன் என்னை காப்பாற்றி ,என் கனவையும் நிறைவேற்றுவதாக சொல்லி என்னை அனிதாவாக நடிக்க சொல்லி கேட்டான்.நானும் ஒப்பு கொண்டேன்.
இவை அனைத்தையும் பொறுமையாக கேட்ட மது,”இந்த சின்ன வயதில் உனக்கு இவ்வளவு கஷ்டமா ஸ்ருதி? இவ்வளவு பிரச்சினை சந்தித்தும் கூட உன் உதட்டில் புன்முறுவல் தவழ்கிறதே ,அதிசயபிறவி தான் நீ ?இந்த நடிக்கிற வாழ்க்கை உனக்கு வேண்டாம் ஸ்ருதி, இங்க பாரு உன் கனவை நிறைவேற்றி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டியது என் முழு பொறுப்பு.நீ என்னுடன் இப்பவே வந்து விடு
சாரி மது,நானும் யாருக்கும் கடன்பட்டவளாக இருக்க விரும்பவில்லை.இவனிடம் பட்ட கடனை நான் தான் அனிதாவாக நடித்து அடைக்க வேண்டும்.
அப்படி நான் அனிதாவாக எழுதும் தேர்வை வந்து திருத்த போவதும் அனிதா தான்.அனிதா வந்து என்னை ஏற்று கொண்டால் நான் ஸ்ருதியாக மாறி வாழ்வேன்.அவள் என்னை ஏற்று கொள்ளாவிட்டால்,அனிதா என்ற பெயருடனே இந்த ஸ்ருதி மறைந்து விடுவாள்.புரியல மலர்மாலையோ இல்லை மலர்வளையமோ கிடைக்க போவது எதுவாக இருந்தாலும் இரண்டுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.
வாயை மூடுடி,என்ன வார்த்தை சொல்லிட்ட, என்ற மதுவுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.
இல்ல மது, மூச்சுக்காற்றாய் நான் வந்தேன்,வெளியே செல்வது தானே சரி.அது போல் அவனால் கிடைத்த உயிர், அவனாலே போகட்டுமே விடு! சரி நான் வரேன் மது
ஷெட்டியை கூட்டி கொண்டு ஸ்ருதி கிளம்ப,ஷெட்டிக்கே இதை கேட்டு உண்மையில் அவன் மனம் நொறுங்கி போய் இருந்தது.மது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டு இருக்க ,
“நில்லு ஸ்ருதி,மது தொண்டை கிழிய கத்தினாள்”.அந்த சத்தம் அரங்கம் முழுக்க பேரதிர்வை உண்டு பண்ணியது.”என் கண் முன்னாடி உன் வாழ்க்கை அழிவதை என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியாதுடி” என்று சொல்லி ஓடி வந்து மது கட்டி கொண்டு அழுதாள்.
கண்களை துடைத்துக் கொண்டு பின் “உனக்கு பரத நாட்டியம் ஆட தெரியுமா ஸ்ருதி?”மது கேட்டாள்.
கொஞ்சம் தெரியும் மது .ஒரு ஆறு மாதம் போய் கற்று கொண்டு இருக்கிறேன்.
நான் பத்து வருஷமா நாட்டியம் ஆடுகிறேன்.என்னோடு போட்டி நடனம் ஆடி என்னை ஜெயித்து விட்டு நீ அவனுடன் போ?நான் ஜெயித்து விட்டால் நீ என்னுடன் தான் இருக்க வேண்டும்.
ஒருவேளை நான் ஜெயித்தால் ஸ்ருதி கேட்க ,
அது நடக்கவே நடக்காது ஸ்ருதி,உன்னை அவனுக்கு விட்டு கொடுக்க என் மனம் தயாராக இல்லை.எப்பாடுபட்டாவது உன்னை வென்றே தீருவேன்.
ஒருவேளை நான் ஜெயித்தால் ?மீண்டும் ஸ்ருதி கேட்க,
அவனுடன் நீ செல்ல நான் சம்மதிக்கிறேன் ஸ்ருதி,சோகத்தால் மெதுவான குரலில் மது கூற
சரி,எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் ,என் பெரியம்மாவை தவிர்த்து நான் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் நல்ல ஜீவன் நீ தான் மது. உனக்காக நான் இந்த போட்டிக்கு சம்மதிக்கிறேன்.
“எனக்கு இது ஒண்ணு போதும் ஸ்ருதி”,மது உற்சாகமாய் போட்டியில் ஸ்ருதியை வீழ்த்த தயாரானாள்.
