மதன மோக ரூப சுந்தரி – 2 23

“Game..!!!!” என்று உற்சாகமாக கத்தினாள்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட ஆதிரா.. இப்போது கையிலிருந்த இந்த கிஃப்ட்பாக்ஸை திறந்து பார்த்தாள்..!! உள்ளே ஒரு நகைப்பெட்டி இருந்தது.. இதயவடிவிலான இரட்டை பதக்கங்கள்.. தங்கத்தால் வார்க்கப்பட்ட தளப்பரப்பு.. அதன்மேல் பதிக்கப்பட்ட சிறுசிறு சிவப்பு கற்கள்.. அழகாக ஜொலித்தன இரண்டு பதக்கங்களும்..!! கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொன்றாய்.. அவர்களது கைச்சங்கிலியிலோ கழுத்து சங்கிலியிலோ.. இணைத்துக் கொள்கிற மாதிரியான இரட்டை பரிசுப்பொருட்கள்..!! ஆதிராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.. கணவனிடம் அவற்றை காட்டுகின்ற ஆர்வத்துடன்..
“என்னங்க..” என்றழைத்தவாறே படிக்கட்டை நோக்கி நடந்தாள்.

அன்று மதிய உணவு அருந்திய பிறகு.. ‘ஒரு குட்டித்தூக்கம் போடப்போறேன்’ என்றுவிட்டு படுக்கையில் விழுந்த சிபி.. மாலை நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து போயிருந்தான்..!! புத்தகம் புரட்டிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு போரடிக்கவே.. வெளியில் சற்று உலாவி வரலாம் என்ற எண்ணத்துடன்.. படியிறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்.. வாசல் திறந்து வீட்டினின்று வெளிப்பட்டாள்..!!

13

ஐந்துமணிதான் ஆகியிருக்கும்.. அதற்குள்ளாகவே வெளியே இருள்கவிழ்ந்து வெளிச்சம் குறைந்திருந்தது.. வளிமண்டலத்தில் பரவியிருந்த பனிப்படலம் தெளிவாகவே பார்வைக்கு புலப்பட்டது..!! சுற்றிலும் பச்சைப்பசேலென புல்வெளியும், குற்றுச்செடிகளும்.. சிலுசிலுவென வீசிய காற்றில் ஜில்லென்று ஒரு குளிர்ச்சி..!! சூழலில் ஒரு அடர் நிசப்தம்.. அந்த நிசப்தத்தை கிழிக்கிற மாதிரி.. அவ்வப்போது சீரான இடைவெளியில் ஒலித்த தூரத்து இரும்புப்பட்டறையின் சம்மட்டி சப்தம்..!!

“டங்ங்ங்.. டங்ங்ங்.. டங்ங்ங்..!!”

புல் வளர்ந்திருந்த மண்சரிவில் இறங்கி.. வீட்டுக்கு முன்பாக ஓடிய குழலாற்றை அடைந்தாள் ஆதிரா..!! உறுமீன் வருவதற்காய் காத்திருந்த இரண்டு கொக்குகள்.. ஆதிராவின் உருவம் கண்டதும் சிறகடித்து பறந்தோடின..!! ஆற்றங்கரையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த.. மரத்தாலான சாய்விருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டாள்..!! அமைதியாக ஓடிக்கொண்டிருந்த குழலாற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!!

“வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!”

ஆதிராவின் காதுகளுக்குள் தாமிராவின் குரலும்,சிரிப்பும் க்றீச்சிட்டன.. நெற்றியில் ஒரு சுருக்கமெழ, இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்..!! ஒருசில வினாடிகளுக்கு பிறகு விழிகளை திறந்தவள்.. தூரமாக ஆற்றின் அடுத்தகரையில் தெரிந்த அந்த உயரமான மரத்தை பார்த்தாள்..!! மூளைக்குள் மீண்டும் தாமிராவின் நினைவுகள் முளைவிட்டன..!!

ஆதிராவும் தாமிராவும் செல்ஃபோனுக்காக சண்டையிட்டுக்கொண்ட அன்று.. சிறிது நேரத்தில் இந்த ஆற்றங்கரையில்தான் இருவரும் வந்து நின்றிருந்தனர்..!!

“இங்க எதுக்குடி கூட்டிட்டு வந்திருக்குற..??” ஆதிரா தங்கையிடம் கேட்டாள்.

“கேம் ஆடுறதுக்குத்தான்..!!” தாமிரா கேஷுவலாக சொன்னாள்.

“இங்கயா.. இங்க என்ன கேம்..??”

“ஹ்ம்ம்.. அதோ.. அந்த மரம் தெரியுதுல..??”

“ஆமாம்..!!”

“அதைப்போய் மொதல்ல யார் தொடுறாங்களோ.. அவங்களுக்குத்தான் அந்த செல்ஃபோன்..!!”

14

“அ..அதையா.. அதை எப்படி..??”

“ம்ம்ம்ம்..?? ஆத்துல நீந்தி அந்தக்கரைக்கு போய் தொடணும்..!!”

தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவிடம் பட்டென ஒரு பதட்டம்..!! குழலாற்றின் அடிப்பரப்பில்தான் குறிஞ்சி துயில் கொண்டிருக்கிறாள் என்பது அகழிமக்களின் அமானுஷ்ய நம்பிக்கை.. அதனால் ஏற்பட்டதுதான் ஆதிராவின் அந்த பதட்ட மும்..!!

“ஐயையோ.. ஆத்துல எறங்கனுமா.. நா..நான் மாட்டேன்பா..!!”

“ஏன்.. ஆத்துல எறங்கினா என்னவாம்..??”

“எறங்க மாட்டேன்னா எறங்க மாட்டேன்.. அவ்வளவுதான்..!! நீ வே..வேற ஏதாவது கேம் இருந்தா சொல்லு..!!”

“ஹாஹா.. பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி.. தொடைநடுங்கி.. புள்ளப்பூச்சி..!!”

“ப்ச்.. பயம்லாம் ஒன்னும் இல்லடி..!!”

“அப்புறம் என்ன..?? வா..!! அந்த குறிஞ்சியா நாமளான்னு இன்னைக்கு ஒரு கை பாத்துடலாம்..!!” கண்சிமிட்டிய தாமிரா இப்போது ஸ்கர்ட்டை கழட்டி வீசி, ஷார்ட்சுடன் நின்றாள்.

“வேணான்டி..!!” ஆதிரா கெஞ்சினாள்.

“செல்ஃபோன் வேணும்னா வா.. ஷேம் ஷேம்னு நான் கேலி பண்ணனும்னா இங்கயே நில்லு..!!” சொன்ன தாமிரா, அக்காவின் பதிலுக்கு காத்திராமல் ஆற்றை நோக்கி ஓடினாள்.

“ஹேய்.. நில்லுடிஈஈ..!!” ஆதிரா கையுயர்த்தி கத்தினாள்.

“வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!”

சிரித்துக்கொண்டே ஓடிப்போய் ஆற்றுக்குள் தொப்பென்று விழுந்தாள் தாமிரா..!! செல்ஃபோன் கவர்ச்சியால் துணிச்சல் பெற்ற ஆதிராவும்.. இப்போது செருப்பை உதறி வீசிவிட்டு ஓடினாள்.. அவசரமாய் ஓடி ஆற்றுநீரை கிழித்துக்கொண்டு விழுந்தாள்..!!

அழகு உருக்கொண்ட ஆறறிவு மீன்களாக.. அக்காவும் தங்கையும் ஆற்றில் நீச்சலடித்தனர்..!! தூரத்தில் தெரிந்த மரத்தை கூர்மையாக பார்த்தவாறே தீவிரமாக கால்களை உதைத்தாள் ஆதிரா.. பக்கவாட்டில் தெரிந்த அக்காவை அன்பொழுக பார்த்தவாறே சோர்வாக கைகளை வீசினாள் தாமிரா..!! ஆதிராவுக்கு சந்தேகம் வராதமாதிரி, தாமிரா மெல்ல மெல்ல தனது வேகத்தை குறைத்துக்கொள்ள.. ஆதிராவே முதலில் அடுத்தகரை ஏறினாள்.. ஏறியவேகத்தில் ஓடிச்சென்று அந்த மரத்தை தொட்டாள்..!!

“ஹைய்ய்ய்..!! நான் ஜெயிச்சுட்டேன்ன்ன்.. எனக்குத்தான் அந்த செல்ஃபோன்ன்ன்..!!” குழந்தையாய் குதுகளித்தாள் அக்கா.

“ச்ச.. இந்தவாட்டியும் நீயே ஜெயிச்சுட்ட.. போடீ..!!” போலியாக சலித்துக்கொண்டாள் தங்கை.

வீட்டுக்கு திரும்பிய ஆதிரா.. மிக உரிமையாக சென்று அந்த செல்ஃபோனை கைப்பற்றிக்கொண்டாள்..!! அன்றிரவு படுக்கையில் விழுந்து நெடுநேரமாகியும்.. அந்த செல்ஃபோன் பட்டன்களையே திரும்ப திரும்ப அழுத்திக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவின் முகத்தில் காணப்பட்ட அந்த சந்தோஷமும், பூரிப்பும்.. அதைவிட பலமடங்காக அவளுக்கு அருகே படுத்திருந்த தாமிராவின் மனதுக்குள்..!!

ஆதிராவுக்கு அந்த செல்ஃபோனை மிகவும் பிடித்துப் போனது.. எந்த நேரமும் அதை கையில் தூக்கிக்கொண்டே அலைவாள்.. பத்திரமாக பார்த்துக்கொள்வாள்..!! ஆறு வருடங்களாகி அந்த செல்ஃபோன் அரதப்பழசாகிப் போனபிறகும்கூட.. அதையேதான் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்தாள்..!! தாமிராவின் தந்திரத்தால் ஆதிராவிடம் அந்த செல்ஃபோன் மீது ஏற்பட்ட பற்றுதலும், உரிமையுணர்வும்தான் அதற்கு காரணம்..!!

ஆற்றங்கரையில் அமர்ந்து தங்கையின் நினைவுகளில் ஆதிரா மூழ்கியிருந்த சமயத்தில்தான்.. எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் திடீரென அவளுக்கெதிரே வந்துநின்றது அந்த முயல்..!! கையில் ஏதோ ஒரு சிவப்புநிற பழத்தை வைத்துக்கொண்டு.. எதிரேயிருந்த ஆதிராவையே குறுகுறுவென பார்த்தது..!! வெள்ளை வெளேரென்ற மேனி வண்ணத்துடன்.. புஸுபுஸுவென்று மிருதுவான தேக ரோமத்துடன்.. மிக அழகாக நின்றிருந்தது அந்த முயல்..!! அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு ஐந்துவயது குழந்தை பிறப்பெடுத்தாள்..!!

“ஹாய்ய்ய்ய்..!!!”