ஸ்ருதி Part 12 48

இப்படி தான் வர்றவங்க முகத்தை கூட பார்க்காமல் எல்லோருக்கும் வைத்தியம் பார்க்கறீங்களா சிஸ்டர் ? ஐயோ வலிக்குதே

சார் சும்மா என்னையே குறை சொல்லாதீங்க ,நான் வேலைக்கு புதுசு .நீங்க தான் என்னோட முதல் patient.ஏதோ ஒரு ஆர்வத்துல செய்து விட்டேன்.பல் தானே போன போகுது விடுங்க.

என்னது முதல் பேஷன்ட்டா ! உன்னை …. ஐயோ பல் வலிக்குதே.

சார் இந்தாங்க pain killer மாத்திரை இதை போட்டுங்க ,சரி ஆகிவிடும்.

வலியையும் கொடுத்து விட்டு, வலி மாத்திரை வேறயா ! மாத்திரை சரியான மாத்திரை தானா check பண்ணி கொடுங்க ,

அப்புறம் இந்தாங்க சார்,.

என்னதும்மா இது ?

பில் சார் ,வெற்றிகரமாக ரெண்டு பல் பிடுங்கி இருக்கேன்.அதுக்கான சர்வீஸ் சார்ஜ்

உங்க ரெண்டு பேரையும்… அடிக்க ஷெட்டி கை ஓங்க ,ஒடுடா ஒடுடா ரெண்டு பேரும் பதறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

ஃபோன் எடுக்கல மது ,ஸ்ருதி சொல்ல

அவன் எப்படி எடுப்பான்.நீயும் நானும் ஒண்ணா இருந்ததை பார்த்து இருப்பான். அதனாலே கண்டிப்பாக எடுக்க மாட்டான்.எனக்கு வேற நேரம் ஆச்சு என் குழந்தைகள் வந்து விடுவார்கள்.இது இங்கே பேச வேண்டிய விசயம் கிடையாது.public place ஆக வேறு இருக்கு.
நீ என்ன பண்ணு,உன் புருஷனை கூட்டி கொண்டு சாயங்காலம் 4 மணிக்கு நாம படிச்ச காலேஜ் auditorium
வந்து விடு.செமஸ்டர் லீவு இருப்பதால் என்னை தவிர வேறு யாரும் அங்க இருக்க மாட்டாங்க.வாட்ச்மேன் கிட்ட நான் சொல்லிக்கிறேன்.நம்ம பஞ்சாயத்தை அங்கே வச்சிக்கலாம்.எங்கே தொலைத்தோமோ அங்கே தானே தேடி எடுக்க முடியும்.ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகலாம் என்று நினைக்காதீங்க.அப்புறம் உன் பெரியம்மாகிட்ட உன் விசயம் ஒன்னு விடாம சொல்லி விடுவேன்.

இல்லை மது ,நான் கண்டிப்பாக கூட்டி கொண்டு வரேன்.

இன்னொரு முக்கியமான விசயம்.உன் புருஷன் கிட்ட என்னை தான் பார்க்க போகிறேன் என்று சொல்லாதே.அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி டிமிக்கி கொடுக்க பார்ப்பான்.எப்படியாவது நைசா பேசி கூட்டி வா.இன்னக்கி உனக்கும் எனக்கும் இருக்கிற பழைய கணக்கை எல்லாம் நேர் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு.

மது தான் ஸ்ருதியை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சந்தோஷமாக செல்ல,ஸ்ருதி என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்துடன் நின்று கொண்டு இருந்தாள்..

என்னடா இது ,நம்ம நேரம் lift கூட வந்து தொலைய மாட்டேங்குது ,ஷெட்டி புலம்ப
சரி படிக்கட்டில் இறங்குவோம்.

லிஃப்ட்க்கு காத்து இருக்காமல் கீழே படிக்கட்டில் ஷெட்டி இறங்கவும்,அப்பொழுது மது லிஃப்ட் திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

படிக்கட்டில் ஷெட்டி கீழே இறங்கும் போது ,”சண்டாள சிறுக்கி ,பல்லையும் பிடுங்கி விட்டுட்டு காசையும் கேட்கிறா !”

அப்பொழுது காமெடி நடிகர் வையாபுரி போன்ற ஒரு நபர் அவள் காதலியிடம் போனில் பேசி கொண்டு இருந்தான்.

“கண்ணே இந்த உலகத்திலேயே பெரிய வலி எது தெரியுமா ? அது இந்த காதல் பிரிவினால் உண்டாகும் வலி தான்.”

இதை கேட்ட ஷெட்டி ,என்னப்பா சொன்னே ?

ஒன்னும் இல்ல சார் ,காதல் பிரிவினால் வரும் வலி தான் இந்த உலகத்திலேயே பெரிய வலி என்று சொன்னேன்.

ஷெட்டி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட அவன் வாயை பிடித்து கொண்டு “அம்மா என் பல்லு” என்று அலறினான்.

” போ,இப்போ போய் பல்லை புடுங்கு.இப்போ தெரியுமடா எது கொடுமையான வலி எது என்று .பார்க்,பீச் தான் இவங்க தொல்லை என்று பார்த்தால் ஹாஸ்பிடல் கூட விட மாட்டாங்க போல் இருக்கு”

ஸ்ருதியும் மதுவும் ஒண்ணா இருக்காங்களா இல்லை ஸ்ருதி மட்டும் தனியாக இருக்காளா என்றே தெரியலையே .தனியா இருந்தா அப்பிட்டு ஆவோம்.ஒண்ணா இருந்தா இன்னொரு ரவுண்ட் repeat.இப்போ அப்பிட்டா,ரீப்பிட்டா என்றே தெரியலையே.என்ன நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு.இதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான் என்று கவுண்டமணி போல் புலம்பி மெதுவா எட்டி பார்த்தான்.

ஸ்ருதி தனியாக காரில் சாய்ந்து கொண்டு நகத்தை கடித்து கொண்டு நின்று இருப்பதை பார்த்து,சுற்றும் முற்றும் பார்க்க அப்பாடா மது இல்லை ,ஸ்ருதியை கூட்டிட்டு உடனே கிளம்ப வேண்டியது தான்.

வா ஸ்ருதி கிளம்பலாம்.ஷெட்டி அவசரப்படுத்த

எங்கே போய் இருந்தீங்க ,நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கல,கன்னத்தில் ஏன் கை வைச்சு இருக்கீங்க .

ஸ்ருதி நீ முதலில் வண்டில ஏறு,அப்புறம் பேசிக்கலாம்.டிரைவர் நீ வண்டிய லீ மெரிடியன் ஓட்டல் சீக்கிரம் விடுப்பா .

கார் கிளம்ப, ஸ்ருதி அந்த தண்ணி பாட்டில் கொஞ்சம் எடுத்து கொடு.

வலி மாத்திரை போட்டு கொண்டு தண்ணி குடித்த ஷெட்டி,

அது ஒன்னும் இல்ல ஸ்ருதி , பல் ரெண்டு சொத்தையா இருந்தது .அதை போய் புடிங்கிட்டு வந்தேன்.அவ்வளவு தான்.அதான் ஃபோன் எடுக்கல.

“ஆமா ,நீங்க யாரோ ஒரு பொண்ணோட போனதாக டிரைவர் சொன்னாரே.”வேண்டுமென்றே தெரியாதது போல் ஸ்ருதி கேட்க

அது இந்த ஹாஸ்பிடல் MD ,நான் தான் எனக்கு இந்த ஹாஸ்பிடல் MD தெரியும் ,அனிதா இங்கே தான் வேலை பார்த்தாள் என்று சொன்னேன் இல்ல.

சரி ,சாயங்காலம் என்னோட ப்ரெண்ட் பார்க்க மாதவரம் வரை போகனும்.

என்ன விளையாடிறீயா ஸ்ருதி,நைட் 9 மணிக்கு பிளைட் .நான் வேற என்னென்னவோ கற்பனை பண்ணி வைத்து இருந்தேன்.இன்னிக்கு இரவே எல்லாம் நடக்கும் என்று.ஆனா இப்போ இருக்கிற வலிக்கு எதுவும் முடியாது போல இருக்கே.ஹோட்டல் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு நாம உடனே ஏர்போர்ட் கிளம்பறோம். அவ்வளவு தான் நான் சொல்லிட்டேன்.