ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 3 19

மாலை… பாகயாவின் அப்பா..ராசுவைக் குட்டைக்கு மீன்பிடிக்க.. அழைத்துப் போய்விட்டார்.
பாக்யாவுக்கு. .. மனசு மிகவுமே அலைபாய்ந்தது. உடனே போய்..பரத்தைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளுக்குத் துணை வர.. இப்போது முத்து இல்லை. ஊருக்குப் போயிருந்தாள்.
தனியாகப் போகவும் முடியாது.
தன்.. தம்பியின் உதவியை நாடினாள். அவனைக் கெஞ்சிக்கூத்தாடி… காளீஸ் வீட்டுக்கு அழைத்துப் போனாள்.

”என்ன லேட்டு..?” பரத் சிரித்துக் கொண்டே கேட்டான்.
”ம்.. எங்க ராசு வந்துருக்கான்..”

பரத்துடனிருந்தவன்.. ”அது..யாரு.. உங்க ராசு..?” எனக் கேட்டான்.
”எங்க.. மாமா..” என்றான் கதிர்.
காளீஸ்வரி கேட்டாள் ”முத்து வல்லியா..?”
”இல்லக்கா.. அவ ஊருக்கு போய்ட்டா..”
” எப்ப போனா…?”
” நேத்து சாயந்திரமே போய்ட்டா..” பேசிக்கொண்டே..உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள் பாக்யா.
ஏழரை மணிக்கு. . அவள் கிளம்ப நினைத்தபோது.. அவள் தம்பியைக் காணவில்லை.

பரத்திடம் கேட்டாள் ”என் தம்பி எங்க. .?”
” இங்கதான இருந்தான்…”
”காணமே…”

அங்கிருந்த இன்னொரு சின்னப் பெண்.. ” அந்தண்ணா போயிருச்சு..!” என்றாள்.
”எங்க போனான். .?”
” மணி அண்ணங்கூட.. சைக்கிள்ள…”
முத்துவின் தம்பிதான் மணி.
”எப்ப போனாங்க..?”
” அப்பளையாவே போய்ட்டாங்க…”
”சே..!” கவலை வந்தது. ”இப்ப நான் எப்படி போறது..?”

உடனே பரத் எழுந்தான். ” நான் இருக்கேன்.. வா..”
தயங்கி நின்றாள்.

காளீஸ்வரி..” அதான். . இவனே வர்றானே… தைரியமா போ…” என்றாள்.

வேறுவழியில்லை..!
அவனுடன் கிளம்பினாள். ஊரைத் தாண்டி. . நீண்ட தூரம் இருட்டுதான்.
பரத் போனில்.. டார்ச் அடித்தான்.

” வர்றப்ப தனியாத்தான் வரனும். .” என்றாள் பாக்யா.

”நானா..?” பரத்.
” ம்…”
” துணைக்கு வேனா… நீ வா..”
”க்கும். .! மறுபடி நா எப்படி போறது..?”
”நான் வரேன்… உனக்கு துணையா…!”
”அப்ப. . விடிய..விடிய.. நடந்துட்டே இருக்க வேண்டியதுதான்.. மாத்தி..மாத்தி. .!”

டார்ச்சை அணைத்தான்.!

”ஏன்…?” எனக் கேட்டாள்.
பக்கத்தில் வந்து. . அவள் கையைப் பிடித்தான் ”பேசிட்டே போலாம்… ஜாலியா..”

படபடப்பாக வந்தது. ஆனாலும் மறுக்கவில்லை. சாலையின் இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டாள். ஆனாலும் அவனிடமிருந்து சற்று.. எட்டியே நடந்தாள்.

”இன்னிக்கு நீ..சரியா பேசவே இல்லை. .” என்றான் பரத்.
”எல்லாருமே இருக்காங்க… எப்படி பேசறது..?”
”எனக்கு மசக்கடுப்பு…” என அவள் கையை இருக்கிப் பிடித்தான்.

அவளுக்குள் ரசாயண மாற்றங்கள் நிகழ்ந்தன..! கைகள் நடுங்கின.. முகத்தில் வியர்த்தது…!

பரத் ” உக்காந்து பேசலாமா..?” எனக் கேட்டான்.
” எங்க. ..?!”
” இங்கதான்… அப்படி. . ஒரு. . ஓரமா..”
”சீ..” என்றாள் ”வேணாம்பா..”
”ஏன். . பயமா…?”
” ம்..”
” நான் இருக்கப்ப… என்ன பயம்?”
” என் பயமே.. அதுதான். .”
”உன்ன. . என்ன கடிச்சா..திண்ணுருவேன்…?”
”திண்ணுட்டா…?”
”கட்டிக்க போறவன்தானே… திண்ணு பாத்தா.. என்ன. .?”
”க்கும். ..! அதெல்லாம் கல்யாணத்துக்கு.. அப்றம்தான்”

அவள் தோளில் கை போட்டான். ”சரி எப்ப கல்யாணம். .பண்ணிக்கலாம்.?”
”இப்ப இல்ல. ..”
” வேற எப்ப. ..?”
” தெரில…”
” நீ இல்லாம… என்னால வாழவே முடியாது. .”
”ம்… ம்…”
” டெய்லி… கனவுல வந்து. . என்னை இம்சை பண்ற..”
” இனிமே வரல.. போதுமா..?”
” ஐயோ. .. நான் செத்தே போவேன்…”
” ஆ…”
சட்டென அவளைக் கட்டிப்பிடித்து. .. முத்தமிட்டு விட்டான்.
உடனே திமிறி… விலகிப் போனாள். அவளது இதயம் ட்ரம்ஸ் வாசித்தது.

” நீ..என் தேவதை..! இந்த ஜென்மத்துல.. எனக்கு நீதான் பொண்டாட்டி. ..”

இடைவெளி விட்டு. . மெதுவாக நடந்தாள்.

3 Comments

  1. It’s story is very interesting &very very very super cute story

    1. Quikly part 4 & ❤Love u so much

Comments are closed.