எல்லாவற்றையும் கேட்டு சிமி கேட்டாள் .இப்ப உன் பிரச்சனை என்ன என்றாள் .ம்ம் அத சரியா சொல்ல தெரியல எனக்கு சுவாதி மேல இருக்கிறது லவ்வா இல்ல வெறும் அட்ரக்சனா கூட தெரியல ஆனா சுவாதிய எப்பயுமே பாத்து கிட்டே இருக்கணும் போல இருக்கு காலைல சாயங்காலம் மதியம் ஆபிஸ் போகும் போது வரும் போது சனி கிழமை ஞாயிற்று கிழமை எல்லா கிழமை
மழை வெயில் இப்படி எல்லா நேரமும் அவள பாக்கணும் அவ கூடவே இருக்கணும் .
அவ குரல கேட்டுகிட்டே இருக்கணும் அப்புறம் அவளோட சிரிப்ப ரசிக்கணும் அவளோட வாசனைய முகர்ந்து கிட்டே இருக்கணும் .அப்புறம் அவ கண்ண மட்டும் விடாம ஒரு மணி நேரம் பாக்கணும் என்று sbb மூச்சு விடமால் பாடுவது போல சொல்லி கொண்டே போனான் .
சொல்லி முடிச்சிட்டியா என்றாள் சிமி .இல்ல பாதி கூட சொல்லல அவள பத்தி என்றான் .போதும் போதும் உன் ஆள பத்தி சொன்னது புயல் அடிச்சு ஒஞ்ச மாதிரி இருக்கு நீ சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் ஆளு குளிசுட்டே வந்துட்டான் பாரு என்றாள் .
திரும்பி பார்த்த போது சிமி சொன்னது போல் சிமியின் பாய் பிரண்ட் அங்கு தலையை துவட்டி கொண்டு இருந்தான் .அவனை பார்த்து ஓகே செல்லம் நீ போயி ரெடி ஆகிட்டு வா நாம வந்து இருக்க கெஸ்ட் கூட லஞ்ச் சாப்பிடுவோம் என்றாள் .
ஹ லஞ்ச் எல்லாம் வேணாம் நான் கிளம்புறேன் என்றான் .ஹ உனக்கும் சேத்து தான் சமைச்சு இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசலாம் வா என்றாள் .பின் மூவரும் உக்காந்து சாப்பிட்டார்கள் .
சாப்பிட்டு முடித்த பின் அங்கேயே சோபாவில் உக்காந்தர்கள் .அப்போது ராக்கியின் வாயில் சோற்று பருக்கு இருக்கு என்று சிமி சொன்னாள் .அது ஏங்க இருக்கு என்று தெரியாமல் அவன் முகத்தை தேட சிமி அவன் உதடு அருகே இருந்த சோற்றை தட்டி விட்டாள் . அப்போது ராக்கி அவள் கையில் சின்ன முத்தம் கொடுத்தான் .ஸ்ஸ் கொஞ்ச நேரம் அடக்க ஒடுக்காமா இரு என்று சொன்னாள் .
விக்கிக்கு அதை பார்த்து கொஞ்சம் ஏக்கமாக இருந்தது .பின் சிமி விக்கியிடம் வந்தாள் ம்ம் நீ சொன்னத வச்சு பாக்கும் போது நீ நல்லா அவ மேல பயங்கரமா லவுல விளுந்துட்டன தெரியுது இப்ப உன் பிரபலாம் என்ன அவ உன் பிரண்டோட பழைய லவ்வர் கிறதா என்றாள் .இல்ல அது ஒரு மேட்டரே இல்ல இப்ப என்றான் அப்ப வேற என்ன என்றாள் .அவளுக்கு என் மேல பீலிங் இருக்க மாதிரியே தெரியல அதான் இப்ப பிரச்சினையே
அதான் உனக்கு ஏதும் தோணுதா நான் சொன்னத வச்சு அவளுக்கு ஏதும் என் மேல பீலிங் இருக்கானு உனக்கு தோணுதா என்றான் .அது ஒன்னும் தெரியல என்றாள் .
என்னடி இப்படி சொல்ற ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும் அப்படின்னு சொல்வாங்க என்றான் .அது எல்லாம் சும்மா பொண்ணுக மனச பொண்ணுக இல்ல படைச்ச கடவுள் ஆழ கூட சொல்ல முடியாது என்றாள் .என்னடி இப்படி சொல்ற என்றான் .