ஸ்ருதி Part 12 48

நான் கள்ள தொடர்பு எல்லாம் வைக்கல மது,எனக்கு முறைப்படி தான் அவர் தாலி கட்டி இருக்கார்.சொல்லும் போதே ஸ்ருதி குரலில் அழுகை வந்தது.
அதுவும் எதிர்பாராத விதமாக தான் எங்களுக்குள் கல்யாணம் நடந்து விட்டது.இருந்தாலும் அனிதா வரும் வரை இருவரும் காத்து இருப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

இதை நான் நம்பனும்,இதுவரை அவன் உன்னை தொடாமலா இருந்து இருப்பான்.யார் கண்டது நீ இந்நேரம் அவன் வாரிசை கூட சுமந்து கொண்டு இருக்கலாம்.

இல்ல மது அவன் என்னை தொட்டு இருந்தாலும் நாங்க இன்னும் வரம்பு மீறவில்லை.வரம்பு மீற இருந்த சமயம் தான் என் பெரியப்பாவுக்கு accident என்று ஃபோன் வந்தது.அதனால் எங்களுக்குள் அந்த விசயம் நிகழவில்லை.

உன் பெரியப்பா என்று சொன்னதால் நான் இப்போ நம்பறேன்.ஆனால் இந்த உறவை இதோட நிப்பாட்டு.அனிதாவுக்கு மட்டும் இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவு தான்.

ஒருவேளை அனிதா வந்து எங்களை ஏற்றுக்கொண்டால் ?

செம்ம joke,அனிதா வந்து உன்னை ஏற்று கொள்வாள் என்ற நப்பாசை வேற இருக்கா உனக்கு.இரு இரு உங்க ரெண்டு பேருக்கு இன்று செமையா இருக்கு

கீழே வந்து டிரைவரை பார்த்து ஸ்ருதி ,”சார் வந்தாரா டிரைவர் ”

என்னம்மா ,முதலில் நீங்க வந்து கேட்டுவிட்டு மேலே தேடி போனீங்க .அப்புறம் அவர் வந்து உங்களை தேடி மேலே போனார்.முதலில் உங்க கூட இருக்காங்களே , அவங்க கூட தான் அவர் மேலே போனார்.

ஸ்ருதி போனில் ஷெட்டியை அழைக்க , அங்கு பிரமாதமாக அவனுக்கு பல் பிடுங்கப்பட்டு கொண்டு இருந்தது .

சிஸ்டர் அந்த லெஃப்ட் கடைவாய் பல்லு சொத்தையாக இருக்கு பாருங்க ,அதை பிடுங்குங்க,

இருடா ,right side ஒரு சொத்தை பல் இருக்கு.அதை எடுத்துவிட்டு நான் left side வரேன்.இந்த பக்கமே புடுங்க வேண்டிய பல் நிறைய இருக்கு

அய்யோ விட்டால் மொத்த பல்லையும் பிடுங்கி என்னை பொக்கை வாய் ஆக்கி விடுவாங்க போல் இருக்கே என்று ஷெட்டி தவித்து கொண்டு இருக்க

சிஸ்டர் என்று குரல் கேட்டது.

சிஸ்டர் பில்லை கட்டி விட்டு வந்துட்டேன் என்று வேறொருவன் உள்ளே நுழைய

அப்போ இது யாரு ? சிஸ்டர் கேட்க

ம்ம்ம்ம்மம் வார்த்தை வராமல் ஷெட்டி கூக்குரல் இட

டேய் அவர் வாயில் இருந்து கிளிப் எடுடா ,சிஸ்டர் சொல்ல

ஏன் சிஸ்டர் யார் என்னவென்று எல்லாம் பார்ப்பது இல்லையா ? அப்படியே பல்லை பிடுங்கி விடுவதா ? அய்யோ பல் வலிக்குதே என்று கத்தினான்.

சாரி சார்,நான் சரியா பார்க்கல.