உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 3 129

ப்ரேம் வேறு வழியில்லாமல் தலையாட்டினான். அவர்கள் நீட்டிய இடங்களில் கையெழுத்து போட்டான்.

எல்லா ஃபார்மாலிட்டியும் முடிய ஒண்ணு ரெண்டு மாசமாகிடும். ஏதாவது தேவைன்னா, நாங்க காண்டேக்ட் பண்றோம்.

அவர்கள் உடனே, மைதிலியும், அவள் அப்பாவும் கிளம்பினர்.

கிளம்பும் போது மைதிலி சொன்னாள், ப்ரியாவுக்கு விஷயம் சொல்றதுன்னா சொல்லிக்கோ! சொன்னா உனக்குதான் அசிங்கம்! ஆனா, நீ அவளுக்குச் சொன்ன அடுத்த நிமிஷம், ராஜாவுக்கும் இந்த ரிப்போர்ட் போயிடும்! எங்களுக்கு எப்பிடித் தெரியும்னு நினைக்காத. உனக்குத் தெரியாம இவ்ளோ செஞ்ச எங்களுக்கு அது தெரியாதா? ஆங், அப்புறம் சூசைட் கீசைட் பண்ணிக்கிறதா இருந்தாச் சொல்லிடு. எங்களுக்கும் அது ஓகேதான். ஆனா, அதுக்கெல்லாம் கொஞ்சம் சுய மரியாதை வேணும்! உனக்கு எங்க இருக்கு அது?

ப்ரேம், பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்தான். தொடர்ந்து விழுந்த அடிகள், அவனை அப்படியே புரட்டிப் போட்டிருந்தது.

அவனுக்குத் தெரியாது, அவனுக்கு இன்னும் கொஞ்சம் அடி பாக்கியிருக்கிறது என்று!

எல்லாரும் கோடம்பாக்கம் வீட்டிற்கு வந்தார்கள். வக்கீல் நடந்ததைச் சொன்னார். நாம எதிர்பர்த்ததை விடவே ஆளு பயந்துட்டான் சார். பிரச்சினை எதுவும் இருக்காது, கவலைப் படாதீங்க என்றார்.

சரி என்றாலும், டிடக்டிவ் ஆளிடம், இன்னும் முழுசா முடியுற வரைக்கும் அவனை ஃபாலோ பண்ணிகிட்டே இருங்க. டவுட் வர்ற மாதிரி எது இருந்தாலும் உடனேச் சொல்லுங்க. முக்கியமா, அவன் மைதிலியை நெருங்கக் கூடாது. பாத்துக்கோங்க! ஓகே சொல்லி, அவர்களை அனுப்பினான்.

மைதிலி அப்பா ஊருக்கு கிளம்புவதாகச் சொன்னார். நான் வலுக்கட்டாயமாக மறந்து விட்டேன். சும்மா இருங்க! இன்னிக்கு நீங்க ஊருக்குப் போக வேணாம். நாளைக்கு போயிக்கலாம்.

இல்லை தம்பி ஊர்ல வேலை நிறைய இருக்கு! அதான்…

வேலை என்னிக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனா, இந்த டைம்ல நீங்க மைதிலி கூட இருக்கிறதுதான் மைதில்லிக்கு சப்போர்ட்டா இருக்கும். போயி ரெஸ்ட் எடுங்க ப்ளீஸ்! கூட்டிட்டுப் போ மைதிலி!

மைதிலியும் அவளை அழைத்துச் சென்றாள். கொஞ்ச நேரம் கழித்து, மைதிலி மட்டும் ஹாலுக்கு வந்தாள். அவள் மிகச் சந்தோஷமாக இருந்தாள்! அவனிடம் செல்லமாக சண்டையிட்டாள்.

அதான், அப்பா ஊருக்குப் போறேன், வேலையிருக்குன்னு சொன்னாரில்ல, விட்டிருக்கலாம்ல? என்னமோ எல்லாம் தெரிஞ்சவராட்டம், ஆர்டர் போடுறாரு. அவள் வாய் சண்டையிட்டாலும், முகம் போய்க் கோபமிட்டிருந்தது.

இந்த ஒன்றரை மாதங்கள், இவர்கள் இன்னமும் நெருக்கமாயிருந்தார்கள். மைதிலியின் அப்பா கூட, என்னதான் நல்லவராய் இருந்தாலும், நெருங்கினவராய் இருந்தாலும், ராஜா வீட்டில், மைதிலி தனியாக இப்படி இருப்பது சரியல்ல என்று ஆரம்பத்தில் யோசித்தவர், போகப் போக, ராஜாவின் செயல்கள், ஒழுக்கம், புத்திசாலித்தனம், அவன் அருகில் சந்தோஷமாக இருக்கும் மகள், எப்பொழுதும் ஒழுங்கு தவறாத நடவடிக்கைகள் எல்லாம் அவர் மனதை மாற்றியிருந்தது.

அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்த விஷயம், ராஜா இருக்கும் போது, மைதிலியைப் பார்க்கும் போது, கல்யாணத்துக்கு முன் இருந்த மைதிலியைப் பார்ப்பது போலே இருந்தது அவருக்கு! அவருக்கு எதுவோ புரிந்தது. அதனால், அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை மட்டும் பார்த்தார். இத்தனைக்கும், அவர்கள் இருவரும் தங்கள் மனதில் என்ன இருந்தது என்பதைப் பற்றி பேசிக் கொள்ளக் கூட இல்லை!

இந்த நெருக்கம் தந்த உரிமையிலும், சந்தோஷத்திலும்தான் மைதிலி அவனிடம் விளையாடினாள்!

நேரந்தான்! நான், உனக்காக, உங்க அப்பாவை இருக்கச் சொன்னா, நீ என்கிட்டயே சண்டைக்கு வர்றியா?

நான் ஒண்ணும் பழைய மைதிலி இல்லை.

அப்புடியா? அப்புறம் ஏன் உங்க அப்பா, உன்னை இன்னும் பாப்பான்னு கூப்பிடுறாரு?

உங்களை என்று சிணுங்கியவள், கையிலிருந்த சிறிய பில்லோவை எடுத்து அவன் மேல் வீசினாள்!

இங்க வா என்று அழைத்தவன், அவள் அருகில் உட்கார்ந்தவுடன், அவள் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்தான். நான், அவரைப் போக வேணாம்னு சொன்னது, உனக்காக இல்லை. அவருக்காக.

அவருக்காகவா?

1 Comment

  1. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super
    Super super super super super super

Comments are closed.