மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 1 181

இன்னைக்கு சனிக்கிழமை அவரு கண்டிப்பா வந்துடுவாருங்க …

சரிப்பா இந்தா இதை செலவுக்கு வச்சிக்க அப்பப்ப எதுனா உதவி தேவைப்பட்டா சொல்றேன் !

ஒரு நூறு ரூபாய் நோட்ட தினிச்சிட்டு வந்தேன் !

மறுபடி அவனை கூப்பிட்டு இந்தாப்பா உன் பேரு என்ன ?

என் பேரு பெரியசாமிங்க !

சரி இந்த மாதிரி நான் விசாரிச்சேன்னு யார்கிட்டையும் சொல்லிடாத …

சரிங்க …. வாங்குன நூறுக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு கிளம்பினான் !

நான் மீண்டும் காத்திருக்க நாலு பேரும் 6 மணி வாக்கில் வெளியில் வர ஜனனி
மட்டும் நடந்து அவள் வீட்டுக்கு செல்ல என் மனைவி கதிர் ஷாம் மூனு பேரும்
காரில் கிளம்பினார்கள் !

இப்ப ஜனனிய ஃபாலோ பண்ணிட்டு போயி அவ புருஷன்கிட்ட சொல்லலாமா வேணாமா ?

இல்லை இல்லை இவங்க எங்க போறாங்கன்னு பாக்கணும் …

நான் அவர்களின் காரை என் பைக்கை வைத்து பின் தொடர்வது அவ்வளவு சுலபமாக
இல்லை வண்டி நேராக பொள்ளாச்சி சாலையில் சென்று மெயின் ரோட்டை விட்டு
விலகி ஒரு பாதையில் சென்று மீண்டும் வயல் சூழ்ந்த பகுதிக்குள் செல்ல …

அங்கே தனிமையில் ஒரே பெரிய பங்களா பெரிய காம்பவுண்ட் சூழ இருந்தது அந்த
கெஸ்ட் ஹவுஸ் …

அதன் வாசலில் ஷாம்ஸ் ஹட் என்று தங்க நிறத்தில் ஸ்டீல் ஒர்க்கில்
எழுதப்பட்டிருந்தது ….

இது ஹட்டா ?

அந்த பிரம்மாண்ட பங்களாவை கண்டு வியந்த படி பார்க்க ….

ஒரு பெரிய கேட் திறக்கப்பட கார் உள்ளே சென்றது …

இனி எப்படி உள்ள போக முடியும் ?

கேட் மூடப்பட ஒரு வாட்ச்மேன் வெளியில் வந்து நின்னான் !

அவனிடம் பேசலாமா இல்லை உள்ள போகணும்னு சொல்லி கேட்கலாமா ?

வேண்டாம் வேண்டாம் எதுனா பிரச்சனை ஆகிடும் அவனுங்க ரெண்டு பேர்
இருக்கானுங்க என்னை அடிச்சி போட்டுட்டா என்னாகுரதுன்னு பைக்கை தூரத்தில்
மறைவில் நிறுத்தினேன் …

சுற்றிலும் வயல் சூழ நடுவில் இருந்தது அந்த பங்களா …..

நான் மீண்டும் மெயின் ரோட்டுக்கு வந்து ஒரு சிகரெட் பாக்கெட்
வாங்கிக்கொண்டு வந்தேன் …. அதற்குள் நன்றாக இருட்டிவிட … ஏறி
குதிச்சி உள்ள போக எதுனா பாதை இருக்கான்னு அந்த காம்பவுண்டை சுற்றி
நடந்தேன் ….

கிட்டதிட்ட இருவது அடி உயர மதில் … இதுல எங்கேருந்து ஏறுவதுன்னு சுற்றி
வந்தேன் …

அங்க ஒரு பாறை சமதளமாக இருக்க அங்கெ உக்கார்ந்து யோசித்தபடி
தூங்கிப்போனேன் ! காலைலேர்ந்து நின்ற அசதி …

திடீர்னு என் செல் ரிங் ஆக …. எனக்கு முழிப்பு தட்டி எழுந்தேன் …

கால் பண்ணது வேற யாரும் இல்லை என் தர்ம பத்தினி தான் !

ஹலோ …

என்னங்க எங்க இருக்கீங்க ?

நான் மைசூர் வந்துட்டேன் !

எப்ப வருவீங்க ?

நாளைக்கு தான் வருவேன் ….

சாப்டீங்களா ?

ம்! நீ சாப்டியா ?

சாப்டேங்க …

அப்புறம் ?

வேற ஒன்னுமில்லை வச்சிடவா ?