ஸ்ருதி Part 12 48

மது சொல்லி முடிக்கும் வரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதி, “தெரிந்தோ தெரியாமலோ என் மூலமா உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்குன்னு சொல்றீங்க .ஆனா இது எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது.நான் உங்களை போல நடந்து போனதை பற்றி கவலைப்படும் ஆளும் கிடையாது.எனக்கு என் வாழ்வில் என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் பக்குவம் இறைவன் எனக்கு கொடுத்து இருக்கார்.எந்த low class பொண்ணுகிட்ட பேச கெளரவ குறைச்சல் என்று நினைத்தீர்களோ,இப்போ அதே பொண்ணு கிட்ட தான் இறைவன் உங்களை பேச வைத்து இருக்கிறார்.இந்த மாற்றம் எப்படி உங்களிடம் வந்தது? சக மனிதனை சமமாய் பார்க்கும் பக்குவம் எங்கிருந்து வந்தது? நீங்கள் சுக போகங்களை விட்டு வெளியே வந்து எல்லோரிடமும் பழகிய பிறகு தானே,?நடந்ததெல்லாம் நன்மைக்கே என்று வாழ பழகி கொள்ளுங்கள்..நீங்க நல்லவங்க தான். கண்டிப்பாக உங்கள் வாழ்கையில் நல்லதே நடக்கும்.எப்பவுமே புதிதாக வருபவர்களுக்கு கொஞ்சம் மவுசு இருக்கும்.அதனால் தான் உங்களை விட்டு என் பின்னே சுற்றி இருப்பார்கள்.அதுக்காக உங்கள் அழகு குறைந்து விடுமா என்ன ?எனக்கு தெரிந்து என்னை விட நீங்க தான் அழகாக இருக்கீங்க !

அப்படியா ? மது ஆச்சரியத்துடன் கேட்க

உண்மை தான் மது , இதுவரை நான் பார்த்து கூட இராத பல விசயங்களை இறைவன் உனக்கு கொடுத்து உள்ளார்.எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது.ஏதாவது ஒரு குறை இருக்கும்.உனக்கென்ன மது?இப்போ உன்னோட அழகுக்கு நீ திருமணம் செய்ய ஆசைப்பட்டால் பலபேர் வரிசையில் நிற்பார்கள் தெரியுமா?

உண்மை தான் ஸ்ருதி, மற்றவர்களுக்கு கிடைத்ததை காட்டிலும் எனக்கு நிறையவே கிடைத்து உள்ளது.அதை நான் என்னோட comfort zone இல் வெளிவந்த போதே தெரிந்து கொண்டேன்.ஏராளமான சொத்துக்கள் என் பேரில். நான் சொல்லும் வேலையை மண்டி போட்டு செய்ய காத்து இருக்கும் பல பேர்! ஏன் இப்போ நீ நிக்கிற இடம் கூட என்னோடது தான்.

அப்பொழுது தான் ஸ்ருதிக்கு ஹாஸ்பிடல் பெயர் ஞாபகமே வந்தது . மது பல்நோக்கு மருத்துவமனை.மது,இது உன்னோட ஹாஸ்பிடலா ?

என்னடி கேள்வி இது ? ஹாஸ்பிடல் பேரிலேயே என் பேர் இருக்குதே !

அப்போ என் கணவர் பார்க்க வந்தது உன்னை தானா?அவசரப்பட்டு வார்த்தையை வெளிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.

என்னது வந்தது உன் கணவரா ?ஷெட்டி உன் புருஷனா?

ஆமாம் மது,இது என்னோட பெர்சனல்.நான் கிளம்பறேன்.அவசரமாக ஸ்ருதி கிளம்ப

நில்லு ஸ்ருதி , உனக்கும் ஷெட்டிக்கும் கல்யாணம் ஆகி விட்டதா ?

அது வந்து …

சொல்லு ஸ்ருதி ,கருணாகரன் patient relation தானே நீ ,

ஆமா ,என்று மௌனமாக தலை அசைத்தாள்.

கருணாகரன் உனக்கு என்ன வேணும்?

அவர் என் பெரியப்பா .என் மேல இருக்கிற கோபத்தை அவர் மேல எதுவும் காட்ட வேண்டாம்.

ச்சீ ,அந்த கேவலமான விசயத்தை நான் செய்ய மாட்டேன்.நான் கோபத்தை காட்ட வேண்டிய இடமே வேறு .ஓ அதுக்கு தான் பணம் அவன் கட்டி இருக்கானா ?

இன்னொரு request மது,எனக்கு கல்யாணம் ஆனது என் பெரியம்மாவுக்கு தெரிய வேண்டாம்.

சபாஷ் அப்படி போடு இது வேறயா,உன்னை பழி வாங்கும் சந்தர்ப்பத்திற்காக நானே காத்து கொண்டு இருக்கேன்.எனக்கு அல்வா மாதிரி விசயங்களை நீயே எடுத்து கொடுக்கிறாயே!

“பிளீஸ் மது என் பெரியம்மாகிட்ட மட்டும் சொல்ல வேண்டாம்”என்று ஸ்ருதி கெஞ்ச ,

உன் பெரியம்மாவுக்கு இந்த விசயம் தெரிய கூடாது என்றால் இப்போவே உன் புருஷன் கிட்ட என்னை கூட்டிட்டு போ.

சரி வாங்க ,தயக்கத்துடன் கீழே பார்க்கிங் செல்ல,போகும் வழியில்

ஸ்ருதி ,உன் புருஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது அது தெரியுமா ?அவ பேர் அனிதா .

தெரியும் மது ,அனிதா இந்த மருத்துவமனையில் தான் வேலை பார்த்தாள் என்று கூட தெரியும்.

அப்ப தெரிஞ்சு தான் அவன் கூட கள்ள தொடர்பு வைத்து இருக்கிறாயா? இந்த கேள்வி முள்ளை போல ஸ்ருதி நெஞ்சில் தைத்தது.