ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 4 24

” என்மேல கோபமாருக்கியா..?”
”ம்…!!”
”ஏதாவது திட்டிறேன்…”
” திட்னா…?”
” உன் கோபம் கொறையுமில்ல…?”
” இப்ப கோயிலுக்கு.. எதுக்கு போறோம்…?”
” சாமி கும்பிடறதுக்கு… இல்ல…” எனச் சிரித்தாள்.
”பரத்..அங்க இருப்பானா..?”
”ம்..! தெரியல..”
” அவனப் பாக்கத்தான… போறே..?”
”ச்சே… இல்ல..! கோயிலுக்கு போனா… நெறையப்பேரு இருப்பாங்க..! கொஞ்சம் ஜாலியா இருக்கும்..! உனக்கு புடிக்கலியா..?”
” புடிக்கலேன்னா என்ன பண்ணப்போறே..?”

சுரத்தற்ற குரலில்.. ” ஒண்ணும் பண்ணப்போறதில்லே..” என்றாள்.
”அப்ப பேசாம நட…”

அவன் மனம்விட்டுப் பேச மறுத்தான். அதனால் அவளும்.. அவனை அதிகமாகத் தொந்தரவு செய்யவில்லை.
காளீஸ்வரி வீட்டைக்கடந்த போது… ஆவலுடன்.. அந்த வீட்டைப் பார்த்தாள். எதுவும் தெரியவில்லை.
ராசு இருப்பதால் அங்கு… போக முடியவில்லை. நேராகக் கோவிலுக்குப் போனார்கள்.

கோவில் திருவிழா.. களைகட்டியிருந்தது. அங்கங்கே ஸ்பீக்கர் பாக்ஸ்கள்.. அலரிக்கொண்டிருந்தன. கோவிலின் முன்புற வீதிகளில் சீரியல் பல்ப்புகள்… கலர்..கலராக எரிந்தது.
கோவிலின் எதிர் பக்கம் இருந்த… காட்டுக்குள்… இரண்டு விதமான.. ராட்டின தூரிகள் போடப்பட்டிருந்தது.
கோவிலின் முன்பாக.. மத்தளங்கள் அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் முன்பாக நிறைய இளவட்டங்கள்… ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

ராசுவின் கையைப் பிடித்து.. இழுத்துக்கொண்டு… எல்லாப்பக்கமும் ஒரு ரவுண்டு அடித்தாள். எதிர்ப்பட்ட… நிறையப் பெண்கள்… அவளுடன் ஆர்வமாகப் பேச… அவளும் பேசினாள். எல்லாம் அவளது கல்யாணம் பற்றித்தான் இருந்தது.

ஒரு சுற்று… சுற்றி வந்தபோதும் பரத்தையோ.. அவளது தம்பியையோ.. பார்க்க முடியவில்லை.

”தம்பிவே.. காணம்..” என அங்கலாய்த்தாள்.

ஒரு கால்மணி நேர இடைவெளியில்… காளீஸ்வரி.. அவளைக் கண்டுபிடித்து விட.. அவளுடன் ஒட்டிக்கொண்டாள் பாக்யா.
பேச்சு வாக்கில் கேட்டாள். ”அவன் எங்கக்கா..?”
” இங்கதான் எங்காவது இருப்பான்..”
” ஆள் கண்லயே பட மாட்டேங்கறான்..”
” பசங்க ஆடற எடத்துக்கு.. போனா…அவன பாத்துருலாம்.. வா..!”
”ஐயோ… எங்க மாமா இருக்குக்கா…”
”இதான் உங்க மாமாவா..?”
” ம்…”
” கூட்டிட்டு வா… அவங்களையும்…”

மெதுவாக ராசுவின் பக்கத்தில் போய்.. ”வா ராசு… அவங்க ஆடறத போய் பாக்கலாம்..” எனக் கூப்பிட்டாள்.
” நீ வேனா… போ..” என்றான்.
”நீ..?”
” இருக்கேன்…!”
” வாடா…” அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

அவன் வரவில்லை. ”இந்த கூளச்சிதான்.. காளீஸா..?” எனக் கேட்டான் ராசு.
” ம்…! வா பையா..! அங்க போலாம்..!” எனச் சிணுங்கலாக அழைத்தாள்.
” நீ போன்னு சொல்றேன் இல்ல…” என கொஞ்சம் அதட்டலாகச் சொன்னான்.
” சரி… நீ இங்கயே இரு..!” என்று விட்டு… காளீஸ்வரியுடன் போனாள். அவள்களுடன் இன்னும் இரண்டு பெண்கள் சேர்ந்து கொள்ள… கோவில் முழுவதும் சுற்றி வந்தார்கள். அப்போதும்.. பரத்தைப் பார்க்கவே முடியவில்லை.

கோவில் முன்பாகவே…பஸ்ரோடு இருந்தது. ராசு பஸ் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தான். அவ்வப்போது… அவனைப் பார்த்துக்கொண்டு… காளீஸ்வரியுடன் பேசிக்கொண்டிருக்க… அவளது பெற்றோரும். ..அவர்களுடன்.. அவளது தம்பியும் வந்துவிட்டனர்.
ராசுவுடன் சேர்ந்து… அவர்களும் அங்கேயே நின்று கொள்ள… அவளது ஆவல் முழுக்க… பரத்தைத் தேடுவதிலேயே இருந்தது.

மேலும் ஒரு… அரைமணிநேரம் கழிந்திருக்க… ரோட்டில் பஸ் வந்தது. வந்த பஸ்… கோவில் முன்பாக நின்றது..!
அவள் பஸ்ஸைப் பார்க்க… அதன் முன்புறப் படியில் ஏறி நின்று அவளுக்குக் கை காட்டினான் ராசு.

குழப்பத்தில் புரியாமல்.. அவள். . ‘எங்கே..?’ என ஜாடையில் கேட்க…
‘ பாட்டி ஊருக்கு. ‘ என ஜாடை செய்து விட்டு… உள்ளே போய்விட்டான்.

அந்த பஸ்.. அவனுக்காகத்தான் நின்றிருக்கிறது.. அவனைத் தவிற.. வேறு யாருமே ஏறவில்லை.
பஸ் போக… அவள் மனசு உடைந்தது.
‘இப்படி திடுதிப்பென்று.. அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் பஸ் ஏறிவிடுவான்’ என அவள் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை..!!

ராசு மிகவும் புண்பட்டிருக்க வேண்டும் எனத் தோண்றியது. அதனால்தான்…அவளிடம் சொல்லாமலே.. கிளம்பிவிட்டான்.
அந்த பேருந்து போய்விட்டு… இதே வழியாகத் தான் திரும்பி வரும்… ஒருவேளை அதில் திரும்பி வந்து விடுவானோ.. என்றுகூட எண்ணினாள்.

ராசு போன சில நிமிடங்களிலேயே… அவளிடம் வந்தான் கதிர்.
”அப்பங்கூப்டுது…வா..” என்றான்.
”எதுக்குடா…?”
”ஊட்டுக்கு போலாங்குது…”
”இப்பாலயேவா…?” என மனமின்றி… அவன் கையைப் பிடித்து நிறுத்திக்கேட்டாள்.
”பரத் எங்கடா..?”
” அந்தண்ணா… ஓனருகூட போயிருச்சு. ..”
”எங்கடா போனாங்க…?”
”தெரில…வா..!” என்றுவிட்டு அவன் முன்னால் நடக்க….

காளீஸ்வரியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பாக்யா.

ஊரைத்தாண்டி நடக்கும்போது… பொதுவாகக் கேட்டாள்.
” மாமா.. எங்க போகுது..?”

உடனே அவள் தம்பி ”ஆத்தா ஊருக்கு…” என்றான்.
”அங்க எதுக்கு… இந்நேரத்துல போகுது..”
”எனக்கு தெரில… அப்பன வேனா.. கேளு..” என்றான்.

ஆனால்… அவளும் கேட்கவில்லை. அவர்களும் பதில் சொல்லவில்லை.

வீட்டுக்குப் போனதும் படுத்து விட்டாள்.
ஒரு பக்கம் பரத்தைப் பார்க்க முடியாத ஏக்கம்… மறுபக்கம்… ராசு அவளை அலட்சியப் படுத்திவிட்டுப் போய்விட்ட.. துக்கம்… என இரண்டும் அவளை வாட்ட… வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தாள்.
உணவைப் போட்டு வைத்து விட்டு… அவளை எழுப்பினாள் அம்மா.
”ஏய்….எந்திரிச்சு சாப்பிட்டு படுறீ..”
”ம்…” என முணகிவிட்டு… எழாமலே படுத்திருந்தாள்.

அப்பறம்… அவள் அப்பா ஒரு சத்தம் கொடுக்க… உடனே எழுந்து விட்டாள்.
உண்ணவே முடியவில்லை. மனதுக்குள்… குமுறல்.. பொங்கிப் பொங்கி வந்தது. பெயருக்கு சாப்பிட்டு விட்டு… மறுபடி படுத்துக் கொண்டாள்.

நள்ளிரவுக்கு மேலாகியும் தூக்கம் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்து… உடம்பெல்லாம் வலித்தது.
இன்னொரு பக்கம் அப்பா குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.

மறுநாள் காலை…!!
அவள் கண்விழித்தபோது…வீட்டுக்குள் யாரையும் காணவில்லை. விரியத் திறந்து கிடந்த கதவு வழியாகத் தெரிந்த… சூரிய வெளிச்சம்.. அவள் கண்களைக் கூசச்செய்தது.
புரண்டு மணியைப் பார்த்தாள். ஒன்பதரையாகியிருந்தது.
மெதுவாக எழுந்தாள். மேலே எழுந்து நிற்க… இடுப்பிலிருந்த புடவை எல்லாம் நழுவிக்கொண்டு போனது.
நகர்ந்து நின்று… புடவையை மொத்தமாக உருவி… புதிதாகக்கட்டினாள். பாயைச் சுருட்டி வைத்து விட்டு… வெளியே போக…. பயங்கரமாக கண்கள் கூசியது.
லேசாக தடுமாறி.. பாத்ரூம் போனாள். தண்ணீரில் முகம் கழுவ… கொஞ்சம் சோம்பல் நீங்கியது.

4 Comments

  1. Full story padichiten ya..semmmaa…super….waiting for next part….

  2. Bro vera level intha kathai en valkaila nadanthiku bro ana relationship than vera

  3. Next part podunga. Story romba interesting a irukku.

  4. Really good story natural in family incidents in true story

Comments are closed.