ஏண்டா இந்த கண்றாவி எல்லாம் வீட்டுக்கு போயி பண்ண வேண்டியதுதானே நடு ரோடு தான் கிடைசுச்சா என்று போலீஸ் திட்ட ஐயோ இவன் வேற என்ன நடந்துச்சுன்னே தெரியாமா என்று நினைத்து கொண்டு
சார் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல சார் வண்டி ரிப்பேர் என்று விக்கி சொல்ல எல்லாரும் இதே தாண்டா சொல்றிங்க என்றார் போலிஸ் .சார் அப்படி எல்லாம் இல்ல என்று விக்கியும் போலீஸும் வாக்குவாதம் பண்ணி கொண்டு இருக்க தூங்கி கொண்டு இருந்த சுவாதி வெளியே வந்தாள் .
வந்து சார் என்ன நினைசுகிட்டு இருக்கீங்க he is my husband அவரும் நானும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரும் போது வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு . மழையும் அதிகமா பெஞ்சதலா வெளியே போக முடியாம கார்லே தூங்கிட்டொம் .எங்க மேல சந்தேகம் இருந்தா வாங்க இப்பயே ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றாள் சுவாதி .
ஐயோ ஆஸ்பத்திரிக்கு எல்லாம் எதுக்கு மேடம் உங்க வயித்த பாத்தாலே தெரியது நீங்க பிரக்ன்ட் லேடின்னு என்று சொல்லி விட்டு விக்கி பக்கம் திரும்பி ஏன் சார் நீங்க family men ன்னு ஒரு வார்த்த சொல்ல கூடாதா சாரி சார் என்றார் .பரவல சார் என்றான் .எங்க வொர்க் பண்றீங்க என்றார் .
gnb கம்பெனில என்று சொல்லி தன் கார்டை காண்பித்தான் அவளோ பெரிய கம்பெனில வொர்க் பண்றேன்கிறத முதலையே சொல்லிருக்க வேண்டியது தானே சார் என்றார் .எங்க நீங்க சொல்ல விட்டிங்க என்றான் .அது இருக்கட்டும் சார் இப்ப பாத்து சீக்கிரம் வீட்டுக்கு போங்க என்று சொல்லி விட்டு போனார் ,
அவர் போன பின்பு விக்கி சுவாதியிடம் ஹ தேங்க்ஸ் சுவாதி அந்த ஆள் கிட்ட இருந்து காப்பாத்துனதுக்கு என்றான் .
பரவல இருக்கட்டும் இப்ப எப்படி வீட்டுக்கு போறது என்றாள் , நீ ஆட்டோ பிடிச்சு போயிடு நான் கார ரிப்பேர் பண்ணிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வரேன் என்றான் .
பின் விக்கி ஒரு மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்கு போனான் .அங்கு சுவாதி ஹாலில் இருந்தாள் .விக்கி அவன் ரூம் போயி பிரஸ் ஆப் ஆகி விட்டு வெளியே வந்தான் .
விக்கி நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச போறேன் என்றாள் . விக்கிக்கு அவள் என்ன சொல்ல போகிறாள் என்று இதயம் வேகமாக துடித்தது .
சொல்லு சுவாதி என்றான் .நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்க போறேன் என்றாள் .
அதை கேட்ட போது ஒரு பக்கம் சந்தோசமாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது .இருந்தாலும் சரி கொஞ்சம் கெத்து காட்டுவோம் என்று நினைத்து கொண்டு வாட் என்ன சுவாதி என்ன சொன்ன ஒன்னும் புரியல என்றான் .யே யே பயப்படாதடா ஐ மீன் இன்னைக்கு பூஜா இங்க வந்ததுக்கு அப்புறம்
நான் பாஸ்போர்ட் சம்பந்தமா ஒரு எஞ்சென்ட போயி பாத்தேன் .இப்ப நான் குழந்தையோட கனடா போ போறதால குழந்தைக்கும் சேத்து பாஸ்போர்ட் விசா இதலாம் எடுக்கணும் அண்ட் அதுக்கு குழந்தையோட பிர்த் சார்டிபிகட் வேணும் அதுக்கு மேயினா குழந்தையோட அப்பா பேர் போடணும்..
என்னடா இவ முத உன் பேர இன்சியலா கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கேக்குறான்னு நினைக்கிறியா ஐ அம் சாரி விக்கி அது ஏதோ ப்ரோசிடர் வேற வழி இல்ல அதான் அதுக்கு முத நம்ம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ண மாதிரி ஒரு சார்டிபிகட் ரெடி பண்ணனும் அதுல நீ வெறும் சைன் மட்டும் போட்டா போதும் .
நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் அது .அப்புறம் அத வச்சு என் எஞ்சென்ட எனக்கும் என் குழந்தைக்கும் பாஸ்போர்ட் எடுத்துருவோம் .
அப்புறம் நான் கனடா போனதுக்கு அப்புறம் அது ஒண்ணுக்கும் ஆகாத மாதிரி பண்ணிறேன் .அண்ட் புயுச்சர்ல என் குழந்தைக்கு கூட நீ தான் அப்பான்னு தெரியாத மாதிரி பாத்துக்குறேன்.