என் காதலி Part 12 95

விக்கி முழுதுமாக நனைந்ததால் அவன் சட்டை எல்லாம் முழுக்க ஈரமாகி இருந்தது இருந்தாலும் சுவாதி முன் சட்டையை கழட்ட கூச்சபட்டு அப்படியே இருந்தான் .யே விக்கி என்ன என்ஜாய் பண்ணியா என்றாள் .

என்னது என்றான் அதான் பூஜா வந்தலே என்றாள் .ஒ அதுவா இல்ல அவளுக்கு ஏதோ முக்கியமான வேலையாம் அதுனால அவ கிளம்பி போயிட்டா என்றான் .விக்கிக்கு எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க வேண்டும் போல இருந்ததது .ஆனால் கேட்கவில்லை .

சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் . பின் ஒரு பலமான இடி இடித்து தெருவில் உள்ள விளக்குகள் எல்லாம் கரன்ட் இல்லமால் அனைய யே விக்கி மழை அப்புறம் இந்த இருட்டு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அதுனால லைட் போடறியா என்றாள் . .பின் லைட்டை போட்டான் வெளிச்சத்தில் சுவாதி அவனை பார்த்தாள் .என்னடா இப்படி நனனஞ்சு நடுங்கி கிடக்க என்றாள் .

என்ன என் முன்னாடி சட்டைய கலட்ட பயமா பயப்படாத நான்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன் என்றாள் .அப்படி இல்ல அதாவது எனக்கு சின்ன தொப்பை இருக்கு அதான் அத ஒரு பொண்ணு முன்னாடி போயி எப்படி காட்டுறதுன்னு தான் என்று சிரித்தான் ,யே நான் மத்த பொண்ணுக மாதிரி எல்லாம் கிடையாது

எனக்கு படத்துல கூட சிக்ஸ் பேக் பிடிக்காது நம்ம ஊர் பசங்களுக்குகு உன்ன மாதிரி சின்ன தொப்ப இருக்குறதும் கொஞ்சம் அழகுதான் தான் என்றாள் .ஓகே அப்படியா என்று சொல்லி கொண்டே சட்டையை கழட்டினான் .

ம்ம் பரவல உனக்கு தொப்பை அழகாத்தான் இருக்கு என்று சொல்லி சிரித்தாள் .யே சும்மா கிண்டல் அடிக்காதடி அப்புறம் உன்னையே இறக்கி விட்ருவேன் என்றாள் .
ஓகே ஓகே கூல் என்றாள் .

அப்புறம் பூஜா என்ன சொன்னா என்றாள் .ம்ம் அவள பத்தி விடு உனக்கு ஆஸ்பத்திரில என்ன சொன்னங்க நான் வரலன்னு ஏதும் சொன்னாங்களா ஏதும் திட்டுனன்களா என்றான் .

ம்ம் சொன்னங்க அது இருக்கட்டும் போன வட்டி டாக்டர் நான் வீக்கா இருக்காத உன் கிட்ட சொன்னங்கலாமே ஏன் என் கிட்ட சொல்லல என்றாள் யே அவங்க அப்படி சொல்லல பொண்டாட்டியா ரொம்ப திட்டதன்னு சொன்னங்க என்றாள் .ம்ம் ஓகே அதான் நீ திட்டி எனக்கு எதாச்சும் ஆயிடும் அப்புறம் அஞ்சலி அக்கா உன்ன உள்ள தள்ளிடுவாங்கன்னு பயந்து தான் என்னையே நீ இப்பலாம் திட்டவே மாட்டிங்குரியா என்றாள் .

அப்படி எல்லாம் இல்ல உன்னையே பிடிச்சு இருக்கு என்று விக்கி சொல்ல நினைத்து வெறும் ம்ம் அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே விக்கி உனக்கு என்னையே திட்டணும்னு தோணுச்சுன்னா திட்டிரு அடக்கி எல்லாம் வைக்காத இன்னும் சொல்ல போனா எனக்கு நீ திட்டறது பிடிச்சு இருக்கு என்றாள் .

சரி இனி மேல் திட்டுறேன் என்றான் .டேய் அதுக்குன்னு ரொம்ப திட்டிடாத வழக்கம் போல அந்த இம்சன்னு சொல்வேலே அப்படி மட்டும் சொல்லு என்றாள் .ஓகே இப்பகுள்ள மழை விடுற மாதிரி இல்ல பேசாம நான் போயி ஆட்டோ கூப்பிட்டு வராட்டா என்றான் .

யே இன்னும் கொஞ்ச நேரம் இருடா இன்னும் கொஞ்ச நேரம் பேசு இந்த மாதிரி நேரம் கிடைக்கும் போது தான் நம்ம பிரண்ட்லியா பேச முடியுது இல்லாட்டி எப்ப பாத்தாலும் நம்ம ரெண்டு பேரும் சண்ட போட்டுகிட்டுதான் இருக்கோம் என்றாள் .அதுவும் சரிதான் சரி எதாச்சும் நீ சொல்லு என்றான் .

இல்ல நீ சொல்லு என்றாள் .விக்கிக்கு உடனே உன்னையே பிடிச்சு இருக்குடின்னு சொல்லணும் போல இருந்துச்சு ஆனா உடனே அந்த இடத்துல அந்நேரம் சொல்ல மனசு வரல அதுனால அவன் பேச்சை மாற்றி ஓகே நீ எதாச்சும் கேளு ஆனா சும்மா சின்ன பிள்ளைக மாதிரி உனக்கு பிடிச்ச கலர் என்ன உனக்கு பிடிச்ச நடிகர் யாரு இப்படி எல்லாம் கேட்காத என்றான் .

ஓகே உனக்கு இந்த மழைல என்ன சாப்பிட பிடிக்கும் என்றாள் .விக்கி படுத்து கொண்டே போடி சின்ன பிள்ள மாதிரி தான் கேட்குற என்றான் .யே சொல்லுடா என்றாள் .