உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 3 129

மெல்லக் கண் திறந்தாள் மைதிலி! நான் ஏற்கனவே எழுந்திருந்தேன்.

இது அவர் ரூமாச்சே! குழம்பிய மைதிலியின் மனதில் மெல்ல, நேற்றைய இரவுகள் நடந்தது நினைவுக்கு வந்தது. அவள் எழுந்த போது மணி காலை 8. நிகழ்வுகளின் அழுத்தம், அவளை மீறி அசதியில் ஆழ்த்தியிருந்தது. ஆனால், அவன் நெருக்கத்தில் கிடைத்த இந்த ஆழ்ந்த தூக்கம், மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், தெம்பையும் தந்தது.

அவளுக்கு மிகவும் சங்கடமாய் இருந்தது! எப்படி ராஜா முகத்தில் முழிப்பது?!

முகம் கழுவி, ஹாலுக்கு வந்தாள். ஒரு விதமான தயக்கத்தோடு இருந்தாள்.

குட்மார்னிங் மைதிலி! காஃபி சாப்பிடுறியா?

புன்னகையுடன், காஃபி கப்பை நீட்டினான்.

ம்ம்… இப்பதான் ஃபேஸ் கொஞ்சம் ஃப்ரெஸ்ஸா இருக்கு உனக்கு. இப்டியே இரு! அப்புறம், காஃபி குடிச்சிட்டு, குளிச்சி முடி. நான் டிஃபன் வாங்கிட்டு வந்திடுறேன். நைட்டே சாப்பிடலை. பசிக்குது!

இரவு நடந்த சங்கடங்களை, ராஜா பேச்சில் கொண்டே வராதது, அவளுக்கு இதமாக இருந்தது.

நான் ரெடி பண்றேன் ஏதாவது என்று எழுந்தாள்.

ம்கூம். நீ ஒழுங்கா காஃபி குடி. அப்புறம் ரெடியாகு. கொஞ்சம் வெளிய போற வேலை இருக்கு!

எங்க போகனும்?

சொன்னாத்தான் வருவியா? சிரித்துக் கொண்டே கேட்டவனை முறைத்தாள் மைதிலி!

சரி, போயி ரெடியாகு!

டிஃபன் சாப்பிட்டதும், மைதிலியை அழைத்துக் கொண்டு அவளுக்குப் பிடித்த, பெசண்ட் நகர் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். நீண்ட நேரம் கோவிலில் இருந்து விட்டு, அருகில் ஒரு நல்ல ஹோட்டலில் லஞ்ச்சையும் முடித்து விட்டு, மகாபலிபுரம் வரை ஒரு லாங் டிரைவ் சென்றோம். சினிமா, பாட்டு, அரசியல், ஆஃபிஸ், எங்களுடைய வீட்டு ஆட்கள் என்று பேச்சு பல பக்கம் சென்றாலும், மறந்தும், நாங்கள் ப்ரேம், ப்ரியாவைப் பற்றி பேசவேயில்லை!

வீடு திரும்பிய பொழுது மணி 5. உள்ளே, ரிலாக்சாக அமர்ந்தேன்.

அப்புறம் மைதிலி, லாங் ட்ரைவ் நல்லாயிருந்துதில்ல!

ம்ம்ம் ஆமா! கொஞ்சம் இருங்க வரேன். என்று கிச்சன் சென்றவள், இருவருக்கும் காஃபியுடன் வந்தமர்ந்தாள். ம்ம்… இப்பச் சொல்லுங்க.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super

Comments are closed.