ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 4 24

பொதுவாக… இப்போது அவளுக்கு எந்த வேலையையும் வைப்பதில்லை அவளது அம்மா. தண்ணீர் எடுப்பது முதற்கொண்டு எல்லாம் அம்மாளே.. செய்து விடுகிறாள்.

வீட்டிற்குள் போய்… கதவருகிலேயே..சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள். இப்போது அவளுக்கு.. பேசுவதற்குக்கூட ஆளில்லை.
ஒரு அரைமணிநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். மனதுக்குள்… பலவிதமான…கற்பனைகளும். .. யோசணைகளும் ஓடியது…!
அப்பறம் ஒரு பெருமூச்சு விட்டு… எழுந்து வெளியே போய்க் கதவைச் சாத்திவிட்டு… பள்ளத்துக்குப் போனாள்.
அவளது பெற்றோர் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அவள் மறுபடி வீடு வந்து…பல் தேய்த்து…முகம்…கை.. காலெல்லாம் கழுவிக் கொண்டு போய்..சாப்பாடு போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது… ராசு வந்தான்.

அவனைப் பார்த்தவுடன்… அப்படியொரு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. அவனையே முறைத்துப் பார்த்தாள்.

சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் வந்தவன்..
”இப்பத்தான் சாப்பிடறியா..?” எனக் கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல்.. அவனையே முறைத்துப் பார்த்தாள்.

அவள் முன்பிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவன்..
”சரி… சாப்பிடு..” என்றுவிட்டு வெளியே போய்விட்டான்.

போனவன் வரவில்லை. சாப்பிட்டு விட்டு எழுந்து… தட்டை வெளியே.. எடுத்துப் போய்க் கழுவி விட்டு நிமிர்ந்து பார்க்க… அவளது அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தான் ராசு.
தட்டைக்கழுவிப் போய் உள்ளே வைத்து விட்டு வந்து.. வாசலில்… நின்று..அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் நிற்பதை அவனும் பார்த்தான்.
நீண்ட நேரமாகியும் அவன் வராமல் போக… அவன் மேல்.. ஒரு எரிச்சல் வந்தது. .பொருமையிழந்து… ஓரமாகக் கிடந்த இரண்டு செங்கல்களை எடுத்து வந்து. .. கதவின் முன்னால் போட்டு…வெயிலிலேயே உட்கார்ந்து கொண்டு… ஒரு சின்னக் குச்சியை எடுத்து… நிலத்தில் கீறத்தொடங்கினாள்…!

‘B B’ என இடைவெளிவிட்டு… ஆழமாகக் கீறினாள்..!! கீறிக்கொண்டே இருந்தாள்…!!

நீண்ட நேரம் கழித்து…ராசு வந்தான்.
அவளிடம் வந்து…
”ஏதாவது வேண்டுதலா..?” எனக்கேட்டான்.
”ஆமா. ..!” என்றாள்.
”என்ன வேண்டுதல்…?”
”உன்ன பலி குடுக்கப் போறேனு வேண்டிருக்கேன்..”
”ரொம்ப நல்ல வேண்டுதல்தான்..! எந்திரிச்சு வா… வெயில்ல உக்காந்து… மண்டை வெடிச்சு… செத்துத்தொலையப் போறே..” என்றுவிட்டு… வீட்டுக்குள் போனான்.

அவளும் எழுந்து…அவன் பின்னாலேயே போனாள். உள்ளே போனதும்… தன் வலது காலை மடக்கி.. முழங்காலால் அவன் பின்பக்கத்தில் இடித்து…
”எங்கடா போனே… நேத்து..” என்றாள்.
திரும்பி ”ஊருக்கு…” எனச் சிரித்தான்.
” எதுக்குடா.. போன…?” என மறுபடி அதேபோல இடித்தாள்.
” சும்மா. .” என்று சிரித்தான்.
”அத.. ஏன்டா…எங்கிட்ட..சொல்லாமக்கூட போன… பரதேசி…” என கையிலிருந்த.. குச்சியால் அவன் தோளில் அடிக்க…
குச்சியைப் பிடித்தவன் ”உங்கப்பா வர்றாரு..” என்றான்.
கதவு வழியாகக் குணிந்து பார்த்தாள். அவள் அப்பா வாசலில் தெரிய… பின்னால் நகர்ந்து… சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
உள்ளே வந்தவர்…” போலாமா..ராசு..?” என்றார்.
” ம்… துணி மாத்துங்க..!”

கை..கால்.. முக ஈரத்தையெல்லாம் துடைத்து விட்டு… வேறு உடைக்கு மாறினார். அவளது அப்பா.

ராசுவைப் பார்த்துக் கண்களாலேயே கேட்டாள்.
”எங்க…?”

அவள் கேள்வியைப் புரிந்து கொண்டு. ..பதில் சொல்லாமல் சிரித்தான்.!

அவளது அப்பா… தயாராகி..
”வா… போலாம்..” என்று விட்டு முன்னால் போக…

அவளைப் பார்த்துச் சிரித்து..” இரு வந்தர்றேன்..” என்று அவள் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியே போனான்.. ராசு…!!

அவளைச் சுற்றி…என்னமோ நடக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது..! ஆனால் அது என்ன என்றுதான் தெரியவில்லை…!
ராசு மீது அவளுக்கு நம்பிக்கை உண்டு… தவறாக எதையும் செய்துவிட மாட்டான்.. என்றாலும் அது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி… அவளது மண்டையைக்குடைந்தது…!!!

அவளது… அப்பாவும்… ராசுவும் போன பின்… அப்படியே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள் பாக்யா.
அவர்கள் போன சில நிமிடங்களுக்குப் பிறகு… அவளது அம்மாவும்… கழுவின.. ஈரக்கையைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.
நேராக வீட்டுக்குள் வந்த… அம்மா. . அவளிடம் எதுவும் பேசாமல்… அவளது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு.. குளிக்கப் போனாள்.

அவளுக்கு நிச்சயமாக ஒன்று புரிந்து போனது. அம்மா எங்கோ கிளம்பப் போகிறாள்.
‘ எங்கே…? என்ன நடக்கிறது வீட்டில்..?’
அம்மா வந்தவுடன்… கேட்டுவிட வேண்டுமென.. முடிவு செய்தாள்.

அதற்கு முன்… அவளால் இயன்றவரை யோசித்துப் பார்த்தாள். அவள் மூலைக்கு எதுவும் எட்டவில்லை. ராசு மட்டும் வந்தால்… எல்லாமே.தெரிந்து விடும்…!

அம்மா குளித்து விட்டு வந்து… சீப்பை எடுத்துத் தலைவாரி.. நல்ல புடவையை எடுத்துக் கட்டினாள..!

கேட்கலாமா… வேண்டாமா.. என சிறிது நேர மனப்போராட்டத்துக்குப் பின்.. மெதுவாகக் கேட்டாள்.
”எங்கமா… போறே..?”
”ஏன். .. உங்க மாமன் சொல்லலியா…?” எனக் கேட்டாள் அம்மா.
”ம்கூம். ..!”
”சரி… நீயும் போய் குளிச்சு.. துணிய மாத்து… சீலையக்கட்டிட்டு சுத்தினா.. கிழிஞ்சுரும்…” என்றாள்.
” ம்… மாத்தறேன்..! நீ எங்க போற… இப்ப..?”
” ஊருக்கு…”
”எதுக்கு…?”
” ம்… நாம்பெத்த மக… வெச்ச வெளக்கு… குபு…குபுனு எரியுது… எல்லாரும் வந்து பாருங்கன்னு கூப்பிடறதுக்கு..” என அவளைப் போலவே.. எகத்தாளமாகச் சொல்ல… வாயை மூடிக்கொண்டாள் பாக்யா.
சட்டென ஒரு ரோசம் வந்தது. இப்போது ஏன்.. இதைப் போய்..ஊரில் சொல்ல வேண்டும்..? ஒருவேளை.. பிரிக்கும் முயற்சியோ..?
‘ச்சே…இருக்காது..! வேறு என்ன..? மனசு மாறி… முக்கியமானவர்களை மட்டும் கூப்பிடப் போகிறார்களோ..? கரெக்ட்…அப்படியாகத்தான் இருக்க வேண்டும்..!
‘ ஹா.. யாருகிட்ட…பாக்யாளா.. கொக்கா..? ‘
‘ க்கும். .. அம்மா சொன்ன பிறகு எதற்கு இந்த பீற்றல்..?’
‘ஓ… ஆமா..இல்ல..?’

4 Comments

  1. Full story padichiten ya..semmmaa…super….waiting for next part….

  2. Bro vera level intha kathai en valkaila nadanthiku bro ana relationship than vera

  3. Next part podunga. Story romba interesting a irukku.

  4. Really good story natural in family incidents in true story

Comments are closed.