விக்கி வீட்டிற்கு வெளியே வந்து எட்டி பார்த்தான் .சரியான மழையா வரும் போலேயே பாவம் அவ ஏங்க இருக்காளோ என்று நினைத்து கொண்டு மொபலை எடுத்து அவளுக்கு போன் அடித்தான் .அவள் உடனே எடுத்தாள் thank god விக்கி நான் உன்னயாதான் நினைச்சு கிட்டு இருந்தேன் .
மழை வர மாதிரி இருக்கா அதான் நான் அஞ்சலி அக்காவுக்கு போன் போட்டேன் அவங்க போன் சிக்னல் கிடைக்கல அதான் உன்னையே கூப்பிடலாம்னு பாத்தேன் ஆனா நீ பூஜா கூட இருப்ப எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு கூப்பிடல என்றாள் .
ஓகே இருக்கட்டும் நீ இப்ப எங்க இருக்க சொல்லு நான் வரேன் என்றான் .யே இருக்கட்டும் பூஜா அங்க இருந்தா நான் கொஞ்சம் லேட்டவே வரேன் .மறுபடியும் அஞ்சலி அக்காவுக்கு போன் போட்டு பாக்குறேன் என்றாள் ,யே பூஜா அப்பவே போயிட்டா நீ ஏங்க இருக்கன்னு சொல்லு நான் அங்க வந்து உன்னையே கூப்பிட்டுகிரென் என்றான் .
ஒ அப்படியா உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே என்றாள் .இல்ல எனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்ல நீ எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு நான் வந்து உன்னையே கூப்பிட்டுகிரென் என்றான் .
நான் பார்க்ல இருக்கேன் என்றாள் .எது நம்ம வீட்டு கிட்ட இருக்க பார்க்கா என்றான் .இல்ல இது வேற பார்க் என்றாள் .ஏங்க இருக்குன்னு சொல்லு நான் வந்துறேன் .
இது நான் போற ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல இருக்கு என்றாள் ,ஓகே இரு நான் கார் எடுத்துட்டு வரேன் என்று சொல்லி விட்டு காரை எடுத்து கொண்டு வெளியேறினான் பின் காரை எடுத்து கொண்டு அவள் சொன்ன பார்க்கிற்கு சென்றான் .அவன் போன உடன் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது .
காரில் இருந்து கொண்டே போன் அடித்தான் . நான் பார்க்குக்கு வந்துட்டேன் நீ ஏங்க இருக்க என்றான் .நான் இதோ உன் கார பாத்துட்டேன் இதோ வரேன் என்றாள் .பின் அவள் மெல்ல ஓடி வருவதை பார்த்து விக்கி காரை விட்டு வெளியேறினான் .கிட்ட வரும் போது வழுக்கி விழ போன அவளை விக்கி பிடித்தான் .இம்சை பையா வர வேண்டிய தான.. பின் இருவரும் காருக்குள் போனார்கள் . காருக்குள் போன உடன் விக்கி சொன்னான் .
யே உன்னையே எத்தன தடவ சொல்லி இருக்கேன் ஈரமா இருக்க இடத்துல பாத்து நடன்னு நீ பாட்டுக்கு வழுக்கி விழுந்து எதாச்சும் ஆச்சுன்ன அப்புறம் உங்க அஞ்சலி அக்கா என்னையே ஜெயில போட்ட்ருவாங்க என்றான் .
அவள் சிரித்து கொண்டே ஐ ஆம் சாரி நான் மட்டும்னா முழுக்க நனைஞ்சுடுவேன் ஆனா என் குழந்தை நனையுதா அதான் உன்னையே கூப்பிட்டென் சீக்கிரமா ஓடி வந்தேன் என்றாள் .ஓகே மழை பெருசு ஆகுறதுக்குள்ள வீட்டுக்கு போயிடுவோம் என்றான் .
அதுவும் சரிதான் என்றாள் .பின் விக்கி காரை ஸ்டார்ட் செய்தான் .கார் ஸ்டார்ட் ஆகவில்லை மறுபடியும் முயற்சி செய்து பார்த்தான் கார் சுத்தமாக ஸ்டார்ட் ஆகவில்லை .என்ன ஆச்சு விக்கி என்றாள் .
தெரியல மழைக்கு கொஞ்சம் அப்படிதான் இருக்கும் ஆனா நீ பயப்படாத ஸ்டார்ட் ஆகிடும் என்று சொல்லி விட்டு மீண்டும் முயற்சி செய்தான் ஆனால் ஸ்டார்ட் ஆகவில்லை . பின் நனைந்து கொண்டே காரின் முன்னே போயி பார்த்தான் .பின் உள்ளே வந்து
சுவாதி கார்ல என்ன பிரபால்ம்னு தெரியல மெக்கானிக் வச்சு தான் சரி பண்ண முடியும் போல அதுனால நீ கார்லயே இரு நான் போயி ஏதாவது ஆட்டோ இருந்தா பிடிச்சுட்டு வரேன் நீ அதுல வீட்டுக்கு போயிடு நான் அப்புறம் மேல் வரேன் என்றான் .யே வெயிட் உன் கிட்ட குடை இருக்கா என்றாள் .இல்ல என்றான் .
அப்புறம் எப்படி போவ என்றாள் . நனைஞ்சுகிட்டே தான் என்றான் . ஒன்னும் வேணாம் ஏற்கனவே உனக்கு கால்ல காயம் இருக்கு இப்ப மழைல நடந்தேன்னா அது செப்டிக் ஆகி அப்புறம் ரொம்ப சிரியஸா ஆகிடும் .
அதுனால ஒரு அரை மணி நேரம் பாப்போம் மழை விட்டதுக்கு அப்புறம் நீ போயி ஆட்டோ கூப்பிட்டு வா நம்ம ரெண்டு பேருமே கார லாக் பண்ணிட்டு வீட்டுக்கு போவோம் என்றாள் .இல்ல அது என்று விக்கி சொல்ல யே பரவல உள்ள வந்து உக்காரு எப்படினாலும் மழை விட்ரும் அப்புறம் பாத்துக்கலாம் எல்லாம் என்றாள் .ஓகே என்று உள்ளே வந்தான் .